Published:Updated:

சிறப்பாக முடிந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்! ( படங்கள் )

சிறப்பாக முடிந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்! ( படங்கள் )
சிறப்பாக முடிந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்! ( படங்கள் )

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்து முடிந்தது.

சிறப்பாக முடிந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்! ( படங்கள் )

ஒவ்வொரு வருடமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முக்கியத்திருவிழாவான சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகுசிறப்பாக நடக்கும். அதேபோன்று இந்த வருடமும் சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிறப்பாக முடிந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்! ( படங்கள் )

இதில் முக்கிய நிகழ்வான மதுரை அரசியான மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் இன்று காலை 8.17லிருந்து, 8.41க்குள் சுப முகூர்த்ததில் நடந்தது.

சிறப்பாக முடிந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்! ( படங்கள் )

இதற்காக இன்று அதிகாலை 4 மணிக்கு, சுந்தரேஷ்வரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினர். நான்கு சித்திரை வீதிகளையும் வலம் வந்தனர். பின்னர் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, பின்னர் திருக்கல்யான மண்டபத்தில் எழுந்தருளினார்கள். பக்தர்களின் வாழ்த்துக்களோடு திருமணம் சிறப்பாக நடந்தது.

சிறப்பாக முடிந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்! ( படங்கள் )

மணமேடையில் எட்டு லட்ச ரூபாய் செலவில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கு பகதர்கள் பார்ப்பதற்கு வசதியாக பெரிய திரை தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இக்கல்யாணத்தை காண வந்த பகதர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருப்பதற்காக, 150 டன் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.

##~~##
இன்று இரவு, 7 மணிக்கு சுந்தரேஷ்வரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளையும் வலம் வருவார்கள்.
பகதர்களுக்கு 15 ஆயிரம் திருமாங்கல்ய கயிறுகளும், தண்ணீர் பாட்டில்களும் கோவில் நிர்வாகத்தால் இலவசமாக கொடுக்கப்பட்டன. அடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வரைக்கும் மதுரையில் மக்கள் விழாக்கோலம் பூண்டிருப்பார்கள்.
செ.சல்மான்
படங்கள்:
பா.காளிமுத்து