Published:Updated:

தில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம்! - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்

தில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம்! - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்
பிரீமியம் ஸ்டோரி
தில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம்! - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

தில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம்! - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
தில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம்! - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்
பிரீமியம் ஸ்டோரி
தில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம்! - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்

றைவனின் அருளாணைப்படி அரக்கர்களை சம்ஹாரம் செய்வதற்காக அவதரித்தவள் காளி. அங்ஙனம் அசுரர்கள் பலரை அழித்தபிறகும் அவளின் கோபம் தணியவில்லை. இதனால் உலகுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், சிவனார் ஊர்த்துவத் தாண்டவம் ஆடி காளியின் கோபத்தை அடக்கி, அவளை தில்லையில் `தில்லைக் காளி’யாக அமரச் செய்தார்.

அவ்வாறு அங்கே சந்நிதிகொண்ட தில்லைக்காளி, தனக்குச் சேவை செய்த இரண்டு சகோதரிகளையும், தன்னுடைய பிரதிநிதிகளாக தென் திசை நோக்கிச் செல்லும்படி ஆணையிட்டாள். அதன்படியே அக்கா, தங்கை இருவரும், தெற்கில் தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தினடியில் வந்து தங்கினார்கள். மக்களின் பசிப்பிணி, நோய்களைத் தீர்த்தம் கொடுத்து குணப்படுத்தி வந்தார்கள். சூரிய வெப்பத்தினால் அம்மை நோய்க்கு ஆளானவர்களை, கண்களால் உற்றுப் பார்த்து வேப்பிலைத் தீர்த்தம் தந்து குணப்படுத்தினார்கள்.

தில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம்! - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்

இந்தச் சகோதரிகளில் மூத்தவள் சாந்தமானவள். அவள் தன் பார்வையின் சக்தியால் அருள்புரிந்ததால், `கண்ணம்மன்’ எனப் பெயர் பெற்றாள். இளையவள் உக்கிரமானவள். தீயசக்திகளை வேரோடு அழித்து, இந்தப் பகுதியைச் செழிப்பாக்கியவள்.

‘‘நான் சாந்தமாகத் திகழ, நீ உக்கிரம் கொள் கிறாயா..’’ என்று கண்ணம்மன் ஒருமுறை கேட்ட போது, அவளிடம் கோபித்துக்கொண்டு, சற்று தூரம் தள்ளி அமைந்திருக்கும் வேம்பின் அடியில் போய் அமர்ந்துகொண்டாளாம் இளையவள். காலப்போக்கில் இருவரும்  ஊரைக் காக்கும் தெய்வங்களாக அருவமாகத் தங்கினார்கள் என்கிறது தலபுராணம். இளையவளை `புது அம்மன்’ என அழைத்து வழிபடுகிறார்கள் மக்கள்.

திருநெல்வேலிச் சந்திப்பு (ஜங்ஷன்) அருகிலேயே  அமைந்திருக்கிறது  கண்ணம்மன் - புது அம்மன் திருக்கோயில். இரண்டு அம்மன்களுக்கும் தனித் தனிச் சந்நிதிகளுடன் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கண்ணம்மன் முக்கிய தெய்வமாக அருள் பாலிக்கிறாள். `சிந்துபூந்துறை’ என்று அழைக்கப் பட்டு வந்த இந்தப் பகுதி, தற்போது `கண்ணம்மன் கோயில் தெரு’ என்றே  அழைக்கப்படுகிறது. மகான் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள்,  கோடக நல்லூர் இறைவன் சொக்கநாதரைச் சிதம்பரத்தில்் உள்ள ஆடல்வல்லானாகவும், இந்தக் கண்ணம் மனைத் தில்லைக்காளியாகவும் வர்ணித்துப் பாடல்கள் பாடியுள்ளாராம்.

திருக்கோயிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதலில் பெரிய மண்டபமும், அதன் பின் மகா மண்டபமும் உள்ளன. பெரிய மண்டபத்தில் சுடலைமாட ஸ்வாமிக்கு இரண்டு பீடங்களும், மகா மண்டபத்தில் இரண்டு பலி பீடங்களும் உள்ளன. இந்தப் பலிபீடங்களுக்குக் கீழ் இரண்டு வேதாளங்கள் காட்சியளிக் கின்றன. இந்த மண்டபத்தின் கன்னி மூலையில் கன்னி விநாயகரையும், பைரவ மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம்! - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்

