ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை உபசாரங் களில் குறிப்பிடத்தக்கது அபிஷேகம். இறைய ருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும் அபிஷேகத் தின் மகிமைகளை ஞானநூல்கள் விவரிக்கின்றன.
தெய்வத் திருமேனிகளுக்குச் செய்யப்படும் அபிஷேகத்தின் சிறப்பைச் சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர் அறிந்திருந்தனர். எனவே, ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அத்துடன் அபிஷேக திரவியங்கள் தடையின்றி கிடைக்கும் வகையில், பலவகை மானியங்களைக் கோயில்களுக்கு வழங்கினார்கள்.

அபிஷேக மகத்துவம்
அபிஷேக வேளையில் தெய்வ மூர்த்தங்களி லிருந்து அளவிட முடியாத ஆற்றல் வெளிப்படும் என்பது பெரியோர்கள் வாக்கு. முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப் படும் அபிஷேகங்கள் அனைத்தையும் தரிசிக்க அனுமதிக்கமாட்டார்கள். சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் தரிசிக்கலாம். இன்றைக்கும் சில ஆலயங் களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பழைமையான ஆலயங்கள் சிலவற்றில் உள்ள மூலவர் சிலைகள், அரிய மூலிகைகளால் உருவாக் கப்பட்டிருக்கும். அந்த விக்கிரகத்தின் அடியில் சக்திவாய்ந்த மந்திரங்கள் எழுதப்பட்ட யந்திரத்தை யும் பதித்திருப்பார்கள். இவற்றின் அருள் சக்தி பக்தர்களுக்கும் கிடைக்கும் விதமாக, அபிஷேகத் தீர்த்தத்தை பக்தர்கள் மீது தெளிப்பதுடன், பருகவும் தருவார்கள்.
மேலும் அபிஷேகத்தின்போது, ‘ஓம்’ என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் தெய்வ விக்கிரகங்களை அடைந்து மீண்டு, பக்தர்களிடம் சேர்கிறது. அபிஷேகம் செய்யப்படும்போது உருவாகும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் இணைந்து காற்றில் பரவி பக்தர்களின் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்பது பெரியோர்களின் கருத்து.
அபிஷேகத் தீர்த்தத்தின் இந்த மகிமைகளை எல்லாம் கருத்தில்கொண்டு, ஆலயத்தில் எப்போ தும் தெய்விக ஆற்றல் நிரம்பியிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான், நம் முன்னோர்கள் கருவறையிலிருந்து வெளியேறும் அபிஷேகத் தீர்த்தம் நேராக கோயிலின் திருக்குளத்தைச் சென்றடையும் வண்ணம் கட்டமைத்து வைத்தார் கள் போலும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பால் அபிஷேகம் செய்யும் முறை...
ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் உகந்ததாகத் திகழும் என்பார்கள்.பெரும்பாலான பக்தர்கள் விரும்பிச் செய்வது பாலபிஷேகம்தான். குறிப்பாக, பிரதோஷக் காலத் தில் நந்திக்குச் செய்யப்படும் அபிஷேகங்களில் பாலபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அபிஷேகத்துக்குக் கொண்டு செல்லும் பாலை, கோயிலை ஒரு முறை வலம் வந்துவிட்டுச் சமர்ப் பித்தால், இரட்டிப்புப் பலன் கிடைக்கும் என்று ஞானநூல்களில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், அபிஷேகத்துக்குப் பயன்படுத்தும் நீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டி வேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள்.
எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங் கள் மட்டுமே செய்யவேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.
அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படும் திரவியங் கள் குறித்த தகவல்களும் உண்டு.
தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத் துக்கு நம் முன்னோர் 26 வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள்.
காலப்போக்கில் திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆகக் குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில், 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது.
திருக்கோயில்களில் இறைவனின் அபிஷேகத் துக்கான அபிஷேகப் பொருள்கள் மற்றும் அவற் றால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் ஞான நூல்கள் விவரிக்கின்றன. அதுகுறித்து நாமும் தெரிந்துகொள்வோம்.
