சமூக அக்கறை என்பது சாதாரண விஷயம் கிடையாது.

தன்னையும் தன் சுற்றத்தையும் தாண்டிப் பிறரை, இந்த உலகத்தை நேசிக்கிற பண்பு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதனால்தான் வரலாற்றில் அவர்கள் நிலைத்து நிற்கிறார்கள். மேரி க்யூரி அப்படி ஒரு வரம் வாங்கிவந்தவர்.

1914. செப்டம்பர் மாதத்தில் உலக யுத்தத்துக்குப் பிள்ளையார் சுழிபோட்டது ஜெர்மனி. பெல்ஜியம் மற்றும் ஃபிரான்ஸின் வட பகுதிகளைப் படையெடுத்துச் சுற்றி வளைத்தது. உலக யுத்தம் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில் மேரி க்யூரி, ‘உலகயுத்தத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?’ என்று வீட்டில் முடங்கிக் கிடக்கவில்லை. போர் முனைக்குப் போனார். காயம்பட்ட வீரர்களுக்குச் சிகிச்சை அளித்தார். எலும்பு முறிவுகளையும் உள்ளே பாய்ந்த குண்டுகளையும் கண்டுபிடித்துச் சிகிச்சை கொடுத்தார்.

ராணுவ முகாமில் மேரி க்யூரியின் சேவை நிலையத்துக்கு ‘மேடம் க்யூரி, டைரக்ட்ரைஸ் ஆஃப் ரேடியாலஜிக்கல் சர்வீஸ்’ என்று பெயர். வீரர்களுக்குச் சிகிச்சை கொடுக்கப் போகும்போது தாம் யார் என்றே காட்டிக் கொள்ள மாட்டார் மேரி. ஒருமுறை வெகு சிரத்தையோடு மேரி, வீரர்களுக்குச் சிகிச்சை அளிப்பதைப் பார்த்துவிட்டு ஒரு ராணுவ வீரர் மேரியிடம் கேட்டார்.

‘`அம்மா! நீங்கள் யார்?’’

‘`மக்கள் சேவகி.’’

உலகப் போர் நடந்துகொண்டிருந்த நேரம்... ஒருநாள் மேரி க்யூரி பாரீஸிலிருந்த ஒரு பேங்குக்குப் போனார். பேங்க் மேனேஜரை சந்தித்தார். தாம் கொண்டு வந்த பொருள்களை மேசை மீது பரப்பினார். எல்லாம் தங்கப் பொருள்கள். அவருக்கு வெகுமதியாகவும் சன்மானமாகவும் வந்தவை.

‘`இவற்றை உருக்கி, விற்று, இதில் கிடைக்கும் பணத்தைப் போரில் ஈடுபட்டிருக்கும் ஃபிரெஞ்ச் அரசுக்கு நிதியாகக் கொடுத்துவிடுங்கள்.’’

மேனேஜர், மேசையில் பரப்பப்பட்டிருந்த பொருள்களைப் பார்த்தார். அவற்றில் மேரி வாங்கிய பல பதக்கங்களும் இருந்தன. அவற்றில் நோபல் பரிசுப் பதக்கமும் இருந்தது. பதறிப் போனார் மேனேஜர்.

‘`மேடம்! இவற்றையா உருக்கி விற்கச் சொல்கிறீர்கள்?’’

‘`உலகப் போர் நடந்துகொண்டிருக்கும்போது, தேசமே ஒரு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது இந்தப் பதக்கங்களால் என்ன பயன்? இவை பெட்டியில் சும்மா தூங்கிக் கொண்டிருப்பதைவிட, நாட்டுக்கு உதவுவது நல்லது. இல்லையா? விற்றுவிடுங்கள்’’ என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார் மேரி.

ஒரு துளி சிந்தனை

தினமும் இரவில் உறங்கப் போகிறோம்; மறுநாள் காலை உயிருடன் எழுவோம் என்பதற்கு நமக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனாலும் அடுத்த நாள் இத்தனை மணிக்கு எழ வேண்டும் என அலாரம் வைத்துவிட்டுப் படுக்கிறோம். அதற்குப் பெயர்தான் நம்பிக்கை!