



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'நரசிம்மரை வழிபட்டால், நர்சிங் ஹோம் போகவேண்டாம். ஆமாம்... எந்த நோய் நொடியும் இல்லாமல் நம்மை ஆரோக்கியமாக வாழவைக்கும் தெய்வம் அவர்!'' - கலகலப்பாக ஆரம்பிக்கிறார் ஆன்மிகச் சொற்பொழிவாளர் நாகை முகுந்தன்.
''நரசிம்மரும் அகத்தியரும்தான் என்னோட இஷ்ட தெய்வங்கள். இதுவரைக்கும் ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளை மிகச் சிறப்பா நடத்தியிருக்கேன்னா... அதற்கு இவங்களோட திருவருள்தான் காரணம்னு சொல்வேன். எந்தவொரு நல்ல காரியம் செய்தாலும் இவங்ககிட்ட சொல்லாம செய்யமாட்டோம்'' என்று பக்தியும் பரவசமுமாக விவரிக்கும் நாகை முகுந்தன், தனக்கு மிகவும் பிடித்த கோயில் நாமக்கல் ஸ்ரீநரசிம்மர் ஆலயம் என்றார்.
''நாமக்கல் நரசிம்மர் கோயில் என்னோட சொந்த வீடு மாதிரி! எப்பல்லாம் சந்தர்ப்பம் வாய்க்குதோ... உடனே, நாமக்கல் கிளம்பிப் போயிடுவேன். அவரைக் கண்குளிர தரிசிச்சிட்டு வந்தால், மனசுல அப்படியரு நிம்மதியும் நிறைவும் வந்துடும்!'' என்றவர், தொடர்ந்தார்...
##~## |
''ஒருமுறை மலேசியாவில் சொற் பொழிவு ஜோரா நடந்து முடிஞ்சது. ரசிகர்கள் பொன்னாடை, பரிசுப் பொருட்கள்னு அமர்க்களப்படுத்திட் டாங்க. எல்லாத்தையும் கட்டி எடுத்துக் கிட்டுக் கோலாலம்பூர் ஏர்போர்ட் வந்தால், பரிசுப் பொருட்களோட மதிப்பைவிட லக்கேஜ் சார்ஜ் அதிகமா இருந்துது. அதுக்காக, ரசிகர்கள் அன்பா தந்த பரிசுப்பொருட்களை அங்கேயே விட்டுட்டு வர்றதுக்கும் மனசு கேட்கலை. 'நீதான் ஏதாச்சும் வழிகாட்டணும்ப்பா’னு என் நரசிம்மரை வேண்டிக்கிட்டேன். சொன்னா ஆச்சரியப்படுவீங்க... லக்கேஜ் ஆபீஸ்கிட்ட நான் நின்னுட்டு இருந்தப்ப, திருப்பதி போற துக்காக தமிழர்கள் நாலு பேர் வந்தாங்க. அவங்ககிட்ட பிரச்னையைச் சொன்னேன். உடனே, என்னோட லக்கேஜை தங்களோடதா சொல்லி எடுத்துட்டு வந்தாங்க. திருப்பதி பெருமாளைத் தரிசிக்க வந்த அந்த நாலு பேருமே, என் கண்ணுக்கு சாட்சாத் அந்த நரசிம்மராகத்தான் தெரிஞ்சாங்க!'' என்று நெஞ்சில் கை வைத்து நாகை
முகுந்தன் உருக... அதை ஆமோதிப்பதுபோல், பூஜையறையில் ஒலித்தது மணியோசை!
- செ.கார்த்திகேயன், படம்: எம்.ஹுசைன்