Published:Updated:

ஆலயம் தேடுவோம்: பரசுராமர் வழிபட்ட திருக்கோயில் பொலிவு பெறட்டும்!

ஆலயம் தேடுவோம்: பரசுராமர் வழிபட்ட திருக்கோயில் பொலிவு பெறட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்: பரசுராமர் வழிபட்ட திருக்கோயில் பொலிவு பெறட்டும்!

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: தே.அசோக்குமார்

ஆலயம் தேடுவோம்: பரசுராமர் வழிபட்ட திருக்கோயில் பொலிவு பெறட்டும்!

எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
ஆலயம் தேடுவோம்: பரசுராமர் வழிபட்ட திருக்கோயில் பொலிவு பெறட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்: பரசுராமர் வழிபட்ட திருக்கோயில் பொலிவு பெறட்டும்!

ந்தப் பகுதி முழுவதும் வேலிகாத்தான் மரங்கள் அடர்ந்த காடு போல் மண்டிக் கிடந்தன. யாருமே அந்தப்

ஆலயம் தேடுவோம்: பரசுராமர் வழிபட்ட திருக்கோயில் பொலிவு பெறட்டும்!

பக்கம் செல்வதற்கு அச்சப்பட்டனர். இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு சிலரின் பார்வையில் அந்தப் புதர்க் காடுகளுக்கிடையே சிவலிங்கம் ஒன்றின் பாணப் பகுதி மட்டும் தெரிந்தது. ‘அங்கே ஏதேனும் ஓர் ஆலயம் இருக்குமோ?’ என்ற சந்தேகத்தில், சிவனடியார்கள் சிலர் ஊர்மக்களுடன் இணைந்து, வேலிகாத்தான் மரங் களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, பாணம் தெரிந்த இடத்தை அடைந்தனர்.

பாணம் மட்டும் தெரிந்த சிவலிங்கத் திருமேனியின் முழு வடிவத்தையும் தரிசிக்க விரும்பி, பக்குவமாக மண்ணை அகற்றி சிவலிங்கத்தை வெளியே எடுத்தனர். சிவலிங்கத்தின் கோமுகத்துக்குப் பக்கத்திலேயே சண்டிகேஸ்வரரின் திருவடிவமும் இருப்பதைக் கண்டு பரவசப்பட்டனர். மற்றபடி வேறு எந்த தெய்வத் திருமேனிகளும் காணப்படவில்லை. தங்களுக்குக் காட்சி அருளிய சிவனாருக்கு ஓர் ஆலயம் அமைக்க விரும்பினர் ஊர் மக்கள். ஆனால், கோயிலின் வரலாறு பற்றி எதுவும் தெரியாததால், தேவ பிரஸ்னம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது தெரிய வந்த வரலாறு, ஸ்ரீபரசுராமருடன் தொடர்புடையது. தற்போது திருப்பணிக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான கபிலன், நம்மிடம் தெரிவித்த அந்த வரலாறு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயம் தேடுவோம்: பரசுராமர் வழிபட்ட திருக்கோயில் பொலிவு பெறட்டும்!

மகாவிஷ்ணுவின் அவதாரம் பரசுராமர். சிவபெருமானிடமிருந்து பெற்ற பரசு என்ற ஆயுதத்தால் எண்ணற்ற க்ஷத்திரியர்களை அழித்தார். தனது சபதத்தை  நிறைவேற்றிய பிறகுதான், ‘பாவம் செய்துவிட்டோமே. சிவபெரு மானிடமிருந்து பெற்ற ஆயுதத்தைத் தற்காப்புக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல், க்ஷத்திரியர்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தி, அந்த ஆயுதத் துக்கு அழியாத களங்கத்தை ஏற்படுத்தி விட்டோமே’ என்று நினைத்து வருந்தினார். ஆகவே, சிவபெருமானை தரிசித்து மன்னிப்பு கேட்கலாம் என்று நினைத்து கயிலைக்குச் சென்றார். அந்தத் தருணத்தில் ஐயனும் அம்பிகையும் ஏகாந்தமாக வேதாந்த விசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். எனவே, விநாயகப் பெருமான் பரசுராமரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. கோபம் கொண்ட பரசுராமர், தன்னுடைய பரசு ஆயுதத்தை விநாயகப் பெருமானை நோக்கி வீசினார். தன்னை எதிர்த்து வருவது தன் தந்தை சிவனாரின் ஆயுதம் என்பதால், விநாயகப் பெருமான் அசையாமல் நின்றிருந்தார். பரசு ஆயுதம் விநாயகருடைய இடது தந்தத்தை ஒடித்துவிட்டது.

நடந்ததை அறிந்த அம்பிகை மிகவும் கோபம் கொண்டு பரசுராமரின் கைகளை வெட்டுவதற்காக உக்கிரமான காளி வடிவம் எடுத்து வந்தாள். ஆனால், பரசுராமரிடம் இரக்கம் கொண்ட  சிவபெருமானும் விநாயகரும், பரசுராமரை மன்னிக்கும்படி கூறவே பார்வதி தேவியும் மன்னித்து அருளினாள். அவசரத்தில், தான் விநாயகப் பெருமானுக்கு செய்துவிட்ட அபசாரத்துக்குப் பிராயச்சித்தமாக பூவுலகில் பல தலங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டபடி ஒவ்வொரு தலமாகச் சென்று கொண் டிருந்தார் பரசுராமர்.

 ஓரிடத்தில் ஆலவிருட்சங்கள் அடர்த்தியாக வளர்ந் திருப்பதைக் கண்டு, அந்த இடத்தில் தவமியற்றினார். நீண்ட நெடுங் காலம் தவமியற்றிய பரசுராமரின் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன், சுயம்புலிங்கமாகத் தோன்றி பரசு ராமருக்கு அருள்புரிந்தார். அந்த இடம்தான், இதோ நாம் இப்போது தரிசித்துக்கொண்டிருக்கும் பாலூர் அருள்மிகு பரசுராமேஸ்வரர் திருக்கோயில்.

பிரஸ்னத்தின்போதுதான் அவர்களுக்கு இறைவனின் திருப்பெயர் பரசுராமேஸ்வரர் என்பதும்,  அம்பிகையின் திருநாமம் மங்களாம் பிகை என்பதும், இங்கே பரசுராமரால் ஏற்படுத்தப் பட்ட தீர்த்தம் `பரசுராம தீர்த்தம்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது... எனப்போன்ற தகவல்கள் தெரியவந்தனவாம்.

கோயிலைப் பற்றிய விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட கபிலன், தொடர்ந்து, ‘`தற்போது சிவலிங்க மூர்த்தத்தை மட்டும் இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறோம். இந்தத் தலம் மிகவும் விசேஷ மான பரிகாரத் தலமாகும். அமாவாசை, பௌர்ண மியில் அருகிலுள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி, இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றினால் பித்ரு தோஷம் பூரணமாக விலகும்; மாசி மகத் தன்று பரசுராம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட் டால், சகல விதமான கிரக தோஷங்களும் விலகும்; குறிப்பாக தியானம் கைகூடும் என்று பிரஸ்னத்தில் தெரிய வந்திருக்கிறது’’ என்றார்.

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கும் பாலூர், சங்க காலத்தில் திருப் பகங்காடு என்ற பெயரிலும், ராஜேந்திர சோழன் காலத்தில் ராஜேந்திர சோழநல்லூர் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. பின்னர் பாலையூர் என்று அழைக்கப் பட்டு தற்போது பாலூர் என்று அழைக்கப்படுகிறது.

பரசுராமரால் வழிபடப்பட்ட இறைவன், தமக்கு ஓர் ஆலயம் இல்லாமல் சிறு கட்டடத்தில் இருந்த கோலம் கண்டு மனம் கனத்துவிட்டது. ஐயனின் திருக்கோயில் விரைவில் பொலிவு பெற வேண்டுமே என்ற ஏக்கம் மனதை வாட்டியது. அதே தருணத்தில் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து ஐயனுக்கு அழகியதோர் ஆலயம் அமைக்க உள்ளதாகத் தெரிந்து சற்றே ஆறுதல் அடைந்தோம்.

ஆலயம் தேடுவோம்: பரசுராமர் வழிபட்ட திருக்கோயில் பொலிவு பெறட்டும்!

பரசுராமர் வழிபட்ட இறைவனுக்கு முற்காலத்தில் இருந்ததைப் போன்றே மிக பிரமாண்டமாக ஆலயம் கட்டவேண்டும் என்பதுதான் ஊர் மக்களின் விருப்பமாக இருக்கிறது. அவர்களின் விருப்பம் நியாயமானது மட்டுமல்ல, உலக மக்க ளின் நன்மைக்கானதும்கூட.

ஐயனின் திருக்கோயில் புதுப் பொலிவு பெற்று, நாளும் நித்திய பூஜைகளும், விழாக்களும், உலக மக்களின் நன்மைக்கான பிரார்த்தனைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தால், அதன் பலனாக உலக மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் சந்தோஷம் ஏற்படும் என்பது உண்மைதானே!

நமக்காக அருள்புரியத் திருவுள்ளம் கொண்டு தம்மை வெளிப்படுத்திக்கொண்ட ஐயனின் திருக்கோயில் மறுபடியும் புதுப் பொலிவு பெற்றிட  நாமும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்வோம். ஆலயம் கம்பீரமாக எழும்புவதற்கு, அந்தக் கயிலையானின் திருவருளை வேண்டிப் பிரார்த்திப் போம். நம்மைப் போன்றவர்களின் பிரார்த்த னையும் உதவிகளும் நிச்சயம் பரசுராமேஸ்வரர் திருக்கோயிலைப் புதுப்பொலிவுடன் திகழச் செய்யும் என்பது உறுதி.

எங்கிருக்கிறது..?

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ளது பாலூர். பஸ் வசதி உண்டு.

தொடர்புக்கு:

கே.ஆர்.கபிலன், செல்: 09626791234

வங்கிக் கணக்கு விவரம்:

A/c Name: SRI PARASURAMESHWARARTHIRUKKOVIL
Bank Name: ALAHABAD BANK
Branch: CHENGALPATTU
A/c. No. 50303269036
IFSC  ALLA 0212396

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism