Published:Updated:

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

அபூர்வ தொகுப்பு

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

அபூர்வ தொகுப்பு

Published:Updated:
சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!
சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

*சமயபுரம் - சக்தி தலங்களில் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்குவது. கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில், பெருவளை வாய்க்காலின் கரையில் மகாசக்தி தலமாக விளங்குகிறது.

*திருச்சி - சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்திலுள்ள சமயபுரத்துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு. தன்னைத் தேடிவரும் அடியவர்களுக்கு, உரிய காலத்தில் தேவையான வரங்களைத் தந்து காப்பவள் என்பதால், ‘சமயபுரத்தாள்’ என்று போற்றப்படுகிறாள் இங்கு அருளும் அம்பிகை.

*சோழ மன்னன் ஒருவன், தன் தங்கையைக் கங்க நாட்டு மன்னனுக்கு மணம் முடித்து, அவர்களுக்குச் சீதனமாக ஒரு கோட்டையையும் நகரத்தையும் அளித்தான். அதுவே கண்ணனூர். பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டையும் நகரமும் அழிந்தன. அந்த இடம் பின்னர் வேப்ப மரக் காடாயிற்று.

*மயபுரம் மாரியம்மன், ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்ததாகக் கூறுவர். இந்த அம்பாள் மிக உக்கிரக் கோலத்தில் திகழ்ந்ததால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், இந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன்படி, சிலர் அந்தத் திருவுருவை எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கிக் கிளம்பினர்.வழியில் ஓர் இடத்தில் இளைப் பாறினர் (அந்த இடம் தற்போது `இனாம் சமயபுரம்' எனப்படு கிறது).

*வர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டை அடைந்து, அம்பாள் திருவுருவை அங்கு ஓலைக்கொட்டகை ஒன்றில் வைத்துவிட்டுச் சென்றனர். எனவே, அம்மன், ‘கண்ணனூர் அம்மன்’ என்றும், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்றும் அழைக்கப்பட்டாள்.

*ந்த நிலையில், தென்னாட் டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், தன் படை களோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டார். அப்போது அங்கிருந்த மாரியம்மனை வழிபட்ட மன்னர், போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே தான் வெற்றி பெற்றதும், அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், `பரிவார' தெய்வங்களாக விநாய கரையும் கருப்பண்ண சாமியை யும் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார். தற்போதைய ஆலயம் கி.பி. 1804-ல் விஜயரங்க சொக்க நாத நாயக்க மன்னரால் கட்டப் பட்டது என்கிறார்கள்.

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

‘சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோயில் இருந்திருக்கவேண்டும். பின்னர் இது விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்கள் காலத்தில் சிறப்புப் பெற்றிருக்க வேண்டும்’ என்பது ஆய்வாளர்களின் கருத்து.

*மயபுரம் கோயில் கொடி மரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களின் கீழ்ப் பகுதியில் நாயக்க மன்னர்களின் உருவங் கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தலம் சுமார் 700 ஆண்டுகள் பழைமையானதாக விளங்குவதை அறியலாம்.

*ந்த மாரியம்மன் கோயிலின் வடக்கே செல்லாயி அம்மன் கோயில், போஜீஸ்வரன் கோயில், கிழக்கே உஜ்ஜயினி மாகாளி முக்தீஸ்வரன் கோயில் ஆகியன இடம்பெற்றுள்ளன.

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

ஸ்ரீரங்கநாதரின் தங்கச்சி

*மாயனின் சகோதரியான சமயபுரத்தாள், திருவரங்கத்தி லிருந்து வந்தவள் என்பதால், இந்தக் கோயிலின் நிர்வாகமும் பல நூற்றாண்டுகளாக திருவரங்கம் கோயில் வசமே இருந்தது. பக்தர்களது முயற்சியால், 1984-ம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.

*க்தர்களிடம் வசூலித்த பணம் மூலம், கிருபானந்த வாரியார் சுவாமிகள் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தியுள்ளார்.

மூன்று பிள்ளையார்கள்

*மயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு - மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு - வடக்காக 150 அடி அகலத் துடனும் அமைந்துள்ளது.

*மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயிலின் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. 2-ம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி, கருப்பண்ணசாமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

*ங்குள்ள அம்பாளின் உக்கிரத்தைத் தணிக்க, என்ன செய்யலாம் என்று ஸ்ரீகாஞ்சி பெரியவரின் ஆலோசனையை வேண்டினார்களாம். அவரது அறிவுரைப்படி, நுழைவாயிலின் வலப் புறத்தில் ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங்களாக மூன்று விநாயகர்களைப் பிரதிஷ்டை செய்தனர். அதன்பின் அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப்பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி  1970-ல் கும்பாபிஷேகம் செய்தார்களாம்.

நட்சத்திர  நாயகி

*ம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்தி ருக்குமாறு வைத்திருக்கிறார்கள். அம்பாள் எப்போதும் குளிர்ச் சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

*மயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப் பட்டுள்ளன. இதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 71 கிலோ- 127 கிராம் தங்கத்துடன் 3 கிலோ- 288 கிராம் செம்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

*ள்ளே அம்மன் சுகாசினி யாகக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. 

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

*ம்மனின் எட்டுத் திருக் கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.

நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் திகழ்கின்றன. மேலும், ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத் துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கியவளாக, வரங்களை வாரி வழங்கும் கற்பகத் தருவாக அருள்புரிகிறாள் சமயபுரத்தாள்!

அர்த்தஜாமத்தில் அம்பிகையின் கொலுசுச் சத்தம்!

*சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது புராணக் கதை!

*சிவபெருமான், மன்மதனை எரித்தபோது எழுந்த வெப்பத் தின் தகிப்பு தாங்காமல் தேவர் களும் உலக உயிர்களும் தவித் தனர். எனவே, அவர்கள் பார்வ தியை வேண்டினர். அவள், அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்தச் சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

*வசுதேவர்-தேவகி தம்பதி யின் எட்டாவது குழந்தையான கண்ணன், யசோதையின் வீட்டுக்கும், நந்தகோபன்- யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர்.

அந்தப் பெண் குழந்தையைச் சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடமிருந்து தப்பித்து வானில் உயர்ந்து, ‘உன்னைக் கொல்லும் யமன் கோகுலத்தில் வளர்கிறான்!’ என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. மாயாதேவி எனப்படும் அந்தக் குழந்தைதான் மாரியம்மன் என்கிறார்கள். அவளே சமயபுரத்திலும் அம்ம னாக விளங்குகிறாள் என்பது ஐதீகம்.

*காலனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்த  மார்க்கண்டேயர், திருக்கடவூர் ஈஸ்வரனைச் சரணடைந்தார். ஈசனும் காலசம்கார மூர்த்தியாக அவதாரம் எடுத்து, காலனை உதைத்து வீழ்த்தினார்.

இது உலகில் ஜனன மரணத் தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத் தியது. நோய்களின் அதிபதியான மாயாசுரன் நோய்களைப் பரப் பினான். மக்களைத் துன்புறுத் தினான். இதைக் கண்டு கோபம் கொண்ட பார்வதிதேவி, மாயா சுரனை வதம் செய்யும்படி தன் அம்சமான மாரியம்மனை அனுப்பினாள்.

மாரியம்மன் மாயாசுரனை யும் அவன் சகோதரர்களை யும், வதம் செய்தாள். பின்னர் அவர் களின் தலையை ஒட்டியாண மாக அணிந்துகொண்டு, நோய் களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றி அருள் புரிந்தாள். அவளே ஆதியில் திருவரங்கத்தில் வைஷ்ணவி தேவியாக அருள்பாலித்தாள்; வும், பின்னர் சமயபுரத்துக்கு  வந்து மாரியம்மனாக அருள் பாலிக்கிறாள் என்றும் ஒரு திருக் கதை உண்டு.

*ந்த மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய திருப்பெயர்களும் உண்டு.

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

*மயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், மூலவர் விக்கிரகத்துக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.

*ருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. அந்தப் பாதங்களுக்கு மலர் சூடி, தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

*கோயிலின் முன் மண்டபத் தில் படுத்து உறங்குபவருக்கு, அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது. அம்மை நோய் தீர்க்கவும், நகரின் சாந்திக்காகவும் அம்பாள் இரவு நேரத்தில் வலம் வருவதாக ஐதீகம்.

*காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மார்கழி மாதத்தில் மட்டும் காலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப் படுகிறது.

விருட்சமும்  தீர்த்தமும்!

*மயபுரம் கோயிலின் தல விருட்சம், மருத்துவக்குணங்கள் நிறைந்த வேப்ப மரம். இங்குள்ள பெருவளை வாய்க்கால், சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந் துள்ள ‘மாரி தீர்த்த’ திருக்குளம் மற்றொரு புண்ணியத் தீர்த்தம் ஆகும்.  

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

*மயபுரம் கோயிலில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தங்க ரதம் ஒன்று உள்ளது. பக்தர்கள் உரிய காணிக்கை செலுத்தி, தங்க ரதம் இழுத்து வழிபடுகிறார்கள்.  பெரும்பாலும், திருவிழா இல்லாத நாள்களில் மட்டுமே தங்க ரதம் இழுக்க அனுமதிக்கப் படுகிறது. அப்போது அம்பாளுக் குத் தங்கக் கவசமும் அணிவிக்கப் படும்.

*ங்குள்ள அம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலாலயம் செய்து, பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.

விபூதி விசேஷம்!

*மயபுரத்தாளை அயோத்தி மன்னன் தசரதன் வழிபட்டதா கவும் அருகிலுள்ள ஓம்கார உஜ்ஜயினி காளி ஆலயத்துக்கு விக்கிரமாதித்ய மகாராஜா வந்து வழிபட்டதாகவும் கதைகள் உள்ளன.

*ண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்வம் செல் லாண்டி அம்மன். அவளுக்கே,  இங்கு முதல் பூஜை!

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

*ம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால், விபூதி விசேஷப் பிரசாதமாக வழங்கப் படுகிறது.

*விஜயநகரப் பேரரசின் காலத்தில், இந்தத் தலத்தின் ஸ்தல விருட்சத்துக்குக் கீழே உள்ள புற்றில் நாகம் ஒன்று வசித்ததாம்.

அர்த்தஜாம பூஜை முடிந்த தும் இந்த நாகம் கருவறைக்குச் சென்று அம்மனைப் பூஜிக்கு மாம். அதனால் அம்மனின் `நிர்மால்ய' பூக்கள் கருவறைக்குள் சிதறிக்கிடக்குமாம். காலப் போக்கில் மக்கள் நடமாட்டம் அதிகமானதால், அந்த நாகம் வெளியே வருவது இல்லையாம்.

*தைப்பூசத்தின்போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். கொள்ளிடம்தான் அண்ணன் ரங்கநாதரையும், தங்கை சமய புரத்தாளையும் பிரிக்கிறது.

அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ஆகியவற்றை, ‘மகமாயி’க்குச் சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.  

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

தை மாத பெருவிழாவின் 2-ஆம் திருநாளிலிருந்து 8-ஆம் நாள் வரை சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை ஆகிய வாகனங் களில் சமயபுரத்தாள் உலா வருவது, கண்கொள்ளா காட்சி யாகும்.

9-ஆம் நாளன்று தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடை பெறுகிறது.

சமயபுரத்தாளின் விரதம்!

*மயபுரம் மகமாயிக்கு நடைபெறும் முக்கியமான விழாக்கள்:  சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் - தேர்த் திருவிழா, வைகாசி மாதத்தின் முதல் நாளன்று நடைபெறும் பஞ்சப் பிராகார விழா, மாசி மாதத்தின் கடைசி ஞாயிறன்று நடை பெறும் பூச்சொரிதல் விழா.

*க்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது.

*மாசி மாதக் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் துவங் குகிறது. பூச்சொரிதலின்போது அம்மனுக்கு பூக்கள் வந்து குவியும்.

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

*விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் அதாவது சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படு கின்றன. இந்தக் காலத்தில் ஊர் மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பது வழக்கம்.

*சித்திரைப் பெரு விழாவின் போது, சித்திரை மாதம் முதல் செவ்வாய் தேரோட்டமும், அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை தெப்பமும் நடைபெறும். அப் போது முடிக் காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை, அக்னிச் சட்டி எடுத்தல் ஆகிய நேர்த்திக் கடன்கள் நிறைவேற் றப்படுகின்றன

*தேர்த் திருநாளில் பக்தர்கள் ஆற்றில் குளித்து ஈர உடையுடன் ஆற்று நீரைச் சுமந்து வந்து, அம்மனின் பாதத்தில் ஊற்றிக் குளிரவைப்பர். வைசூரி அகலவும், மழை பொழி யவும், பால் சுரக்கவும், வறுமை நீங்கவும் வேண்டிக்கொண்டு,  பக்தர்களால் மிக நம்பிக்கை யுடன் செய்யப்படுகிறது, இந்த வழிபாடு. அன்றைய தினம் அம்பாளுக்குச் சிறப்பு அபிஷே கம் நடைபெறும்.

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

*திருவிழாவின் எட்டாம் நாளன்று, சமயபுரத்தாள், இனாம் சமயபுரத்துக்குச் சென்று ஒரு நாள் இரவு தங்கு கிறாள். 9-ஆம் நாள் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வருவாள்.

*10 -ம் நாளில் திருவானைக்கா  ஜம்புகேஸ்வரர் கோயிலிலிருந்து  மாரியம்மனுக்குச் சீர்வரிசை அனுப்பி வைக்கப்படும். அண்ணனிடமும் ஈஸ்வரனிட மும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே!

*சித்திரை மாத இறுதியில் தொடங்கி வைகாசி மாதம் வரை 15 நாள்களுக்குப் பஞ்சப் பிராகார உற்சவம் நடக்கும்.

*மயபுரத்தாளின் மீது பக்தி கொண்ட சூரப்ப நாயக்கர், ஒரு முறை அன்னையின் ஆசி பெறாமல் புதிய உற்சவர் விக்கி ரகம் ஒன்று செய்து பிரதிஷ்டை செய்ய முயன்றார். அதற்குப் பல தடைகள் ஏற்பட்டன.

இறுதியில் சூரப்ப நாயக்கர் கண்ணீர் மல்க அன்னையிடம் மன்றாடி மன்னிப்பு வேண்டி னார். அன்னையும் மனமிரங்கி அவருக்கு அனுமதி அளித்தாள். இன்றும் பிரம்மோற்சவத்தின் 9-ம் நாள் வீதியுலாவின் போது, சூரப்ப நாயக்கர் செய்த விக்கிர கம் இடம்பெறுகிறது.

பித்ரு தோஷம் நீங்கும்

னாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோயி லுக்குச் சென்று வணங்கிய பின்னரே, சமயபுரம் மாரியம் மனை தரிசிப்பது சுற்றுப்புறக் கிராம மக்களது வழக்கம்.

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

*மயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடி- தை வெள்ளிக் கிழமைகள், சித்ரா பௌர்ணமி, நவராத்திரி ஆகிய தினங்களில், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய அபிஷேகங்கள் விசேஷமாகச் செய்யப் படுகின்றன.

*புரட்டாசி- மகாளய அமாவாசை அன்று இங்குள்ள அம்மன் முன், புதிய மூங்கில் தட்டு ஒன்றில் பச்சரிசி, தேங் காய், பழம், வெற்றிலை- பாக்கு மற்றும் காய்கறிகள் ஆகிய வற்றைச் சமர்ப்பித்து பூஜிக் கிறார்கள். அதன் பிறகு, அவற்றை தானம் அளிப்பார்கள்.இதனால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

*ங்கு பக்தர்கள் ஈர உடை யுடன் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபடுவதுடன், ஆடு, கோழி, தானியங்கள், உப்பு, வெல்லம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கின்றனர். மேலும், வெள்ளியால் ஆன உறுப்பு களையும், மனித உருவிலான மணிபொம்மையையும் காணிக்கை செலுத்துகின்றனர்.மேலும், பக்தர்கள் மல்லாந்து படுத்துக்கொண்டு தங்களின் வயிறு மற்றும் கண்களில் மாவிளக்கு தீபம் ஏற்றிவைத்தும் அம்மனை வழிபடுகின்றனர்.

*தாலி பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளிக்கிறார்கள். அப்போது, அம்பாளே பெண்மணியின் உருவில் வந்து அவற்றைப் பெற்றுக்கொண்டு ஆசீர்வதிப் பாள் என்பது நம்பிக்கை.

சங்கடங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

*குழந்தைப்பேறின்மை, தொழில் பிரச்னை, ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் சமயபுர மகமாயியை தரிசித்தால், அவள் கண்டிப்பாக பலன் தருவாள் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.

*ங்கு உயிர்ப்பலி கிடை யாது. அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்பமானவை.

அருமருந்தாகும் அபிஷேகத் தீர்த்தம்!

*ம்மை நோய் பீடித்தவர்கள்  இந்தத் தலத்தில் தங்கியிருந்து, அம்பிகையை வழிபட்டு குணம் பெறுவதற்கு வசதியாக, இங்கு தனி மண்டபம் ஒன்று உள்ளது. இந்த நோயாளிகளுக்குத் தினமும் அம்மனின் அபிஷேகத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப் படுகிறது. இதனால் விரைவில் நோய் குணமடைவதாக பக்தர் கள் நம்புகின்றனர்.

*குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் கரும்புத்தூளி எடுப்ப தாக அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை- வேஷ்டியைப் பத்திரமாக வைத்திருப்பர்.  அவ்வாறு பத்திரப்படுத்திய துணிகளை, பிரார்த்தனை தினத்தன்று மஞ்சள் நீரில் நனைத்துக் கரும்புத் தொட்டில் தயார் செய்து, அதில் குழந்தை யைக் கிடத்துகிறார்கள். அந்தத் தொட்டிலைப் பிடித்தபடித் தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துவார்கள்.

நீங்களும் ஒருமுறை, சமயபுர நாயகியைத் தரிசித்து வழிபட்டு வரம்பெற்று வாருங்களேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism