பிரீமியம் ஸ்டோரி

மனதை அடக்க என்ன வழி?

னதைக் கட்டுப்படுத்த இரண்டு வழிகள் உண்டு. ஒன்று வெளிப்படை யானது. மற்றொன்று அந்தரங்கமானது.   

அறிவோம் ஆன்மிகம்

தர்மம், வழிபாடு-இறை ஆராதனைகள், யாகம் முதலானவை வெளிப் படையான சாதனங்கள். அந்தரங்க சாதனங்கள் ஐந்து. அவை: அகிம்சை, சத்தியம், திருடாமை, தூய்மை, புலனடக்கம்.

மனதை அன்பால் நிறைப்பதும் உயிர்களிடத்தில் அன்பை மட்டுமே வெளிப்படுத்துவதும் அகிம்சை.

மனம், வாக்கு, உடம்பு மூன்றையும் உண்மையின் வழியில் ஈடுபடுத்துவது சத்தியம். திருடாமை என்ன என்பது நாமறிந்தே. மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுவதும், அதைக் கவர்வதும் கூடாது.

உடலையும் உள்ளத்தை யும் தூய்மையாக வைத்துக்கொள்வது அடுத்த சாதனம்.

இவற்றுடன் புலனடக்கமும் மனதைக் கட்டுப்படுத்த வழிசெய்யும்.

துவாதச கணபதி தரிசனம்!

வே
லூர், சேண்பாக்கம் பிள்ளையார் கோயிலில் நாம் பன்னிரண்டு  கணபதி வடிவங்களைத் தரிசிக்கலாம்.

இந்தக் கோயிலில், செல்வ விநாயகர் என்ற பெயரில் லிங்க வடிவில்  காட்சியளிக்கிறார் பிள்ளையார்.

சுயம்பு லிங்க வடிவத்திலிருக்கும் செல்வ விநாயகரைச் சுற்றிலும்... பால விநாயகர், நடன  விநாயகர், ஓம்கார  விநாயகர், கற்பக  விநாயகர், சிந்தாமணி  விநாயகர், செல்வ  விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வில்வ விநாயகர், சித்தி - புத்தி விநாயகர், பஞ்சமுக  விநாயகர் எனப் பதினோரு லிங்க வடிவ விநாயகர்கள் காட்சி தருகிறார்கள்.

யந்த்ர வடிவில் சனீஸ்வரர்!

ஆர
ணியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலுள்ளது எரிகுப்பம் என்ற கிராமம். இங்கு சனீஸ்வர பகவான் யந்திர வடிவில் காட்சியளிக்கிறார். ஐந்தரை அடி உயரம், ஒன்றரை அடி அகல யந்திரத்தின் மீது சூரியன், சந்திரன் மற்றும் கீழே காகம் வரையப்பட்டிருக்க, அறுகோண வடிவில் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரருக்கு உரிய மந்திரங்கள் வலமிருந்து இடமாக எழுதப் பட்டுள்ளன. இந்த மந்திரங்களை நேரடியாக வாசிக்க இயலாது. கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் பார்த்துதான் வாசிக்க முடியும்.

குளியலின் வகைகள்...

நித்யம்: காலையில் குளிப்பது.
க்ரியாசனம்: புண்ணிய தீர்த்தங்களில் குளிப்பது.
காம்யம்: குளத்தில் குளிப்பது.
கிரியங்கம்: வழிபாடு செய்யுமுன் குளிப்பது.
மலாபகர்ஷணம்: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது.

திருக்கோயில் அற்புதங்கள்

கோ
யில்களில் பெரும்பாலும் வெண்கலம், பஞ்சலோகம், செம்பு அல்லது கல்லில் அமைக்கப்பட்ட மூர்த்தங்களே வழிபடப்படும். ஆனால், பூரி ஜகந்நாதர் கோயிலிலுள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரை ஆகியோரது மூர்த்தங்கள் மரத்தினால் செய்யப் பட்டவை.

மைமைசூருக்கு அருகேயுள்ளது  சாமராலு நகரம். இவ்வூரின் அருகே ஒரு மலையில் திகழும் பெருமாள் கோயிலில், சடாரிக்குப் பதில் இரண்டு அடிநீளம், ஓரடி அகலம் உடைய, தோலினால் செய்யப்பட்ட காலணியைத் தலை மீது வைத்து ஆசீர்வாதம் செய்கிறார்கள்.

ரிஷபாந்திக மூர்த்தியும் ரிஷபாரூடரும்

ந்தி பகவான் பின்புறத்திலோ அல்லது பக்கத்திலோ நின்றுகொண்டிருக்க, சிவபெருமான் தமது ஒரு திருக்கரத்தால் நந்தியைத் தொட்டுக் கொண்டு நிற்கும் நிலையில், அவர், ‘ரிஷபாந்திக மூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.

சிவபெருமான் பார்வதி தேவியுடன் ரிஷபத்தின்மீது அமர்ந்திருக்கும் நிலையில், அவர் ‘ரிஷபாரூடர்’ என்று அழைக்கப்படுகிறார்.

(ஸ்ரீதத்வநிதி எனும் சிற்ப நூலிலிருந்து)

துவார பாலகர்கள்

கோ
யில்களில் மூலவரின் கருவறைக்கு முன்பாக துவார பாலகர்கள் நின்றுகொண்டிருப் பார்கள். சிவன் கோயிலில் இருக்கும் துவார பாலகர்களுக்கு சண்டன் - பிரசண்டன் என்றும்; பெருமாள் கோயில்களில் இருக்கும் துவார பாலகர்களுக்கு ஜயன்- விஜயன் என்றும்; அம்பாள் சந்நிதிக்கு முன்பு இருக்கும் துவார பாலகிகளுக்கு ஹரபத்ரா - சுபத்ரா என்றும் பெயர்கள் வழங்கப் படுகின்றன.

தொகுப்பு: சி.வெற்றிவேல் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு