Published:Updated:

கோவில் தேர் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி (படங்கள்)

கோவில் தேர் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி (படங்கள்)
கோவில் தேர் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி (படங்கள்)
கோவில் தேர் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி (படங்கள்)

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தேர் சக்கரத்தில் சிக்கி 6 வயது சிறுமி பரிதாமாக உயிரிழந்தாள்.

சித்திரை மாத பிரமோற்சவ திருவிழாவையொட்டி தினமும் இரவு 4 ராஜவீதியிலும் சுவாமி வீதிஉலா நடந்து வருகிறது.

அதேபோன்று நேற்று இரவு சுவாமி மரத்தாலான யானை வாகனத்தின் மீது அமர்ந்து வீதி உலா வந்தது.

செங்கழு நீரோடை வீதியில் வந்தபோது அங்கு பக்தர் கூடத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய முயன்ற ராஜேஷ் என்பவரது  மகள் கல்பீஷா எதிர்பாரதவிதமாக அதன் சக்கரத்தில் சிக்கினாள். இதில் அதன் சக்கரம் கல்பீஷாவின் உடலில் ஏறி இறங்கியது.

கோவில் தேர் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி (படங்கள்)

பலத்த காயமடைந்த அவளை உடனடியாக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். மேற்சிகிசைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கல்பீஷா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தாள்.

பெரிய காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

எஸ்.கிருபாகரன்