Published:Updated:

தேவி தரிசனம்!

தேவி தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
தேவி தரிசனம்!

தேவி தரிசனம்!

தேவி தரிசனம்!

தேவி தரிசனம்!

Published:Updated:
தேவி தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
தேவி தரிசனம்!

நினைத்ததை நிறைவேற்றுவாள் குளக்கரை வாழியம்மன்

வேலூர் மாவட்டம், ஆற்காட்டிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது அரும்பாக்கம் கிராமம். இதன் மேற்கு திசையில் இருக்கும் அம்மன் குளத்தின் கரையில்தான், எல்லையம்மனாகவும் ரேணுகாதேவி அம்பாளாகவும் வணங்கப்படும் ஸ்ரீகுளக்கரை வாழியம்மன் குடியிருக்கிறாள்.

தேவி தரிசனம்!

ஒருகாலத்தில் இந்தக் கிராமம் செல்வச் செழிப்புடன் விளங்க, தெய்வத்தைத் தேடவேண்டிய அவசியமே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவி தரிசனம்!

இல்லாமல் போனது கிராம மக்களுக்கு. இந்த நிலையில் பெருமழை பொழிய, குளம் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது; ஊரே அழிந்து போனது. அப்போது வெள்ளத்தில் மிதந்து வந்த அம்மன் சிலை ஒன்று குளக்கரையில் ஒதுங்கியது. அந்தச் சிலையைத் தொடுவதற்கே அனைவரும் பயந்து ஒதுங்கி நின்ற வேளையில், சோமாக்கா என்ற பெண்மணி மட்டும் துணிச்சலுடன் அம்மன் சிலையைத் தூக்கி வந்து வழிபட்டாள். அப்போது அருள் வந்து பேசிய சோமாக்கா, ``எனக்குக் கோயில் கட்டி வழிபட்டுக் கொண்டாடுங்கள். இழந்த செல்வங்கள் அனைத்தும் தேடி வரும்” என்று தெரிவித்தாள். அதன்படியே அம்மனுக்குக் கோயில் கட்டி, ‘குளக்கரை வாழியம்மன்’ என்று பெயர் சூட்டி வழிபட ஆரம்பித்தனர் ஊர் மக்கள். ஊர் மீண்டும் செழித்தது.

இவளை வணங்கினால், வேண்டும் காரியங்கள் வேண்டியபடி நிறைவேறும் என்பது நம்பிக்கை.

தீவினைகளைத் தீர்ப்பாள் கருங்காளியம்மன்

ஒரு காலத்தில் ஏழு கன்னிகள் கோட்டை கட்டி வாழ்ந்து வந்தனர். இவர்களில் கடைக்குட்டியாகப் பிறந்தவள் கருங்காளி. கருங்காளி மற்ற சகோதரிகளைவிடவும் அனைத்து வித்தைகளிலும் கெட்டிக்காரியாக விளங்கினாள். ஒருபுறம், தங்கையின் குணத்தைக் கண்டு மகிழ்ந்தாலும், மறுபுறம் அவள் மீது மற்ற சகோதரிகளுக்குப் பொறாமையும் எழுந்தது. இந்த வேளையில் மூத்த சகோதரியான ஆரவல்லி அனைவருக்கும் ஜாதகப் பலன் சொல்லும்படி  ஜோதிடர் ஒருவரை அணுகினாள். அப்போது கருங்காளியின் ஜாதகப் பலனைக் கண்ட ஜோதிடர், “இவள் வெகுசீக்கிரம் அனைவரையும் வீழ்த்தி முன்னுக்கு வந்துவிடுவாள்” என்றார்.

தேவி தரிசனம்!

இதைக்கேட்டதும் துணுக்குற்ற மற்ற சகோதரிகள் அனைவரும் கருங்காளியைக் கொன்றுவிடத் தீர்மானித்தார்கள். ஒரு நாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கருங்காளியை மற்ற சகோதரிகள் அனைவரும் சூழ்ந்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.

அவர்களிடமிருந்து தப்பித்த கருங்காளி, குஞ்சப்பனை மாரியம்மன் ஆலயத்தில் தஞ்சம் புகுந்தாள்; தெய்வமானாள்.

கோவை மாவட்டம்- காரமடைக்கு வடமேற்கில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது மங்களக்கரை புதூர் கிராமம். இங்கு ஊருக்குள் சிறிய பெருமாள் ஆலயம் ஒன்றும், அதற்கும் சற்றுத் தொலைவில் குஞ்சப்பனை மாரியின் ஆலயமும் உள்ளன. மாரியம்மன் ஆலயத்தில் அருளும் கருங்காளி அம்மன், குழந்தை வரம் தருவதிலும் ஏவல், பில்லி-சூனியம் களைவதிலும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள்.

காணி தெய்வம் பேச்சியம்மன்!

ராமவர்மா மகாராஜா, (1896-ம் ஆண்டு) நீர்ப்பாசன வசதியைப் பெருகும் வகையில் கோதை ஆற்றின் குறுக்கே பேச்சுப் பாறை அணையைக் கட்டத் தொடங்கினார். ஆனால், அணையின் கட்டுமானம் அடிக்கடி இடிந்து விழுந்துகொண்டே இருந்தது. எவ்வளவு முயற்சிகள் செய்தும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

தேவி தரிசனம்!

இதற்குக் காரணம் மலை வாழ் தெய்வம்தான் என்று பணியாளர்கள் நம்பினார்கள். மேலும், மலை வாழ் தெய்வத்துக்கு ஒரு பெண்ணை பலி கொடுத்தால் இந்த பிரச்னை நிவர்த்தியாகும் என்று நம்பினார்கள். இதையொட்டி, உயிர்த்தியாகம் செய்த பெண்ணையே காணி மக்கள், ‘பேச்சியம்மன்’ என்று திருப்பெயரிட்டு வழிபடுகிறார்கள்.

பேச்சியம்மன் காணி தெய்வமாகக் குமரியில் பேச்சிப்பாறையில் அருள்புரிந்து கொண்டிருக்கிறாள்.   தங்களின் வாழ்வு செழிக்கவும் எதிர்காலம் சிறக்கவும் இந்த அம்மனின் சந்நிதிக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். இப்பகுதியின் காவல் தெய்வமாகவும், சிறந்த வரப்பிரசாதியாகவும் திகழும் பேச்சியம்மனை வழிபட்டுச் சென்றால், எவ்வித தீவினையும் தங்களை அண்டாது; வீட்டில் நல்லதே நடக்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

தொகுப்பு: சி.வெற்றிவேல்

படங்கள்: சி.வெங்கடேசன்,  தி.விஜய், ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism