பிரீமியம் ஸ்டோரி

குமரியம்மன் கோயில் `வைகாசி' திருவிழா

ன்னியாகுமரி, ஸ்ரீபகவதியம்மன் கோயிலின் வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே 12-ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சியோடு தொடங்கியது. மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தக்கால், குமரியம்மனின் திருக்கோயில் கிழக்கு வாசலிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின்னர் முறைப்படிப் பூஜைகள் செய்விக்கப் பட்டு, திருக்கோயிலின்  வடக்கு வாசல் அருகில் நடப்பட்டது. மே 19-ம் தேதி கொடியேற்றமும், 27-ம் தேதி தேரோட்டமும், 28-ம் தேதி இரவு தெப்பத் திருவிழாவும் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

விழாக்கள் விசேஷங்கள்!

திருநள்ளாறு பிரமோற்சவ விழா

திருநள்ளாறில் உள்ள ஸ்ரீபிராணாம்பிகை சமேத ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலின் பிரமோற்சவ விழா, கடந்த மே 12-ம் தேதி கொடியேற்றத்தோடு தொடங்கியது. சனி தோஷ பரிகாரத் தலமாக விளங்கி வரும் இந்தக் கோயிலில், மே 18-ம் தேதி சமயக்குரவர் நால்வர் புஷ்ப பல்லக்கு உலாவும், 25-ம் தேதி காலை திருத்தேரோட்டமும், 26-ம் தேதி இரவு சனீஸ்வர பகவான் `தங்கக் காகம்' வாகனத்தில் உலாவும், 27-ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளன.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் கருடசேவை

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கடந்த மே 4-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் பெருமாளின் வீதிஉலா நடைபெற்றது. 10-ம் தேதி மாலை புறப்பாடும், 11-ம் தேதி இரவு அங்குரார்ப்பண விழாவும் நடைபெற்றன. பிரமோற்சவத்தின் சிறப்பு நிகழ்வான கருடசேவை வைபவம் மே 14 - ம் தேதி நடைபெற்றது.

கருடபகவானின் மீது கம்பீரமாக காட்சியளித்த வைகுண்ட பெருமாளை திரளான பக்தர்கள் சேவித்து மகிழ்ந்தனர்.

வைகாசி சஷ்டி விரதம்

ண்ணியவர்களுக்கு உடனே வந்து அபயம் அளிக்கும் ஆறுமுகப் பெருமான் அவதரித்த மாதம் வைகாசி. இந்த மாதத்தில் வரும் சஷ்டி நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கினால் இருமடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு வைகாசி சஷ்டி விரதம் சிறப்பானது. வினைகளை அறுக்க வேல் கொண்டு காக்கும் முருகனை இந்த நாளில் (4.6.18) கொண்டாடுவோம்.

ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுதர்சன மகாயாகம்

தென் அகோபிலம் என்று போற்றப்படும் தலம், விழுப்புரம் மாவட்டம்- பூவரசங்குப்பம். இங்குள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில், மே 22 -ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை (ஆறு நாள்களும் இரு வேளைகளில், 108 யாக குண்டங்களில்), ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுதர்சன மகாயாகம் ஒரு கோடி ஜபங்களுடன் நடைபெற உள்ளது.

200-வது சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த யாகத்தில் கலந்து கொள்வதால் வியாதி, கடன் தொல்லைகள் நீங்கும். குடும்பப் பிரச்னைகள் ஒழிந்து, எதிரிகள் தொல்லைகள் விலகும். திருமணத் தடை அகலும். புத்திரப் பாக்கியம் உண்டாகும்.

திருவாரூர் ஆழித்தேரோட்டம்

லகப்புகழ் பெற்ற திருவாரூர் `ஆழித்தேர்' திருவிழா, மே 27 அன்று நடைபெறுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான தேர் எனப்படும் இந்தத் தேரின் பிரமாண்டமும் அழகும் வியக்க வைப்பவை. `ஆருரா, தியாகேசா, அம்பலவாணா' என்ற கோஷங்களுக்கிடையே ஆடி அசைந்து வரும் தேரின் அழகினை, இந்தத் திருநாளில் சென்று தரிசித்து அருள்பெற்று வாருங்கள்.

வைகாசி விசாகம்

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் வரும் நாளே முருகப்பெருமானின் அவதாரத் திருநாள் எனப்படுகிறது. அன்று முருகப்பெருமானை வழிபடுவது, தீமைகளை அழித்து நன்மைகள் பெருக வழிவகுக்கும். இந்தத் திருநாளில், முரு கனின் கோயில்தோறும் பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் சிறப்பாகக் கொண்டாடுவர். இந்த தினத்தில் வீட்டில் முருகப் பெருமானுக்குச் சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால், எண்ணிய காரியங்கள் ஈடேறும்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

ரும் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய நாள்களில் சபரிமலையில் ஐயப்பனை பிரதிஷ்டை செய்த தினத்தை முன்னிட்டு,  சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறவுள்ளன.

விழாக்கள் விசேஷங்கள்!

திருவண்ணாமலை கிரிவலம்

மே மாதம் 28-ம் தேதி திங்கள்கிழமை இரவு 7.35 மணி முதல் 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி வரை கிரிவலம் வரும் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைகாசி மாத கிரிவலம் பக்தர்களுக்கு சோமாஸ்கந்தரின் திருவருளைப் பெற்றுத் தரும்.

தொகுப்பு : மு.வ.ஹரி காமராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு