Published:Updated:

பிள்ளை வரம் தருவாள்!

பிள்ளை வரம் தருவாள்!
பிரீமியம் ஸ்டோரி
பிள்ளை வரம் தருவாள்!

பிள்ளை வரம் தருவாள்!

பிள்ளை வரம் தருவாள்!

பிள்ளை வரம் தருவாள்!

Published:Updated:
பிள்ளை வரம் தருவாள்!
பிரீமியம் ஸ்டோரி
பிள்ளை வரம் தருவாள்!

திருவள்ளூர் மாவட்டம், காரனோடையில் இருந்து மேற்காகச் செல்லும் கிராமத்துச் சாலையில், சுமார் 7 கி.மீ. தூரம் பயணித்தால் வருவது எருமைவெட்டிப் பாளையம்.

இந்த ஊரின் கிழக்கு எல்லையில், சிறு குன்று போன்ற பகுதியில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி.

தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்திய மகிஷன் எனும் அசுரனை அழிக்க சிவனாரின் வாக்குப்படி அவதரித்த தேவியர் நால்வர்: ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி, ஸ்ரீபொன்னியம்மன், ஸ்ரீமரக்காலத்தம்மன், ஸ்ரீகைகாத்தம்மன்.

பிள்ளை வரம் தருவாள்!

வனவாச காலத்தில் இந்தப் பகுதிக்கு ராமனும் சீதையும் வந்தனர். ராமன் தவத்தில் இருக்க, சீதை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த அசுரனைக் கண்ட சீதாதேவி ராமனைச் சரணடைந்தாள். தவம் கலைந்து கண் விழித்த ராமன், அருகிலிருந்த தர்ப்பைப் புல்லை எடுத்து நான்குத் துண்டுகளாக் கிள்ளி, நான்கு திசைகளில் போட்டார். அவற்றிலிருந்து மேற்சொன்ன தேவியர் நால்வரும் தோன்றினர். அசுரன் அழிக்கப்பட்டான். பின்னர் அந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஊரின் ஒவ்வொரு திசையிலும் அந்தத் தேவியர் கோயில் கொண்டனர்.

அவர்களில் அங்காளபரமேஸ்வரியின் ஆலயம், ஊரின் கிழக்கில் அமைந்துள்ளது. குழந்தை வரம் வேண்டி இந்தக் கோயிலுக்கு வருபவர்களுக்கு, அம்மனின் மடியில் வைத்த எலுமிச்சம் பழத்தை பிரசாதமாக தருகின்றனர்.  இந்தப் பழத்தை சாறு பிழிந்து அருந்தினால், சங்கடங்கள் நீங்கி மகப்பேறு கிட்டும். காத்து- கருப்பால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் மன நிலை சரியில்லாத வர்கள் ஆகியோர் இங்கு வந்து, ஈரத் துணியுடன் அம்மனை வலம் வந்து வணங்குவ துடன், மூன்று நாட்கள் இங்கு தங்கி வழிபட்டுச் சென்றால் எல்லா பிணிகளும் அகலும் என்பது நம்பிக்கை.

- கீர்த்தனா ராஜ், சென்னை - 44

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism