Published:Updated:

வேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்!

வேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
வேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்!

எஸ்.கண்ணன் கோபாலன்

வேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்!

எஸ்.கண்ணன் கோபாலன்

Published:Updated:
வேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
வேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்!

‘வேதத்தின் அர்த்தம் ரொம்ப உயர்வானது. அதைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னாலாவது, நவீன காலத்தவர்களுக்கு ஒப்புக்கொள்ளலாம் என்று தோன்றும். ஜன சமூகத்துக்கு அறிவு, கலை எல்லாம் வேண்டும். வேதம் நிறைய அறிவைத் தருகிற வஸ்து என்பதால், அதன் அர்த்தத்தைச் சிலர் சமூகம் முழுவதற்கும் பிரசாரம் பண்ணிக் கொண்டிருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்லத் தோன்றும்.

ஆனால், சாஸ்திரம் இப்படிச் சொல்லாமல் ‘பிராமணனாகப் பட்டவன் வேதத்தின் சப்தத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கவேண்டும். ஜன சமூகம் முழுவதற்கும் அதைக் கொடுத்து ரக்ஷிக்க வேண் டும்’ எனச் சொல்கிறது’ என்று, வேதங்களைக் காப்பாற்றுவது பற்றியும், பிராமணர்கள் வேதங் களை அத்யயனம் செய்வதுடன் அத்யாபனம் செய்யவும் வேண்டும் என்பது பற்றியும் தெய்வத் தின் குரலாக மொழிந்திருக்கிறார்கள் காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள்.

மேலும், சமூக நன்மைக்காகப் பிராமணர்கள் வேதம் படிப்பது, மற்றவர்களுக்குப் போதிப்பது, சமூக நன்மைக்காக வேதங்களில் சொல்லப்பட்டி ருக்கும் யாக யக்ஞாதிகளைச் செய்துகொண்டிப்பது என இருந்துவிட்டால், அவர்களுடைய வாழ்க்கைத் தேவைகளை மற்றவர்கள் நிறைவேற்ற வேண்டும். அது சமூகத்தின் பொறுப்பு என்பதையும் காஞ்சி மகாபெரியவர் வலியுறுத்தியிருக்கிறார்.

அவரது முயற்சியின்பேரில் தேசத்தின் பல இடங்களில் வேத பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டு, எண்ணற்ற மாணவர்கள் வேதங்களைப் பயின்று வருகிறார்கள்.

வேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்!

பள்ளி, கல்லூரிகளில் மற்ற படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தவும் பரிசும் பாராட்டும் பெறவும் பல வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், வேத பாடசாலைகளில் வேதம் படிக்கும் வித்யார்த்திகளுக்கும் ஊக்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத் தில், அவர்களுக்கும் பல கட்டங்களில் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர் களைப் பாராட்டி பரிசு வழங்கவேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளில் ஏற்படுத்தப்பட்டதுதான், ‘ஓம் சாரிடபிள் டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளை.

இந்த வருடம் ஜூலை மாதம் 19 முதல் 22-ம் தேதி வரை நான்கு நாள்கள், சென்னை தி.நகர்.கிருஷ்ணஸ்வாமி திருமண மண்டபத்தில், இந்த அறக்கட்டளை சார்பில் வேதப் போட்டி நடைபெறவிருக்கிறது. அதேபோல், சாஸ்திரப் போட்டி ஜூலை 22-ம் தேதியன்று காலையில் சென்னை-தி.நகர் காந்திமதி கல்யாண மண்டபத்தில் நடைபெறும்.

இந்தப் போட்டிகள் குறித்து அறக்கட்டளையின் நிர்வாகிகளில் ஒருவரான எல்.நாராயணனைச் சந்தித்துப் பேசினோம்.

‘`கடந்த 2007-ம் வருடம் என் நண்பர் டாக்டர் பாலாஜி ஸ்ரீநிவாஸன் என்னிடம் பேசிக்கொண்டி ருந்தபோது, ‘வேதம் படிக்கும் வித்யார்த்திகளை ஊக்கப்படுத்த போட்டிகள் நடத்தி, சிறப்பான முறையில் வெற்றி பெறுபவர்களுக்குப்  பரிசு வழங்கினால் நன்றாக இருக்குமே’ என்று கூறினார். அது எனக்கும் சரியென்று பட்டதால், ஓர் அறக்கட்டளை ஏற்படுத்திச் செயல்பட முடிவு செய்தோம். வேத மந்திரங்களின் அடிப்படையே ‘ஓம்’காரம் எனும் பிரணவ மந்திரம்தானே. எனவே, வேதம் படிக்கும் வித்யார்த்திகளை ஊக்கப்படுத்தவேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்கு ‘ஓம்’ என்றே பெயர் வைத்திருக்கிறோம்’’ என்றவர் தொடர்ந்து பேசினார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்!

‘`அறக்கட்டளையைத் தொடங்கியதும், வேத பாடசாலைகளின் விவரங்களைக் கேட்டு காஞ்சி மடத்தை அணுகினோம். அவர்கள் சுமார் 160 வேத பாடசாலைகளின் விவரங்களைத் தந்தனர். அந்தப் பாடசாலைகளுக்கு நாங்கள் விவரம் தெரிவித்தோம். முதல் வருடம் ஒரு சில பாடசாலை மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பின்னர் படிப்படியாக போட்டிகளில் கலந்துகொள்ளும் வேத பாட சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. போட்டி களிலும் பல தரவரிசைகளை ஏற்படுத்தினோம்.

இந்த வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரகாண்ட், ஒரிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வடஇந்திய மாணவர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அவர்களில் 360 மாணவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு வேதப் போட்டிகளுடன் சாஸ்திரப் போட்டிகளும் நடைபெற உள்ளன.

வேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்!

ஒவ்வொரு வேதத்திலும் உட்பிரிவுகளுடன் சேர்த்து 19 பிரிவுகளில் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். சிறப்பான முறையில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு வேதத்திலும் அதிகப்படியான சராசரி மதிப்பெண்கள் பெற்ற பாட சாலைகளுக்கு, சிறந்த அணிக்கான ரொக்கப் பரிசுகளும் கேடயங் களும் வழங்கப்படும்.

தொடர்ந்து மனு ஸ்மிருதியில் வினாடி வினா, வேத விற்பன்னர்களுக்கு பாதபூஜை, சதுர்வேத பாராயணம் ஆகிய நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழாவின் முதல் நாள் வேதங்களைப் பதம், கிரமம், கணம் போன்ற பல முறைகளில் சொல்லிக் காட்டும் வகையில், வேத விற்பன்னர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியும், நன்கொடையாளர்கள் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நிறைவு நாளில் ‘வேத நெறியில் மனித வாழ்க்கை’ என்ற தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணனின் சொற்பொழிவும் நடைபெறவுள்ளது’’ என்றார்.

வேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்!

சுவாமி விவேகானந்தர் சமாதி அடைவதற்கு முந்தைய தினம், மாலை வேளையில் சுவாமி பிரேமானந்தருடன் சிறிது தூரம் உலவச் சென்றார். அப்போது பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார். இறுதியில், `‘நம் நாட்டில் வேதங்களுக்காக ஒரு கல்லூரி ஏற்படுத்தவேண்டும்’' என்றார்.

சுவாமி பிரேமானந்தர், ‘`வேதங்களைப் பயில்வதால் என்ன பலன்’' என்று கேட்டார். `‘மூடநம்பிக்கைகள் அழியும்'’ என்று பளிச்சென்று கூறினார் சுவாமிஜி. வேதங்கள்தான் சனாதன தர்மத்தின் உயிர்நாடி. வேதங்கள் நிலைபெற்றிருந் தால்தான் தர்மங்களும் நிலைபெற்றிருக்கும்; மூடநம்பிக்கைகளும் விலகும்.

அந்த வகையில் வேதங்களைக் காப்பாற்றவும், வேதம் படிக்கும் வித்யார்த்திகளை உற்சாகப் படுத்தவும் இதுபோன்ற போட்டிகள் அவசியம் தானே! அந்த வகையில் ஓம் சாரிட்டபிள் டிரஸ்டின் இந்த உன்னதமானப் பணி போற்றிப் பாராட்டத்தக்கதுதான் என்பதில் சந்தேகமே இல்லை. அற்புதமான இந்தப் பணிக்கு நாமும் தோள்கொடுப்போம். வேதம் தழைக்கட்டும் லோகம் செழிக்கட்டும்!

அன்பர்கள் கவனத்துக்கு...

இந்த உன்னதப் பணியில் பங்கேற்க விரும்பும் அன்பர்கள் தங்கள் நன்கொடைகளை ‘OM CHARITABLE TRUST’ என்ற பெயரில் காசோலை அல்லது வரைவோலையாக, OM CHARITABLE TRUST, 49, Five Furlong road, Guindy, Chennai - 600 032 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

நெட்பேங்கிங் மூலம் நன்கொடை வழங்குபவர்கள் www.omcharitabletrust.com என்னும் வலைதளத்தில் டொனேஷன் மெனுவில் உள்ள லிங்க் மூலம் அனுப்பிவைக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: எல்.நாராயணன் - 09444022446 என்ற எண்ணுக்குத் தொடர்புகொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism