தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

கேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 6

கேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 6
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 6

கேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 6

மதிப்புக்குரிய வாசகியரே!

ங்களுக்காகவே இந்தச் சிறப்புப் போட்டி! இங்கே கேட்கப்பட்டி ருக்கும் மூன்று கேள்விகளுக்கும் நீங்கள் விடையளிக்கவேண்டும். நீங்கள், இந்த இதழை முழுமையாகப் படித்து மகிழ்வீர்கள் என்பது தெரியும். அப்படி கட்டுரைகள், துணுக்குகள் என ஒவ்வொன்றையும் ஆழ்ந்து படித்தீர்கள் எனில், இங்குள்ள கேள்விகளுக்கு மிக எளிதாக நீங்கள் விடையளிக்கலாம். ஆம், இவற்றுக்கான பதில்கள் இந்த இதழிலேயே இடம்பெற்றிருக்கின்றன.

1. திருப்பாற்கடலுக்கு நிகராகப் போற்றப்படும் பிராகாரத்தைக் கொண்ட திருத்தலம் எது?

2. மன்மதனுக்குச் சிவனருள் கிடைத்த க்ஷேத்திரம் எது?

3. ‘அம்பாபுரி’ எனும் சிறப்புப் பெயர் கொண்ட ஊர் எது?


விடைகளை இங்குள்ள கட்டத்தில் பூர்த்தி செய்வதுடன், முதல் கேள்விக்கு விடையாகக் கிடைக்கும் தலத்தின் மகிமை குறித்த சிறப்புத் தகவல் ஒன்றை ஓரிரு வரிகளில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். (ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம்). சரியான விடையுடன் திருத்தலம் குறித்துக் கச்சிதமாகத் தகவல் அனுப்பும் பத்து வாசகியருக்கு, சிறப்புப் புடவைப் பரிசு காத்திருக்கிறது.

கேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 6

விடைகள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி: 28.6.18. விடைகளைச் சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

`புடவை பரிசுப்போட்டி-6’ - சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002

புடவைப் பரிசுப் போட்டி:4

விடை: 1. சுந்தரர், 2. சாக்கியர், 3. அர்ஜுனன்

வெற்றி பெற்றவர்கள்

1. ராஜநந்தினி ராம், மதுரை
2. அ.பத்மா, சென்னை
3. ஜி.வி.சாருமதி, ஈரோடு
4. சத்யபாமா, காஞ்சிபுரம்
5. ஆ.செல்வராணி, திருப்பத்தூர்
6. எம்.புஷ்பவல்லி, கடலூர்
7. ப.ஜெயந்தி, மதுரை
8. ம.சுவேதா, சிக்கல்
9. வெ.திவ்யா, திருச்சி
10. ஆர்.இந்துமதி, புதுச்சேரி