Published:Updated:

ஸ்ரீலலிதாம்பிகை திருக்கல்யாணம்!

ஸ்ரீலலிதாம்பிகை திருக்கல்யாணம்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீலலிதாம்பிகை திருக்கல்யாணம்!

ஸ்ரீலலிதாம்பிகை திருக்கல்யாணம்!

ஸ்ரீலலிதாம்பிகை திருக்கல்யாணம்!

ஸ்ரீலலிதாம்பிகை திருக்கல்யாணம்!

Published:Updated:
ஸ்ரீலலிதாம்பிகை திருக்கல்யாணம்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீலலிதாம்பிகை திருக்கல்யாணம்!

கோவை - பெரிய தடாகம் பகுதியில், அனுவாவி ஸ்ரீசுப்ரமணியர் கோயில் அமைந்திருக்கும் மலையின் அடிவாரத்தில் உள்ளது ஸ்ரீலலிதாம்பிகை கோயில். இது, ஸ்ரீலலிதாம்பிகை பீடம் என்று கொங்கு மண்டலம் முழுக்க புகழ் பெற்று விளங்குகிறது.

பண்டகாசுரனை வதம் செய்யவேண்டும் எனும் பிரார்த்தனையுடன், தேவர்கள் அனைவரும் கூடி யாகம் நடத்தி அம்பிகையைத் துதித்தனர். அக்னிச் சுடரில் ஆயிரம் கோடி சூரியப் பிரகாசமாக ஸ்ரீலலிதாம்பிகை வடிவாக அன்னை தோன்றினாள். கன்னிகையான ஸ்ரீலலிதாம்பிகை அசுரனை அழிக்க இயலாது என்பதால், ஈசனை வேண்டிக்கொள்கிறார்கள் தேவர்கள்.

ஸ்ரீலலிதாம்பிகை திருக்கல்யாணம்!

ஈசனும் காமேஸ்வரனாக, பேரழகு ரூபமாக தேவர்களுக்குக் காட்சி தந்தார். தேவர்களின் விருப்பப்படி சிவசக்தி திருமணம் முடிந்ததும் அன்னை லலிதாம்பிகை பண்டகாசுரனை சம்ஹாரம் செய்தாள். அதன் பின்னர் ஸ்ரீலலிதா காமேஸ்வர தம்பதி, ஸ்ரீசக்ர மஹாமேருவின் பிந்து மத்தியில் - அரியணையில் அமர்ந்து, திரிலோக பரிபாலனம் செய்து, சகல உயிர்களையும் ரட்சித்து வருகிறார்கள் என்கிறது புராணம்.

இந்த லலிதா - காமேஸ்வர திருக்கல்யாணம் ஒவ்வோர் ஆண்டும் ஆடிப் பூர நட்சத்திரத்துக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில், கோவை பெரிய தடாகம் ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் விமர்சையாக நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் இந்தத் திருக்கல்யாண வைபவ விழா, 20.7.18 அன்று தொடங்கி 17-8-18 வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீலலிதா காமேஸ்வர திருக்கல்யாணம் 10.8.18 - ஆடி வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்தத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அலங்காரத்தில் காட்சியளிப்பாள் ஸ்ரீலலிதாம்பிகை. நிறைவு நாளான 17.8.18 அன்று ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி தொட்டில் வைபவம் நடைபெறும். இந்தத் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும். எல்லாத் தடைகளும் நீங்கி குடும்ப ஒற்றுமை ஓங்கும். திருமண வரமும், குழந்தைப்பேறும் கிடைக்கும். முற்பிறவியில் செய்த எல்லா பாவங்களும் நீங்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள். 

படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism