Published:Updated:

ஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...

ஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: க.சதீஷ்குமார்

ஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: க.சதீஷ்குமார்

Published:Updated:
ஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...

ஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரின் கடைசிக் காலத்திலிருந்து ரகுநாத நாயக்கர்

ஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...

காலம் வரை மூன்று மன்னர் களின் அமைச்சராகவும், ராஜகுருவாகவும் புகழ்பெற்று விளங்கியவர் கோவிந்த தீட்சிதர். புனிதத்துவம் வாய்ந்த தலங்களில் வேத விற்பன் னர்களைக் குடியேற்றி, மக்களின் நன்மைக்காக யாகங்கள் செய்து வரச் செய்த பெருமைக்கு உரியவர் கோவிந்த தீட்சிதர்.

வேதவிற்பன்னர்களுக்காக பல ஏக்கர் கணக் கில் நிலங்களையும் ஊர்களையும் மானிய மாகவும் வழங்கினார். அந்த வகையில், வேதவிற் பன்னர்களுக்குக் கோவிந்த தீட்சிதர் மானியமாக வழங்கிய ஊர்களில் ஒன்று, காவிரியின் கிளை ஆறான வீரசோழன் ஆற்றின் கரையில் அமைந் திருக்கிறது.

1814 முதல் 1857-ம் ஆண்டு வரை காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இருந்த சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், கோவிந்த தீட்சிதரின் வம்சத்தில் வந்தவர்தான். இந்த ஊருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. நடமாடும் தெய்வமாக பக்தர்களால் போற்றப்பட்ட காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்த ஊருக்கு விஜயம் செய்திருக்கிறார் என்பதுதான் அந்தச் சிறப்பு.

மகா ஸ்வாமிகள் ஊர்மக்களுக்கு ஆசியுரை வழங் கியபோது, ‘உலகத்துக்கு உணவு படைக்கும் உன்னதமான தொழிலை விட்டுவிடாமல் செய்து வாருங்கள். சுத்தமான காற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையும் இங்குதான் கிடைக்கும். உயிர்களுக்கு  உணவு படைப்பதும் இறைப்பணிதான்’ என்று அருளினாராம். அன்று அவர் அறிவுறுத்தியபடியே, இன்றைக்கும் பல தலைமுறைகளைக் கடந்தும், இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் தங்களை விவசாயத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பதை நம்மால் நேரில் காணமுடிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்த கிராமத் துக்கு விஜயம் செய்ததன் நினைவாக, கிராமத்தின் நடுவில் அமைந்திருக்கும் ஸ்ரீபிரசன்ன மகாகணபதி ஆலயத்தில், மகா ஸ்வாமிகள் தனிச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கிறார்.

இப்படியான மகத்துவங்கள் நிறைந்த தலம் எது, எங்கே இருக்கிறது என்று அறியும் ஆவல் உங்களுக்குள் எழுகிறதுதானே? வாருங்கள்...  இந்த ஊரைப் பற்றி மட்டுமல்ல, இவ்வூரில் திருப்பணிக் காகக் காத்திருக்கும் சிவாலயத்தின் நிலையையும் நாம் அவசியம் அறிந்தாகவேண்டும்.

கந்தமங்கலம் சிவாலயம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை - கோமல் சாலையிலுள்ளது கந்தமங்கலம். ஊரின் எல்லை யிலேயே அமைந்திருக்கிறது, அருள்மிகு கயிலாச நாதர் திருக்கோயில்.

மக்கள் தினமும் கோயில்களுக்குச் செல்ல வேண்டும்; இறைவனை மனமுருக வழிபட வேண் டும்; அதன் காரணமாக அவர்களின் வாழ்க்கை செழிக்கவேண்டும் என்பதற்காகவே, ஊர்தோறும் ஆலயம் எழுப்பினார்கள் மன்னர்கள். அந்த ஆலயங்களில் நித்திய பூஜைகள் நடைபெற மானியங்களையும் வழங்கினார்கள். காலப்போக்கில் அவற்றில் பல ஆலயங்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்திருக்கும் அவலத்தையும் நாம் பல ஊர்களில் பார்க்க நேரிடுகிறது.

அதே தருணத்தில், மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, தங்கள் ஊரில் சிதிலமடைந்துபோன ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்து, பொலிவு பெறச் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதையும் பல ஊர்களில் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால், சில கோயில்களில் திருப்பணி கள் தொடங்கப்பட்டு, பல வருடங்கள் சென்றும் அது நிறைவடையாமல் இருக்கும் நிலையைக் காண நேரிடும்போதுதான், மனதில் அளவற்ற வேதனை ஏற்படுகிறது.

அப்படித்தான் கந்தமங்கலம் என்ற இந்த ஊரிலும், அருள்மிகு சௌந்தரநாயகி சமேத அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் திருப் பணிகள் தொடங்கப்பட்டு பல வருடங்களாகியும், திருப்பணிகள் பூர்த்தியாகாமல் பாதியிலேயே நிற்பதாக அன்பர் ஒருவர் தெரிவித்தார். மகான்கள் போற்றிய க்ஷேத்திரத்தில், மகேசனின் ஆலயத்தில் திருப்பணிகள் தடைப்பட்டுக் கிடப்பதை அறிந்து, வேதனையுற்றோம். அந்த ஆலயத்தைப் பற்றி ‘சக்தி விகடன்’ வாசகர்களுக்குத் தெரிவிக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட, உடனே நாம் கந்தமங்கலத்துக்குச் சென்றோம்.

ஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...

கொட்டகைக்குள் குடியிருக்கும் தெய்வங்கள்!

வெட்டவெளியில் ஒரு சிறிய கோபுரம் மற்றும் மண்டபத்துடன் காணப்படும் கோயிலில் ஏகாந்தமாக வீற்றிருக்கிறார் ஐயன் கயிலாச நாதர். மற்ற தெய்வ மூர்த்தங்கள் எதுவும் கோயிலில் இல்லை.
நமக்குத் தகவல் தெரிவித்த மணிகண்டனிடம், ‘`இந்தக் கோயிலில் வேறு தெய்வ மூர்த்தங்கள் இல்லையா?’’ என்று கேட்டோம்.

எதுவும் சொல்லாமல் கோயிலுக்குச் சற்றுத் தொலைவிலிருந்த ஒரு கொட்டகைக்கு நம்மை அழைத்துச் சென்றார். கொட்டகையைத் திறந்து காட்டினார். உள்ளே அம்பிகை, விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்ற தெய்வ மூர்த்தங்கள் காட்சி தந்தனர். பைரவரின் நாய் வாகனம் சுமார் ஓரடி உயரத்தில் திகழ, பைரவரோ நான்கரை அடி உயரத்தில் கம்பீரமாக, கருணை பொழியும் திருமுகத்துடன் காட்சி தருகிறார்.

நித்திய பூஜைகள் இல்லாத நிலையிலும், தம்மை தரிசிக்கும் பக்தர்களின் பிரார்த்தனைகளை பைரவர் நிறைவேற்றுகிறார் என்று மணிகண்டன் தெரிவித்தபோது, நம்மையுமறியாமல் நம் கரங்கள் குவிந்து வணங்கின அந்தப் பைரவரை. அவரின் கருணைத் திறம் கண்டு, நமக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

கூடவே, ‘திருப்பணிகள் பாதியில் தடைப்பட்டு நிற்கும் பரமனின் திருக்கோயில் திருப்பணிகள் விரைவில் நிறைவேறி கும்பாபிஷேகம் காண வேண்டும். கொட்டகையில் காட்சி தரும் தெய்வ மூர்த்தங்கள் கோயிலில் குடியேறவேண்டும். தலத் தின் விசேஷ மூர்த்தியான பைரவரும் கோயிலில் தனிச்சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தேய் பிறை அஷ்டமிகளில் அவருக்கு முறைப்படி பூஜைகள் நடைபெறவேண்டும். இதற்கெல்லாம் ஐயனே, நின் திருவருள்தான் வழிநடத்த வேண்டும்’ என்று மனதுக்குள் பிரார்த்தனையும் செய்து கொண்டோம்.

ஐயன் கயிலாசநாதர் கோயில் மட்டுமல்ல, கந்த மங்கலம் ஊரும் பிரசித்திப்பெற்றது. காவிரியின் கிளை ஆறான வீரசோழன் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கந்தமங்கலத்தில், அருள்மிகு கயிலாசநாதர் சுயம்புவாகத் தோன்றியவர் என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள்.

 ஆனாலும் அவர்களுக்கு ஆலயத்தின் முழுமை யான வரலாறு தெரியவில்லை. அதனால் என்ன... நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்று  சொல்வார்கள். அதேபோல், கோயிலின் வரலாறு தெரியவில்லையென்றாலும், பார்த்தமாத்திரத் திலேயே தன் தொன்மைச் சிறப்பை உணர்த்தும் இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்துவிடவேண்டும் என்று விரும்பினார்கள் ஊர்மக்கள்.

ஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...

அதன்படி, 2004-ம் வருடம் அரசின் அனுமதி பெற்று, ஆலயத் திருப்பணிகளைத் தொடங்கியிருக் கிறார்கள். ஆனால், சோதனையாக 13 வருடங்கள் கடந்தும், இன்னமும் திருப்பணிகள் முடிவடைய வில்லை என்பதை அறிந்தபோது, மிகவும் வருந்தினோம்.

ஒருநாள் தரிசிக்கச் சென்ற நமக்கே இப்படியென் றால், திருக்கோயில் திருப்பணிகள் தடைப்பட்டு நிற்பதை அனுதினமும் காணும் ஊர்மக்களின் வேதனை எந்த அளவுக்கு இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

‘எங்களுக்கென்று எதுவும் வேண்டாம். ஐயனே, எங்களுக்கு அருள்புரிவதற்கென்றே எப்போதோ இங்கே நீ குடிகொண்ட கோயில் மறுபடியும் புதுப்பொலிவு பெறவேண்டும். புதிய ஆலயத்தில் நித்திய பூஜைகளும் விழாக்களும் தவறாமல் நடைபெறவேண்டும்; அதைக் கண்டு நாங்கள் உள்ளம் பூரிக்கவேண்டும்’

இதுதான் இந்த ஊர்மக்களின் தினப்படி வேண்டுதலாக இருக்கிறது. அவர்களது பிரார்த் தனை விரைவில் நிறைவேறவேண்டும் என்பதே நம்முடைய பிரார்த்தனை.

ஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...

இறைவனிடம் நாம் செய்யும் பிரார்த்தனை, சாத்தியமில்லாத விஷயங்களையும் சாத்தியப் படுத்தும்தான். அதேநேரம், பிரார்த்தனையோடு நம்முடைய பிரயத்தனமும் சேரவேண்டும்.

கந்தமங்கலம் ஊர்மக்களோடு நாமும் ஒன்றி ணைவோம். அவர்களின் முயற்சிக்கு உறுதுணை புரிவோம். திருக்கோயிலின் திருப்பணிகள் தங்கு தடையின்றி தொடரவும், பணிகள் நிறைவுபெற்று கும்பாபிஷேகம் நடைபெறவும், திருக்கோயிலில் நித்திய பூஜைகளும் விழாக்களும் நடைபெறவும் நம்மால் இயன்ற நிதியுதவியை வழங்குவோம்.

நாம் பங்களிப்பதோடு, நம் உற்றார் உறவினர் களிடமும், இறையன்பர்களிடமும் இந்தச் சிவாலயத்தின் மகிமையையும், இங்கு  திருப்பணி செய்யவேண்டிய அவசியத்தையும் எடுத்துச் சொல்லி, அவர்களையும்  பங்களிக்கச் செய்வோம்.அதனால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் அளவற்ற நன்மைகளும் மேலான புண்ணியமும் கிடைக்கும்.

நல்ல பணிகளை, ‘நாளை’ என்று தள்ளிப் போடாமல் இன்றே இப்போதே செய்வோம். கந்தமங்கலம் கயிலைநாதனின் திருவருளுக்குப் பாத்திரர்களாவோம்.

எப்படிச் செல்வது..?:

மயிலாடுதுறை - கோமல் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவிலுள்ளது கந்தமங்கலம். மயிலாடு துறையிலிருந்து கந்தமங்கலத்துக்கு நகரப் பேருந்து வசதி உள்ளது.

தொடர்புக்கு:

ராமநாதன் (98843 86412);
சர்மா (98841 74409)

வங்கிக் கணக்கு விவரம்:

Name: Ramanathan v Selvakumar A
A/c No. 0966101026788
Bank name: Canara Bank
Branch: Manganallur
IFSC Code: CNRB0000966