அபிஷேகத் திரவியங்களும்
உன்னதப் பலன்களும்...
1. கந்தத் தைலம் - இன்பம்.
2. மாப்பொடி - கடன் நீங்கும்.
3. மஞ்சள் பொடி - அரசாங்க அனுகூலம்.
4. நெல்லிப் பருப்புப் பொடி - பிணிகள் அகலும்.
5. திருமஞ்சனத் திரவியம் - பிணிகள் அண்டாது.
6. ரசபஞ்சாமிர்தம் - முக்தி கிடைக்கும்.
7. பழபஞ்சாமிர்தம் - ஆன்மிகத்தில் உயர்நிலை.
8. பால் - ஆயுள் விருத்தி.
9. பஞ்சகவ்யம் - சகல பாவங்களும் நீங்கும்
10. இள வெந்நீர் - முக்திப்பேறு வாய்க்கும்.
11. தேன் - தேக நலன், குரல் வளம் ஸித்திக்கும்.
12. இளநீர் - ராஜயோகம் கிடைக்கும்.
13. சர்க்கரைச்சாறு - சத்ரு ஜெயம் உண்டாகும்.
14. கரும்புச்சாறு - ஆரோக்கியம் மேம்படும்.
15. தமரத்தம் பழச்சாறு - குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி கிழ்ச்சி பெருகும்.
16. எலுமிச்சைச் சாறு - யம பயம் நீங்கும்; ஆயுள் பலம் கூடும்.
17. நாரத்தை (பழம்) சாறு - மந்திர ஸித்தி கைகூடும்.
18. கொழுச்சிப் பழச்சாறு - சோகங்கள் விலகும்; வீட்டில் சர்வமங்கலங்களும் உண்டாகும்.
19. மாதுளம் பழச்சாறு - பகைமை அகலும்
20. அன்னாபிஷேகம் - விளைச்சல் பெருகும்; வீட்டில் அன்னத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படாது.
21. வில்வம் கலந்த நீர் - மகப்பேறு வாய்க்கும்.
22. தர்ப்பைப்புல் கலந்த நீர் - ஞானம் தரும்
23. பன்னீர் - உடலும் உள்ளமும் குளிரும்; மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம்.
24. விபூதி - சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
25. தங்கம் கலந்த நீர் - குடும்பத்தில் சகல சௌபாக்கியமும் உண்டாகும்.
26. ரத்னம் கலந்த நீர் - செல்வ வளம் பெருகும்.
27. சந்தனம் - ஆளுமைப் பதவிகள் வாய்க்கும்.
28. கோரோசணை - ஆரோக்கியம் மேம்படும்.
29. ஜவ்வாது - பெரும் புகழ் உண்டாகும்.
30. புனுகு - தேக ஆரோக்கியம் கிட்டும்.
31. பச்சைக் கற்பூரம் - ஆரோக்கியமும் புகழும் உண்டாகும்.
32. குங்குமப்பூ - ஆரோக்கியம் மேம்படும், தேக பலம் கூடும், செயல்களில் காரியத்தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
33. தயிர் - நல்லறிவும் பேரழகும் வாய்ந்த குழந்தைகளைப் பெறுவீர்கள்.
34. சங்காபிஷேகம் - சகல விஷயங்களிலும் நன்மை உண்டாகும்.
35. ஸ்நபன கும்பாபிஷேகம் - சித்த சுத்தியடைந்து, இறை தரிசனம் வாய்க்கும்.
அபிஷேகத்தின் மகிமையை அறிந்தீர்களா? இனி, ஆலயங்களுக்குச் செல்லும்போது, உங்களால் இயன்ற அபிஷேகத் திரவியங்களைச் சமர்ப்பித்து இறைவனைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்.
எல்லாம்வல்ல இறையருளால் உங்கள் வாழ்வும் உங்கள் சந்ததியின் எதிர்காலமும் சீரும் சிறப்புமாக அமையட்டும்.
- முருகேசன், திண்டுக்கல்