பிரீமியம் ஸ்டோரி

சிவபக்தரின் பாடல் !

சிவ பக்தரும் கவிஞருமாகிய கோபாலகிருஷ்ண பாரதி, பரமன் அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் விவரித்து பாடியுள்ளார். அந்தப் பாடல்...

ஆன்மிக துளிகள்

பல்லவி

தந்தை தாயிருந்தால்
உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ ஐயா

சரணம் 
  
கல்லால் ஒருவன் கடிந்
தடிக்க உடல்பதைக்கக்
காலின் செருப்பால்
ஒரு வேடன் அதிர்த் துதைக்க
வில்லால் ஒருவன் வந்தடிக்க
உமது திருமேனி என்னமாய்
நொந்ததோ ஐயா ஒரு    (தந்தை)

கூசாமலிடையன் கைக்
கோடரியால் வெட்டக்
கூட்டத்தில் ஒருவன் பித்தா
பேயா எனத் திட்ட
வீசி மதுரை மாறன்
பிரம்பாலடிக்க அந்த 
வேளை யாரை நினைத்தீரோ
ஐயா ஒரு    (தந்தை)

சீலமில்லாதொரு பெண்
காறியுமிழ லாச்சே
சேர்ந்தவளும் தலை மீதேற
எளிதாய்ப் போச்சே
பாலக்கிருஷ்ணன் இதைப்
பார்க்கும்படி யாச்சே
பாருலகி லெங்கணும்
பார்க்கில் இதுவே பேச்சே (தந்தை)

அடிதான் கொடுத்தார்!

ஓர் இலக்கியக் கூட்டம்.

அது முடிந்ததும் சிறு விருந்து அளிக்கப்பட்டது. சிற்றுண்டியுடன் ஆளுக்கொரு நேந்திரம் பழமும் வைக்கப்பட்டது.

தமிழாசிரியர் ஒருவர் தமக்கு வைத்த பழத்தைப் பாதியாக ஒடித்து, ஒரு பாதியை மகாலிங்கம் என்ற  தமிழாசிரியருக்குக் கொடுத்தார். அதைக் கண்ட கி.வா.ஜ. அவர்கள், “சொக்கலிங்கத்துக்குப் `பிட்டு' கொடுப்பார்கள். நீங்கள் மகா லிங்கத்துக்குப் பிட்டுக் (பழத்தைப்  பிட்டு) கொடுக்கிறீர்களே!” என்றார்.

உடனே மகாலிங்கம், “அடி கொடுக்காமல் இருந்தால் சரி”  என்றார். கி.வா.ஜ. அவர்களோ,

“அவர் அடிதானே கொடுத் திருக்கிறார்?” என்றார் (அடி- அடிப்பாகம்). பழத்தின் காம்பு உள்ள  பகுதியைத்தான் அந்த ஆசிரியர்  கொடுத்திருந்தார்!

சும்மா இருத்தல்!

`அரிது அரிது சும்மா இருத்தல் அரிது' என்று தாயுமானவ சுவாமிகள்  பாடியுள்ளார். சும்மா இருத்தல்  என்றால் என்ன?

`சும்மா' என்பதற்கு `செயலின்றி' என்பது பொருள். மனம், வாக்கு, காயம் என்ற மூன்றும் நினைப்பு, உரை, செயல் ஆகியன அடங்கி, கருவி, கரணம், கழன்ற நிலை அது.  ரமணர், ராமகிருஷ்ணர் போன்றோர் அப்படியிருந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு