Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Published:Updated:
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

திருவாரூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
தி
ருமுதுகுன்றம், பழமலை என்று தேவார காலத்தில் அழைக்கப்பட்ட விருத்தாசலம், விழுப்புரம்- திருச்சி ரயில் பாதையில் உள்ளது. இங்கே, ஸ்ரீவிருத்தாம்பாள் (பெரிய நாயகி), பாலாம்பாள் (இளைய நாயகி) சமேதராக கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபழமலைநாதர்.

தல யாத்திரையாக இங்கு வந்த சுந்தரர், தன் இல்லாள் பரவையாருக்காக இறைவனிடம் பொன் வேண்டிப் பாடினார். இறைவனும் சுந்தரருக்கு பன்னிரண்டாயிரம் பொன்னை தந்தருளினார். நம்பியாரூரர் மகிழ்ந்து, ''தேவரீர் கொடுத்தருளிய இப்பொன் முழுவதையும் திருவாரூர் மக்கள் கண்டு வியப்படையும் வண்ணம் அங்கு வரச் செய்ய வேண்டும்'' என வேண்டினார். உடனே, ''சுந்தரா, இந்தப் பொற் குவியலை இங்குள்ள மணிமுத்தா நதியில் இட்டுப் பின்னர் திருவாரூர் கமலாலயக் குளத்தின் ஈசான்ய திக்கிலிருந்து எடுத்துக் கொள்'' என அசரீரி ஒலித்தது.

சுந்தரர், இறைவன் அளித்த பொன்னில் சிறிது மச்சம் (பொன் துண்டம்) வெட்டி வைத்துக் கொண்டு, (அதனை உரைத்துப் பார்த்து பத்தரைமாற்றுக்கு) சாட்சியாக முதுகுன்றத்தில் அருளும் விநாயகரிடம் காட்டினார். அவரும் பொன்னின் பத்தரை மாற்றை உறுதி செய்தார். அதனால்,  'மாற்றுரைத்த பிள்ளையார்’ எனப் பெயர் பெற்றார் (கோயிலின் அறுபத்துமூவர் பிராகாரத்தில் இவரைத் தரிசிக்கலாம்).

பிறகு, பொற்குவியலை மணிமுத்தா நதியில் இட்ட சுந்தரர், அங்கிருந்து புறப்பட்டு பல தலங்களைத் தரிசித்து, ஆரூரை அடைந்தார்.

பூங்கோயில் இறைவனை வழிபட்டு, பரவையார் திருமாளிகைக்கு வந்தார். பரவையாரிடம் நடந்ததை விவரித்து, பொற்குவியலை எடுத்துவர கமலாலயக் குளத்துக்கு வரும்படி அழைத்தார். அவரோ, ''இதென்ன அதிசயம்!'' என்று ஐயத்துடன் புன்முறுவல் பூத்தார். ''எம்முடைய நாதன் திருவருளால், இந்தக் குளத்திலிருந்து பொன் முழுவதையும் எடுத்து உனக்கு தருவேன். இது சத்தியம்!'' என்றார் சுந்தரர்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

பரவையாருடன் கமலாலயக் குளத்தை அடைந்த சுந்தரர், வடகீழ்புறம் கரையில் பரவையாரை இருக்கச் செய்துவிட்டு, குளத்தில் இறங்கினார். அன்று இட்டு எடுப்பவர்போல், குளத்தில் பொன்குவியலைத் தேடினார். ஆனால் சிவனார், சுந்தரரின் பாடலைப் பெற விரும்பி, திருவிளையாடல் புரிந்தார். சுந்தரர் வெகுநேரம் தேடியும் பொற்குவியல் கிடைக்கவில்லை. ''அன்பரே! ஆற்றில் போட்டு குளத்தில் தேடுகின்றீரோ? எப்படி சுவாமி கிடைக்கும்?'' என்று பரவை பரிகாசம் செய்தாள் (இந்த முதுமொழி அப்போது முதல் ஏற்பட் டது போலிருக்கிறது!) இதைக் கேட்டவன் தொண்டர், பழமலைநாதரை நினைத்துப் பதிகம் பாடினார்.

எட்டுப் பாடல்கள் பாடியும் பொருள் கிடைக்க வில்லை. பிறகு, 'ஏத்தா திருந்தறியேன் இமையோர் தனி நாயகனே...’ - என்ற 9-வது பாட்டை பாடியதும் பொற்குவியல் கிடைத்தது. அதை எடுத்து வந்து, முன்பு தான் மச்சம் வெட்டி எடுத்து வைத்திருந்த மாதிரியுடன், குளக்கரையில் இருந்த விநாயகர் சந்நிதியை நாடினார். பொற்குவியல் மாற்றுக் குறை வாக இருப்பதை விநாயகர் சுட்டிக் காட்ட, மீண்டும் சிவபிரானை துதித்தார் சுந்தரர். இறையனார் மாற்றுக்குறையாத பொற்குவியலை காட்டினார்!  

கமலாலயக் குளத்தின் வடகிழக்கு மூலையில் அருளும் விநாயகரின் உதவியால், சுந்தரர் பொன் உரைத்துப் பார்த்ததால், அந்த விநாயகரும் மாற்றுரைத்த விநாயகர் எனப் பெயர் பெற்றார். இவரது சிறு கோயிலின் மேற்புறத்தில், சுந்தரர் குளத்தில் பொன்னைத் தேடுவதும், விநாயகர் முன்பு மாற்று உரைத்துப் பார்ப்பதுமான காட்சிகள் சுதை வடிவில் உள்ளன. தியாகேசரைத் தரிசிக்க திருவாரூர் செல்லும் அன்பர்கள், மாற்றுரைத்த விநாயகரையும் வணங்கி திருவருள் பெறலாமே!

- பிள்ளையார் வருவார்...
  படங்கள்: இ.ராஜவிபீஷிகா