Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 8

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 8
பிரீமியம் ஸ்டோரி
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 8

வெ.நீலகண்டன், படங்கள்: கா.முரளி, ஆர்.ராம்குமார்

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 8

வெ.நீலகண்டன், படங்கள்: கா.முரளி, ஆர்.ராம்குமார்

Published:Updated:
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 8
பிரீமியம் ஸ்டோரி
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 8

காணிக்காரர்கள் மட்டுமல்ல... பெரும்பாலும் எல்லாப் பழங்குடி சமூகங்களுமே ஆவிகளை வணங்கும் வழக்கம் கொண்டவைதான். ‘தங்களுக் குக் காவலரணாக நிற்கும் மூத்தோன், இறந்த பிறகும் எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பான்’ என்ற நம்பிக்கைதான் இதன் அடிப்படை.

கற்கள், மரங்களின் மூலம் அவர்கள் ஆவிகளை தரிசிக்கிறார்கள். காடுகளின் அங்கமாக இந்த மக்கள் ஒன்றி வாழ, இயற்கை சார்ந்த அவர்களது இந்த வழிபாட்டு முறையும் முக்கிய காரணமாக இருக்கிறது. நன்றியுணர்வும் அச்சவுணர்வும்தான் அவர்களின் இந்த வழிபாட்டை வடிவமைக்கின்றன.

காணிக்காரர்கள், தங்கள் தெய்வங்களின் பெயரைக்கூட உச்சரிப்பதில்லை. காரணம், பயமும் மரியாதையும்தான். காணிக்காரர்களின் மருத்துவமும் மந்திரமும் அமானுஷ்யமானவை. கீழ்நாட்டு மக்கள் இவற்றுக்காகவே காணிக் காரர்களை நாடி வருகிறார்கள். காணிக்காரர்களின் ஞானகுரு அகத்தியர். நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் மலைப்பகுதியில் வசிக்கும் காணிக்காரர் கள், தங்கள் குடியிருப்புகளில் பல்வேறு உருவ வேறுபாடுகளோடு திகழும் அகத்தியரை வழிபடு கிறார்கள். ‘தங்களுக்கு மந்திரங்களைப் போதித் ததும், தங்கள் வாழ்வை வடிவமைத்ததும் அகத்தியரே’ என்று நம்புகிறார்கள். அகத்தியரை முன்நிறுத்தும் பாடல்கள் பல இந்த மக்களிடம் புழக்கத்தில் இருக்கின்றன.  

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 8

காணிக்காரர்கள் நடத்தும், `வடக்கன் பேய் வழிபாடு’ மிகவும் உக்கிரமானது.  வடக்கன் பேய் என்பது இந்த மக்களின் காவல் தெய்வங்களில் ஒன்று. இந்த மக்கள் குடியிருக்கிற வனத்தின் மையத்தில் வடக்கன் பேய்க்கான குடில் அமைந் திருக்கும். இந்தத் தெய்வத்தின் பெயரைச் சொல் லும்போதே காணிக்காரர்களின் உடல்மொழியில் மரியாதை ததும்பும். வடக்கனுக்கு வழிபாடு செய்யும்போது, தன் எச்சில்துளிகூட அவன் மேல் தெறித்துவிடக்கூடாது என்பதற்காக, பிலாத்தி தன் வாயைத் துண்டால் இறுகக் கட்டிக்கொள்வார்.

கோழி பலியிடுதலுடன் வடக்கன் வழிபாடு நிறைவடையும். தீராத நோய் கண்டவர்கள், வடக்கனை வழிபட்டால் குணமடைவார்கள்  என்று நம்புகிறார்கள் அந்த மக்கள். அந்த நம்பிக்கை இப்போது கீழ்நாட்டாரையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. நோயாளிகளைக் காணிக் குடியிருப்புக்கு அழைத்துச்சென்று வடக்கன் குடிலில் கிடத்தி வழிபாடு செய்கிறார்கள். பிலாத்தி தருகிற சாம்பல் அந்த நோயாளிக்கு நம்பிக்கை மருந்தாகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 8

வடக்கனைப் போலவே அயினி மூட்டுத் தம்புரானும் காணிக்காரர்களின் காவலன். மரங்கள், செடி- கொடிகள், விலங்குகளைத் தங்களுடைய சக ஜீவிகளாகக் கருதும் காணிக் காரர்கள், அவற்றை அவற்றுக்குரிய  எல்லைக் கோடுகளிலேயே நிறுத்தும் காவல்காரனாக  அயினிமூட்டுத் தம்பிரானைக் கருதுகிறார்கள். முன்னொரு காலத்தில் அவர்களது  எல்லைக் காவலனாக இந்தத் தம்புரான் இருந்திருக்கக்கூடும். 

அறுவடை காலம் முடிந்ததும், அயினி மூட்டனுக்கான திருவிழா நடக்கும். எல்லைக் காவலனாக நின்று, தங்களையும் தங்கள்  வேளாண் மையையும் காத்த தம்புரானுக்கு, தங்கள் விளைச்சலில் ஒரு பங்கைத் தருகிறார்கள். அனைத்து தானியங்களையும் சேர்த்துப் பொங்கல் வைத்து தம்புரானுக்குப் படையல் செய்கிறார்கள். சிலர் வேண்டுதல் வைத்துக்கொண்டு ஈட்டி, அரிவாள், வேல், சூலாயுதம் போன்ற ஆயுதங்களை வழங்குகிறார்கள். தம்புரானுக்கென தனியாக தோற்றப் பாடலும் இருக்கிறது.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 8

பழங்குடி சமூகங்களில் மட்டுமல்ல... எல்லா சமூகங்களிலும், தம்புரானைப் போன்று தம் மக்களின் மீது அக்கறை கொண்ட, மக்களுக்காக உயிர்நீத்த மூத்தோன்கள் தெய்வமாக மாறியிருக் கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணிக்கு அருகில் சீஷமங்கலம் என்றொரு கிராமம் இருக்கிறது. பல்லவர் காலத்தில் ஸ்ரீபுருஷ மங்கலம் என வழங்கப்பட்ட இந்தக் கிராமத்தில் குடியிருக்கிறான்  சந்திரன். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தக் கிராமத்து மக்களைக் காப்பதற்காக தன் உயிரைக் கொடுத்த மூத்தோனே சந்திரன்.

சந்திரன் ஒரு அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவன். பரம்பரையாக ஊர்ச்சேவகம் செய்யும் குடும்பம்.  ஊரைச் சுத்தம் செய்வது முதல், காவல் காப்பது வரை எல்லா பணிகளிலும் சந்திரன் இருப்பான். மிக வலுவானவன். ஆனால்,  எவரிடமும் அதிகம் பேசமாட்டான். ‘தானுண்டு, தன் வேலையுண்டு’ என்றிருக்கும் சந்திரனை  எவரேனும் வம்புக்கிழுத்தால் மூர்க்கமாகி விடுவான்.  அதனாலேயே அவனுக்குக் கிராமத்தில்,  ‘மூர்க்கச் சந்திரன்’ என்றொரு பட்டப் பெயரும் உண்டு. இரவு வேளையில், ஒரு கையில் ஈட்டிக் கம்பும் இன்னொரு கையில் அரிக்கேன் விளக்கும் சுமந்து கொண்டு ஊரைச்சுற்றி வரும் சந்திரனைப் பார்த் தால் அந்தக் கருப்பனே விளக்கு தாங்கி நடந்து வருவதுபோலிருக்கும்.

ஒருநாள், கடும் மழை... ஊரே தண்ணீரில் மிதந்தது. ஊரின் மத்தியில் இருக்கிற ஏரியில் தண்ணீர் தளும்பி நின்றது. இரவு, தலையில் முக்காடிட்டுக்கொண்டு அரிக்கேன் விளக்கைச் சுமந்தபடி ஊர்க்காவலுக்குக் கிளம்பினான் சந்திரன். மழை விட்டுவிட்டுப் பெய்தது. ஊரைச் சுற்றி வந்தவன், ஏரியில் ஏற்பட்டிருந்த சிறு உடைப் பைக் கண்டான். அது அந்தப் பகுதியிலேயே பெரிய ஏரி. உடைந்தால் அண்டை கிராமங்கள் எல்லாம் மூழ்கிப்போகும். முகிழ்ந்து நிற்கும் பயிர்கள் எல்லாம் அழிந்து ஊரே பட்டினியால் தவிக்கும். பதறிப்போன சந்திரன் உயர்ந்த இடமொன்றில் ஏறி நின்று,  “ஏரி உடையப்போகுது... ஓடி வாங்க... ஓடி வாங்க...” என்று கத்தினான்.  மழையின் சத்தமும் குளுமை தந்த உறக்கமும் அந்தக் குரலை விழுங்கிவிட்டன. எவரும் எழுந்து வரவில்லை.

சந்திரன் தவித்தான். கரையில் விரிசல் அதிகமா கிக்கொண்டே வந்தது. ‘யாராவது வாங்களேன்’ என்று சத்தமிட்டுக்கொண்டே மண்ணையும் கல்லையும் அள்ளி உடைப்பில் கொட்டினான். கரை உடைத்தோடி வரும் தண்ணீர் அவற்றையெல் லாம்  வெகு எளிதாகக் கடந்து ஓடியது.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 8

பொழுது விடியத் துவங்கியது!

சந்திரன் இன்னும் கையில் கிடைத்த பொருள் களையெல்லாம் அள்ளி எடுத்துவந்து உடைப்பை அடைக்க முயற்சி செய்துகொண்டிருந்தான்.ஊரைப் படிப்படியாக வெள்ளம் சூழ்ந்து கொண் டிருந்தது. அந்தப் பக்கமாக வந்த சந்திரனின் நண்பனொருவன் நடக்கும் நிகழ்வைக் கண்டு அதிர்ச்சியடைந்து, சந்திரனிடம் ஓடினான்.

இருவரும் கரையுடைப்பை அடைக்க முயன் றார்கள். முடியவில்லை.  சந்திரன் ஒரு முடிவுக்கு வந்தான். கரை உடைந்த இடத்தில் போய் படுத்துக் கொண்டான். தன் நண்பனை தன்மீது மண்ணை அள்ளிக்கொட்டும்படி கூறினான். நண்பன் திகைத்து நிற்க, `‘தாமதிக்காதே, ஊரைக் காப்பது நம் கடமை. மண்ணை அள்ளிக்கொட்டு... நானே அணையாகக் கிடந்து தண்ணீரைத் தடுப்பேன்'’ என்றான் சந்திரன்.
அதன்படியே அந்த நண்பன், சந்திரனின் மீது மண்ணை அள்ளிக் கொட்டினான்.  கரையுடைப்பு  அடைபட்டது. தண்ணீர் வெளியேறுவதும் நின்றது.

பொழுது நன்றாக விடிந்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்ட ஊர்மக்கள் நெகிழ்ந்தார்கள்.ஊரைக் காக்க தன்னையே  தந்து புதைந்துபோன தங்கள் காவலனுக்கு, ஊரார் கல்லூன்றி படைய லிட்டு நன்றி செலுத்தினார்கள்.

இன்றும் அந்த மரபு தொடர்கிறது.  சந்திரன் புதையுண்டதாகக் கருதப்படும் இடத்தில் ஒரு நந்தியின் சிலையை வைத்து வழிபடுகிறார்கள். ஆடிமாதம், அந்த இடத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு திருவிழா நடத்துகிறார்கள். 

இப்படி ஒவ்வோர் ஊரின் காவல் தெய்வத் துக்குப் பின்னாலும் உருக்கமான, நெகிழ்ச்சியான, அதிர்ச்சியான, வியப்பான கதைகள் இருக்கின்றன. அந்தக் கதைகளே, தலைமுறை தலைமுறையாக மக்களுக்கும் அந்த தெய்வங்களுக்குமான பந்தத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

- மண் மணக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism