Published:Updated:

இன்று 11 மணிக்கு கள்ளழகரின் தசாவதாரம்!

இன்று 11 மணிக்கு கள்ளழகரின் தசாவதாரம்!
இன்று 11 மணிக்கு கள்ளழகரின் தசாவதாரம்!
இன்று 11 மணிக்கு கள்ளழகரின் தசாவதாரம்!

மதுரை : இன்று காலை 6 மணிக்கு திருமஞ்சனமாகிய கள்ளழகர், இரவு 11 மணிக்கு மேல், தசாவதாரம் நடத்துகிறார். நாளை காலை மோகனவதாரத்தில் வீதி உலா வருகிறார் அழகர்.

கள்ளழகரின் மதுரை வருகையால், மகிழ்ச்சியில் திளைக்கும் மக்களை இன்னும் மகிழ்விக்க மாலை நேரத்தில் மழையும் பொழிந்து குளிர்விப்பதால், மதுரை மாநகரமே சொர்க்கலோகம் போலிருக்கிறது. நேற்று காலை 7.31 மணிக்கு நல்ல நேரத்தில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர், அங்கிருந்த மண்டபத்தில் எழுந்தருளி, ஒரு மணி நேரம் மக்களுக்கு அருள் வழங்கினார். பக்தர்களின் தீப ஆராதனையை ஏற்றுக்கொண்டவர் பின்பு அங்கிருந்து கிளம்பி ராமராயர் மண்டபத்திற்கு சென்றார்.

அங்கு 12 மணிக்கு பக்தர்களுக்கு அருள்பாலித்த அழகர், பக்தர்களின் அங்கபிரதட்சனத்தை ஏற்றுக்கொண்டார். அதன் பின்பு பக்தர்கள் அழகரை குளிர்விக்க தீர்த்தவாரி செய்தனர். அங்கிருந்து இரவு 9 மணிக்கு வண்டியூருக்கு கிளம்பிய அழகர், வீரராகவப்பெருமாள் கோயிலில் எழுந்தருளினார்.

நேற்றிரவு சந்திர கிரகணம் என்பதால், கோயில் நடை சாத்தப்பட்டதால், பக்தர்களின் தரிசனம் நிறுத்தப்பட்டது.  சந்திர கிரகணம் முடிந்தபின் மீண்டும் சிறப்பு பூஜைகள் தொடர்ந்தன.

##~~##
இன்று காலை 6 மணிக்கு கள்ளழகர் திருமஞ்சனமாகி,  ஏகாந்த நிலையில் கோயிலில் பக்தி உலா வந்தார். பின் பக்தர்களுக்கு அருள் பாலித்தவர், 9 மணிக்கு கிளம்பி தேனூர் மண்டபத்திற்கு சென்றார். இன்று மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார்.
பிற்பகல் 3 மணிக்கு அனுமார் கோயிலுக்கு செல்கிறார். அங்கு பக்தர்களை சந்தித்துவிட்டு, மீண்டும் ராமராயர் மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு இரவு 11 மணிக்கு மேல், தசாவதாரம் நடத்துகிறார்.  முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராமர், கிருஷ்ண அவதாரம் உட்பட பத்து அவதாரங்களில் தோன்றுகிறார் அழகர்.
 
இன்றைய நிகழ்வில் அனைத்தையும் முடித்துவிட்டு, நாளை காலை மோகனவதாரத்தில் வீதி உலா கிளம்புகிறார்.

செ.சல்மான்
படம்:
பா.காளிமுத்து