அடுத்து நகர்ந்தால், வடக்கு நோக்கி அருளும் ஸ்ரீபுது அம்மன் மற்றும் ஸ்ரீகண்ணம்மனைத் தரிசிக்கலாம். இரண்டு தேவியரும் கீழ் வலது கையில் சூலம்; இடது கையில் குங்குமக் கிண்ணம் (சக்தி அஷ்டம்), மேல் வலது கையில் உடுக்கை; இடது கையில் சர்ப்பம் ஏந்தியபடி, அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரண்டு அம்மன்களுக்கும் 11 வகை திரவிய அபிஷேகம், கும்பக் கலச அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாள்களில் காலையில் கேப்பைக் கூழும், மாலையில் அரிசிக் கஞ்சியும் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. முன்பு ஆடிமாதத்தின் கடைசிச் செவ்வாய்க் கிழமைகளில் ‘முளைக்கூட்டு திருவிழா’ நடந்து வந்ததாம். இந்தத் திருவிழா கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை என்கிறார்கள்.

தில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம்! - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்

புது அம்மனுக்கு மாசி மாதம் 2-வது செவ்வாய்கிழமை கால் நாட்டுடன் துவங்கி, 3-வது செவ்வாய்க்கிழமையன்று கொடைவிழா நடைபெறுகிறது. விழாவுக்கு முந்தையநாள் தாமிரபரணி ஆற்றில் இருந்து `அம்பாள் குடி அழைப்பு’ நிகழ்ச்சியும், விழா நாளன்று இரவு 11 மணிக்கு மேல், தாமிரபரணி நதியிலிருந்து பூர்ண கும்பம் எடுத்துவரும் வைபவமும் நடைபெறும். மண் குடத்தில் தாமிரபரணி தீர்த்தம் நிரப்பி, அதனுள் வாசனைத் திரவியம் கலந்து, அதில் வேப்பிலை மற்றும் தென்னை மரத்துப் பூ (தென்னம்புரி) வைத்து பூர்ண கும்பம் எடுத்து வந்து, அம்பாள் சந்நிதியில் சேர்ப்பார்கள்.

கண் சம்மந்தபட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கண் ணம்மனிடம் மனமுருகி வேண்டிக்கொண்டால், விரைவில் கண் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை பலித்ததும் செவ்வாய்க் கிழமையில் கண்ணம்மனுக்குப் பால் அபிஷேகம் செய்து, சிவப்புப் பட்டு, செவ்வரளி மாலை, வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ கண் மலர் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து  வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

தில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம்! - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்

அதேபோல் கல்வியில் மந்தம், தொழிலில் போட்டி, திருமணத் தடை, குழந்தைப் பாக்கியம் ஆகிய தடைகள் நீங்க புது அம்மனை வேண்டிக்கொள்கிறார்கள். புது அம்மனுக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள் பட்டு, வெள்ளை அரளி மாலை சார்த்தி, எலுமிச்சை தீபம் ஏற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், மேற்சொன்ன பிரச்னைகள் நீங்கி நலம் உண்டாகும் என்பது ஐதீகம்.

இதோ, ஆடி மாதம் பிறக்கப்போகிறது. நெல்லைச் சீமைக்குச் செல்லும் பக்தர்கள், அவசியம் இந்தக் கோயிலுக்குச் சென்று கண் ணம்மன் - புதுஅம்மன் இருவரையும் வழிபட்டு வாருங்கள். அவர்களின் திருவருளால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

உங்கள் கவனத்துக்கு...

அம்மன்: அருள்மிகு கண்ணம்மன், அருள்மிகு புதுஅம்மன்

தலம்: நெல்லை - கண்ணம்மன் கோயில்.

எப்படிச் செல்வது?: நெல்லை ஜங்ஷன் (பழைய) பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திலேயே உள்ளது இந்தக் கோயில். பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே செல்லலாம்.

புடவைப் பரிசுப் போட்டி:6

விடை: 1. திருவரங்கம், 2. வெள்ளூர், 3. அம்பத்தூர்

வெற்றி பெற்றவர்கள்

1. நா.அ.மங்கம்மாள், நாமக்கல்

2. எஸ்.காயத்ரி, சேலம்

3. சரோஜா, ஆதம்பாக்கம்,

4. பி.சங்கரி, நாகை மாவட்டம்

5. பி. ஸ்ரீவள்ளி, திருப்பத்தூர்

6. வி.சரஸ்வதி, பெங்களூரு - 8

7. கே.ஜீவரேகா, தஞ்சாவூர் - 1

8. ச.அரிமணி, மதுரை - 10

9. ஆர்.அபிராமி, திருவரங்கம்

10. ஜி.அன்னபூரணி, புதுச்சேரி - 8

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism