பிரீமியம் ஸ்டோரி

அட்சயதிரிதியை விழாக்கள் 

கல சௌபாக்கியங்களையும் தரும் `அட்சயதிரிதியை' திருநாள், கடந்த ஏப்ரல் 18-ம் தேதி கொண்டாடப்பட்டது. பல்வேறு ஆலயங்களில் லட்சுமி குபேர பூஜை, கனக தாரா யாகம் போன்றவை  நடைபெற்றன.   

விழாக்கள் விசேஷங்கள்!

கேரளாவின் காலடியில் திருக்காலடியப்பன் ஆலயத்தில் விஷ்ணுவுக்கும் திருமாலுக்கும் நெல்லிக்கனி அபிஷேகம் செய்விக்கப்பட்டது.
 
மதுரை சித்திரைத் திருவிழா

லகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 25-ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக வைபவமும், 26-ம் தேதி மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். 28-ம் தேதி தேர்த் திருவிழாவும், 30-ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந் தருளும் வைபவமும் நடைபெறவுள்ளன.

திருச்சானூர் வசந்தோற்சவம்

தி
ருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் திருக் கோயிலில், ஏப்ரல் 28 முதல் 30-ம் தேதி வரை வருடாந்திர வசந்தோற்சவ திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, ஏப்ரல் 24-ம் தேதி திருக்கோயிலைச் சுத்தம் செய்யும் திருப்பணி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தாயாரின் தரிசனம் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். வசந்தோற்சவ நாள்களில் ஊஞ்சல் சேவை, லட்சுமி பூஜை போன்ற வைபவங்கள் நடைபெறும்

ஸ்ரீநரசிம்ம ஜயந்தி

சி
த்திரை மாதம் சுவாதி நட்சத்திர நாளே ஸ்ரீநரசிம்ம ஜயந்தி திருநாள். ‘என் இறைவன் தூணிலுமிருப்பான்; சிறு துரும்பிலுமிருப்பான்’ என்று பிரகலாதன் சொன்னதுமே, பக்தனின் வார்த்தையைக் காப்பாற்ற தூணைப் பிளந்து தோன்றிய அவதாரம் ஸ்ரீநரசிம்மர்.

இவ்வருடம் 28.4.18 அன்று ஸ்ரீநரசிம்ம ஜயந்தி. இந்நாளில் நரசிம்மரை வழிபட, வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும்.

சித்திரா பெளர்ணமி

29.4.18
அன்று சித்திரா பௌர்ணமி திருநாள்; அம்பாள் வழிபாட்டுக்கு உகந்த தினம். இந்தத் திருநாளில் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். ஆற்று மணலெடுத்து இறைவனின் திருவடிவம் செய்து வழிபடுவதை, ‘திருவூறல்’ என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

சித்ரகுப்தன் அவதரித்ததும் இந்தத் திருநாளில்தான். இதையொட்டியே கண்ணகி வழிபாடு, கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ஆகியன நடைபெறும்.

திருவையாறு சப்தஸ்தான திருவிழா

பு
கழ்பெற்ற திருவையாறு சப்தஸ்தான திருவிழா வரும் மே-1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஏழூர்த் திருவிழா என்று கொண்டாடப்படும் இந்த விழாவில் திருவையாறு ஐயாறப்பர் இறைவியோடு திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திரு வேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஆறு ஊர்களைச் சுற்றிவிட்டு ஏழாவது ஊராக திருவையாறு திரும்புவார்.

கும்பாபிஷேகம்

தி
ருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் வரும் 27ம் தேதி காலை 9.30-10.30 மணிக்குள் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் மற்றும் ராஜகோபுரம், விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

தி
ருச்சி சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் திருவிழா கடந்த ஏப்ரல் 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 16-ம் தேதி வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தாள். மறு நாள் தேர்த் திருவிழா அற்புதமாக நடந்தேறியது.

தொகுப்பு: மு.வ. ஹரி காமராஜ்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு