Published:Updated:

ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்

ஆன்மிக துளிகள்

Published:Updated:
ஆன்மிக துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்

சொல்லக்கூடாதது!

சொல்வதனால் குறையக்கூடியவை இரண்டு. அவை: புண்ணியமும் பாவமும்.

ஆன்மிக துளிகள்

நாம் செய்த புண்ணியங்களையும், தருமங்களையும் நாமே எடுத்துச் சொல்வதால், புண்ணியம் குறையும். நாம் செய்த பாவங்களை நாமே பிறரிடம் கூறுவதால், அந்தப் பாவங்கள் குறையும். குறைய வேண்டியது பாவம்; பெருக வேண்டியது புண்ணியம். ஆகவே, நாம் செய்த புண்ணியத்தைக் கூறவேண்டாம்; பாவத்தைக் கூறுவோம்.

(குன்றக்குடி அடிகளார் அருளியது)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆன்மிக துளிகள்

ஆய்வுக்குத் தக்கன மூன்று

`சான்றவர் ஆய்ந்திடத் தக்கவாம் பொருள் மூன்றுள...’ என்பது கச்சியப்பரின் திருவாக்கு.

வேதம் மூன்று. ‘வேதாத்ரயீ’ என்பார்கள். ரிக், யஜூர், சாமம். (அதர்வணம் கலப்பாக வந்தது).

மூர்த்திகள் மூவர்: சிவா, விஷ்ணு, பிரம்மன்.

தொழில்கள்: ஆக்கல், காத்தல், அழித்தல்.

சக்திகள்: இச்சா, கிரியா, ஞான சக்தியர்.

உலகம்: பூதலம், மீதலம், பாதலம்

கடவுளின் நிலை: அருவம், உருவம், அருவுருவம்

காலம்: கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்

ஆசைகள்: மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை.

குணங்கள்: சத்துவம், ராஜசம், தாமசம்

(புலவர் கீரன் சொன்னது...)

ஆன்மிக துளிகள்

முருகனின் அடியார்கள்

முருகப்பெருமானுடைய அடியார்கள் பலர். நக்கீரர், சிகண்டி முனிவர், பரணர், இடைக்காடர் போன்றோர். ராமரின் குரு இருக்கிறாரே... அவரும் முருகனின் சீடரே. இது எனக்கு எப்படித் தெரியும்? இதை நான் சொல்லவில்லை. திருகோணமலை திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்கிறார்.

அந்தப் பாடல் இதுதான்...

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்திய மாமுனி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட் கோலமாய்
வருமுருகோனே!


(வாரியார் ஸ்வாமிகளின் சொற்பொழிவில் கேட்டது)

தொகுப்பு: ஆர்.சி.சம்பத், ஓவியங்கள்: ரமணன்

ஆன்மிக துளிகள்

விலை மதிப்பில்லாதது!

சீடன் குருவிடம் கேட்டான்: ``இந்த உலகில் விலை மதிக்க முடியாத பொருள் எது?''

குரு பதில் சொன்னார்: ``இறந்துபோன நாயின் தலைதான்''

சீடன் மீண்டும் கேட்டான்: ``ஏன், இறந்துபோன நாயின் தலை விலைமதிக்க முடியாதபடி உள்ளது?''

``காரணம்... எவரும் அதன் விலையை மதிப்பிடமுடியாதபடி உள்ளதால்தான்!'' என்றார் குரு.

***

கடலும் ஓடையும்!

கடலைப் பற்றி ஓடையிடம் உரைத்தேன்.

நான் மிகைப்படுத்தி கடலைப் பெருமைப் படுத்துவதாக ஓடை நினைத்தது. பின்னர், ஓடையைப் பற்றி கடலிடம் கூறினேன்.

ஓடையின் மதிப்பைக் குறைத்து, அதன் மீதுள்ள வெறுப்பில் நான் அதைச் சிறுமைப்படுத்துவதாக கடல் நினைத்தது.

- கலீல் கிப்ரான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism