தொடர்கள்
Published:Updated:

வினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்!

வினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்!

வினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்!

முருகப் பெருமானின் அவதாரத் திருநாளாம் வைகாசி விசாக நன்னாளில், அவரின் மகிமையைச் சொல்லும் சில திருத்தலங்களின் சிறப்புகளைத் தெரிந்துகொள்வோமா?

* கையில் தாமரை ஏந்திய முருகனை ஆவூர் தலத்தில் காணலாம். கனககிரி திருத்தலத்தில் முருகப் பெருமான், கிளி ஏந்திய நிலையில் தரிசனம் தருகிறார். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கையில் மாம்பழத்துடன் இருக்கும் வேலவனை தரிசிக்கலாம்.

கரூர் மாவட்டம் வெங்கமேடு ஆலயத்தில் வேலாயுதமும், தேவியர் இருவரும் இன்றி தனித்து அருளும் முருகப்பெருமானை தரிசிக்கலாம்.

வஜ்ராயுதம் ஏந்திய முருகனை சுவாமிமலை மற்றும் திருவிடைக்கழி ஆகிய தலங்களில் தரிசிக்கலாம்.

திருமயிலாடி, அனந்தமங்கலம், வில்லுடை யான்பட்டு, சாயக்காடு, திருக்கடவூர் மயானம் ஆகிய தலங்களில் வில்லுடன் காட்சி தருகிறார் முருகப் பெருமான். வில்- அம்பு ஏந்தி, வேட்டைக்குச் செல்வது போல் முருகன் காட்சி தரும் தலம் திருவையாறு.

வினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்!

செம்பனார்கோவிலில், ஜடா மகுடத்துடன்- தவக் கோலத்தில் அருள்புரிகிறார் முருகப்பெருமான். புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணூர் எனும் தலத்தில், ஜப மாலையுடனும், சின் முத்திரையுடன் காட்சி தருகிறார்.

திருச்சி- உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவ நாதர் கோயிலில், தனிச் சந்நிதி கொண்டிருக்கும் முருகப்பெருமான், ஆவுடையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

குடந்தையில் உள்ள வியாழ சோமநாதர் ஆலயத் தில்... காலில் பாதரட்சையுடன் காட்சி தருகிறார் கந்தப் பெருமான்.

நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள வேளிமலை குமாரகோவிலில், வள்ளிதேவியுடன் மட்டுமே காட்சி தருகிறார் முருகப் பெருமான்; அருகில் தெய்வானை இல்லை. முருகனுக்கும் வள்ளிக்கும் இடையே காதல்வேள்வி நடந்த இடம் என்பதால் இவ்வூருக்கு வேள்வி மலை என்றும் பெயர் உண்டு.

- நமசிவாயம், சென்னை-44