Published:Updated:

வலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்!

வலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்!
பிரீமியம் ஸ்டோரி
வலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்!

தி.ஜெயபிரகாஷ், படங்கள்: ல.அகிலன்

வலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்!

தி.ஜெயபிரகாஷ், படங்கள்: ல.அகிலன்

Published:Updated:
வலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்!
பிரீமியம் ஸ்டோரி
வலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்!

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில், சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது, அருள்மிகு வலுப்பூரம்மன் கோயில். வலிப்புநோயால் பாதிக்கப்பட்ட அன்பர்களுக்கு, அந்த நோய் நீங்க வரம் கிடைக்கிறது, இந்த அன்னையின் சந்நிதானத்தில்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ தேசத்தை ஆண்டு வந்த விக்கிரமச் சோழ மகாராஜாவின் மகள் மைக்குழலாள் என்பவளுக்கு உடலில் வலிப்புநோய் உண்டாகியது. பிணியால் மிகவும் அவதியுற்று வந்தவளுக்கு, வைத்தியர்கள் பலர் சிகிச்சையளித்துப் பார்த்தார்கள்.  ஆனாலும் எந்த வைத்தியத்துக்கும் நோய் கட்டுப்படவில்லை.

வலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்!

இந்த நிலையில், கொங்குநாட்டில் இருக்கும் `மேலைச் சிதம்பரம்’ என்ற ஊருக்கு மகளை அழைத்துச் சென்றால் வலிப்பைக் குணமாக் கிக் கூட்டி வரலாம் என்றனர் அனுபவம் வாய்ந்த சில பண்டிதர்கள்.
அவ்வண்ணமே படை பரிவாரங்கள் சூழ, தன் மகளை அழைத்துக் கொண்டு கொங்குநாட்டை நோக்கிக் கிளம்பினார் மகாராஜா.

கனவில் வந்தாள்... கட்டளையிட்டாள்!

கொங்கு நாட்டை அடைந்ததும், வானவஞ்சேரி கிராமத்தில் விக்கிரம சோழ மகாராஜா தங்கியிருந்தார். அன்றிரவில் அவரின் கனவில் ஒரு பெண் உருவம் தோன்றி, “இவ்வூரில் உள்ள வேட்கோவரிடம் சென்று திருநீறு வாங்கி மகளுக்குப் பூசிவிடு” என்று கட்டளையிட்டு மறைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்!

அடுத்தநாள் அவ்வண்ணமே செய்தார் மகாராஜா. விளைவு, தீராத வலிப்பு நோய் முற்றிலுமாகக் குணமடைந்தது. அந்த இடத்திலேயே பச்சை மண் பிடித்து அம்மன் திருவடிவத்தைச் செய்து பிரதிஷ்டை செய்தார். வலிப்பு நோய் நீக்கியவளுக்கு `வலுப்பூரம்மன்’ எனப் பெயரிட்டு மனமுருகி வணங்கினார். இதுதான் வாமனஞ்சேரியில் கோயில் கொண்ட வலுப்பூரம்மனின் வரலாறு.

அழகுற அமைந்திருக்கிறது வலுப்பூரம்மனின் ஆலயம். திருக்கோயில் முன்மண்டபத்தின் வலப் புறம் கன்னிமாரும், இடப்புறம் விநாயகரும் அருள்காட்சி தருகிறார்கள். வெளிப் பிராகாரத்தின் இடப்புறம்  கருப்பராயனும், பேச்சியம்மனும் அருள்பாலிக்கிறார்கள். கருப்பனின் குதிரை வாகனங்கள் கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன.

திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அதிகம் கிடா வெட்டு வைபவங் கள் நடத்தும் திருக்கோயிலாக வலுப்பூரம்மன் கோயில் திகழ்கிறது. ஞாயிறு மற்றும் புதன்கிழமை களில் வலுப்பூரம் மனுக்கு பொங்கல் வைத்து, கருப்ப ராயனுக்குப் படைய லிட்டு, கிடா வெட்டி பூசை செய்கிறார்கள். ஆடி 18 - விழாவும் , தை மாதத் தேர் திருவிழாவும் இந்தக் கோயிலில் வெகு சிறப்பாக நடை பெறுகிறது. பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அம்மனுக்குச் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன.

வலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்!

பிணிகள் நீங்கும் வேண்டுதல்கள் நிறைவேறும்!

உடல் அங்கங்களில் ஏற்படும் வலிப்பு, அக்கி உள்ளிட்ட பல பிணிகள் தீர வேண்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டுச் செல்கிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள், உருவாரங்கள் செய்துகொண்டு வந்து திருக்கோயில் வளாகத்தில் வைத்துவிட்டுச் செல்வதை வழக்கமாக்கியுள்ளனர்.

மேலும் திருமணத்தடை நீங்கவும், குழந்தைப் பேறு அடைய வேண்டியும் வரும் பக்தர்கள், திருக்கோயிலின் முன்பாக அமைந் துள்ள ஆலமரத்தின் கிளைகளிலும், அம்மன் ஊஞ்சலிலும் தொட் டில், தாலிக் கயிறு மற்றும் வளையல்களை அணிவித்துவிட்டுச் செல்கின்றனர்.

வலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்!

எப்படிச் செல்வது?: திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில், (பெருந்தொழுவு என்ற பகுதி வழியாக) வலுப்பூரம்மன் கோயிலை அடையலாம். அலகுமலை முருகன் கோயிலிலிருந்து
3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism