Published:Updated:

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு
பிரீமியம் ஸ்டோரி
அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

Published:Updated:
அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு
பிரீமியம் ஸ்டோரி
அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு
அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

பூரம் நட்சத்திரத்தை ‘பூர்வ பல்குனி’ என்கிறது வேதம். சிம்ம ராசியில் நடுநாயகமாக விளங்கும் நட்சத்திரம் இது!

ராசிக்கு அதிபதி சூரியன். நட்சத்திரத்தின் தேவதை யும் ‘அர்யமா’ என்ற புனைப் பெயரில் சூரியனாக அமைந் திருப்பது, அதன் தனிச்சிறப்பு (பல்குனி நக்ஷத்திரம் அர்யமா தேவதா).
 
சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் - இந்த நால்வர் அம்சகத்தில் நான்கு பாதங் களில் இணைந்து பூரத்துக்குப் பெருமை சேர்க்கிறார்கள்.

பூரம் என்ற சொல்லுக்கு ‘பெருக்கு’ எனும் பொருள் உண்டு. தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுவது போல், நல்ல காரியங்களில் செழிப்பை அடையச் செய்யும் தகுதி பூரத்துக்கு உண்டு என்கிறது ஜோதிடம்.
எல்லோரையும் ஈர்க்கும் சொல்வளம், கொடை வழங்கு வதில் ஆர்வம், அழகு வடிவம், ஓரிடத்தில் ஒதுங்காமல் நடந்து கொண்டிருக்கும் இயல்பு, அரச சேவகனாகச் செயல்படுவதில் மகிழ்ச்சி ஆகியவை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவரிடம் தென்படும் என்கிறார் வராஹ மிஹிரர். இந்த நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களைப் பெரு மையும் புகழும் தேடி வரும்.

இரண்டு தாரைகளை உள்ளடக்கியது பூரம்; உக்கிர மான நட்சத்திரம். சண்டை, சச்சரவு, உள்நோக்கத்துடன் செயல்படுதல், ஆசையில் கட்டுண்டு கிடப்பது, கொடை யில் விருப்பம், எடுத்த முடிவில் மாறாமல் செயல்படுதல் ஆகிய அனைத்தும் பூர நட்சத்திரக்காரர்களுக்கு உண்டு என்கிறது ஜாதக பாரிஜாதம்.

போரில் வெற்றி, எதிரி களை முறியடித்தல், தளவாடங் களைக் கையாளுதல், பிறரை வசீகரித்தல், எதிரிகளுக்கு உதவுபவரை அழித்தல் ஆகியவற்றில் இந்த நட்சத்திரம் பேருதவி செய்யும் என்கிறார் பராசரர்.

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்கள் ‘அம் அர்யம்ணே நம:’ எனச் சொல்லி 16 உபசாரங் களைச் செய்து வழிபடுவ தால், சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

பூரம் நட்சத்திரக்காரர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் இந்த நட்சத்திர நன்னாளில் அம்பாளை வழிபட்டு அருள் பெறலாம் என்கின்றன ஞான நூல்கள்.

குறிப்பாக, `தட்சிணாயன’ புண்ணிய காலம் தொடங்கும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் அம்பாளைத் தரிசிப்பதும் வழிபடுவதும் சகல நன்மைகளையும் பெற்றுத் தரும்.

ஆடிப்பூர திருநாளில் வீட்டில் அம்பாளுக்குச் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலான துதிப்பாடல்களைப் பாடி, செவ்வரளி மலர்களைச் சமர்ப்பித்து வழிபடுவதால், சந்தோஷம் பெருகும். கடன் பிரச்னைகள், பிணிகள், தொழி லில் தடைகள், உத்தியோகத்தில் பின்னடைவு  ஆகிய பிரச்னை கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

அன்று தேவிபாகவதம் முதலான நூல்களைப் படிப் பதும், பெரியோர்களைப் படிக்கச் சொல்லிக் கேட்பதும் அளவற்ற நன்மைகளைப் பெற்றுத் தரும்.

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

அத்துடன், அருகிலுள்ள  திருக்கோயில் களுக்கும் சென்று அன்னையை தரிசித்து அருள் பெற்று வரலாம்.

கோதை ஆண்டாள் அவதரித்த திருநாள் ஆடிப் பூரம். அன்றைய தினம் பெருமாள் ஆலயங்களில் ஆண் டாள் நாச்சியாருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதேபோல், சிவாலயங்களில்
அம்பாள் சந்நிதிகளில் `ஆடிப்பூர’ சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடந்தேறும். பெரும்பாலான சிவாலயங்களில் அம்பாளுக் கான வளைகாப்பு வைபவமாகக் கொண்டாடுவார்கள்.

இந்தத் தினத்தில் அம்பாளை தரிசித்து வழிபட்டு, அன்னை யின் சந்நிதியில் வழங்கப்படும் வளையல் பிரசாதத்தைப் பெற்று வருவதால், கன்னிப் பெண்களுக்கு மங்கல வாழ்க்கை அமையும். குழந்தை வரம் வேண்டுவோருக்கு விரைவில் அந்தப் பாக்கியம் கிடைக்கும், வீட்டில் வறுமை நீங்கி செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை.

நாமும் ஆடிப்பூரத்தன்று அம்பாளை வழிபட்டு அளப்ப ரிய நன்மைகளைப் பெற்று மகிழ்வோம். முன்னதாக அவளின் மகிமைகளுக்குச் சான்றாகத் திகழும் மூன்று தலங்களையும் அவை பற்றிய  அபூர்வத் தகவல்களையும் அறிந்து மகிழ்வோம்!

சுமங்கலி போஜனத்துக்கு வந்தாள் காஞ்சி காமாட்சி!

எல்லைதீர் காஞ்சியுள்ளார் யாவரும் முனிவர் அங்கண்

கல்லெல்லாம் லிங்கம் சீதனப்புனலெல்லாம் கங்கை சொல்லும்

சொல்லெல்லாம் மனுக்கள் கைகால்

தொழிலெல்லாம் விடையோன் ஏவல்

செல்லாந்த கைத்தன் நம்ம தென்திசைக் கிழவற்கவ்வூர்

எனக் காஞ்சியின் மேன்மையைச் சொல்கிறது பழம் பாடல் ஒன்று. ‘காஞ்சியில் உள்ளோர் முனிவர்களே. அதன் கற்களெல்லாம் லிங்கமே. நீரெல்லாம் கங்கையே. அங்கு சொற்களெல்லாம் மந்திரங்களே. தொழில்கள் எல்லாம் இறைப்பணிகளே! ஆகையால் காஞ்சி, யமன் நுழைவதற்கு உரித்தன்று’ என்கிறது இந்தப் பாடல்.

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

இந்தத் தலத்தின் நாயகி அன்னை காமாட்சி.

லைமகளையும், திரு மகளையும் கண்களாக உடை யவள் என்ற பொருளில் காமாட்சி என்ற திருப்பெயர் திகழ்வதாகக் கூறுவர் (கா- சரஸ்வதி, மா- லட்சுமி, அட்சி- கண்ணாக உடையவள்).

காம+ஆட்சி எனப் பிரித்து (காமம்- விருப்பம்), அடியார்கள் விரும்பியவற்றை வழங்குபவள் என்றும் பொருள் சொல்வர்.

காமாட்சி என்பதை க+ஆ+ம+ஆட்சி எனப் பிரித்து, க- பிரம்மனையும், அ- திருமாலையும், ம- ருத்திர னையும், ஆட்சி- கண்ணால் படைப்பவள் எனும் உண்மைப் பொருளை உணர்த்துகிறது என்றும் சொல்வர்.
ஸ்ரீகாமாட்சி தேவர்களது பிரார்த்தனைக்கு இணங்க, பண்டாசுரனை அழிப்பதற்காக, ஒரு பிலத்திலிருந்து (துவாரத் திலிருந்து) தோன்றினாள் என்கிறது தல புராணம்.

பண்டாசுரன் வதத்துக்குப் பின், அம்பாளின் கட்டளைப் படி, காயத்ரி மண்டபத்தை நிர்மாணித்து, அம்பாளின் கன்யா ரூபமாகிய பிம்பத்தை பிரதிஷ்டை செய்தனர் தேவர்கள். பிறகு அந்த மண்டபத்தை அடைத்து, இரவு முழுவதும் அம்பிகையை ஸ்தோத்தரித்தபடி வெளியில் நின்றனர். அருணோதய காலத்தில் கதவைத் திறந்த தேவர்கள், கன்யா ரூபமான பிம்பத்துக்கு பதில், சகலாபரண பூஷிதையாக, மலர்ந்த முகம் மற்றும் சதுர் புஜங்களுடன் பத்மாசினியாக அம்பிகை அமர்ந்திருப்பதைத் தரிசித்து  மகிழ்ந்தனர். இன்று நாம் தரிசிக்கும் ஸ்ரீகாமாட்சி, இப்படித் தோன்றியவளே!

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீகாமாட்சியை நோக்கி தவம் இருந்தார் பிரம்மா. ஈசனுடன் அம்பிகையை தரிசிக்கவேண்டும் என்றும், அதன்பொருட்டு அவர்கள் இருவருக்கும் திருக்கல்யாண மகோற்சவம் நடத்துவதற்கு அருள்செய்யும்படியும் வேண்டினார்.

அவரது வேண்டுதலை ஏற்ற அம்பிகை, தன் நெற்றிக் கண்ணிலிருந்து தேஜோமயமாக ஏகாம்பிகையை ஆவிர்பவிக்கச் செய்தாள்.

ஏகாம்பிகையைத் தரிசித்த பிரம்மன், அவளைப் போல் சொர்ண விக்கிரகம் செய்து, பங்குனி உத்திரத்தில் திருக் கல்யாண மகோற்சவம் நிகழ்த்தி, காமகோடி பீடத்தில் எழுந்தருளச் செய்தார். அவள் பங்காரு காமாட்சி எனப் பட்டாள்.

காஞ்சியில் பொழிந்த சொர்ணமழை!

திசக்தியை ராஜராஜேஸ் வரியாக காஞ்சியில் ஸ்தாபித்து பூஜித்தவர் பிரம்மன். கும்பாபிஷேகம் முடிந்ததும் அதனால் எழுந்த மகிழ்ச்சியில் தாமரைப்பூ ஒன்றை வான் நோக்கி எறிந்தார்.

அந்த மலர் ஒரு மானுடனாகி பிரம்மனை வணங்கியது. ஆகாசத்தில் இருந்து பூமிக்கு வந்தவனுக்கு ‘ஆகாச பூபதி’ என்று பெயரிட்டார் பிரம்மன். அவனிடம் காஞ்சி மாநகர ஆட்சியைக் கொடுத்தார் பிரம்மன்.
அவன் குழந்தைப்பேறுக்காக வேண்ட, விநாயகரை அவனுக்கு மகவாக அளித்தாள் ஸ்ரீகாமாட்சி. அந்தக் குழந்தை யின் திருப்பெயர் துண்டீரன். அவனது நாமகரண விழாவின் போது சுமங்கலி போஜனத்தில் தேவியும் வந்து உணவு உண்டாள். குழந்தை அவளை நோக்கித் தவழ்ந்து செல்ல அன்னை மறைந்தாள்.

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

ஆனால், பிரசாதமாகக் காஞ்சி முழுவதும் தங்க மழை பெய்வித்தாள். அதற்கொரு காரணமும் இருந்தது.

ஆகாசபூபதியின் மனைவி விருந்துக்கான பொருள்களின் தரத்தைச் சோதித்தபோது, பயத்தம் பருப்பில் கை நுழைத் துத் துழாவினாள். அப்போது, அவள் கை விரல் மோதிரத்தில் இருந்த ஒரு தங்க முத்து உள்ளே விழுந்துவிட்டது.

அது பயத்தம் பருப்பு மோத கத்தில் தங்கி, பராசக்தியின் வயிற்றுக்குள் போய்விட் டது. தனக்குத் தங்க முத்துக் கொடுத்த காஞ்சிக்கு தங்க மழை கொடுத்தாள் காமாட்சி.

துண்டீரன் ஆட்சி புரிந்தமை யால், இந்தப் பகுதி தொண்டை மண்டலம் எனப்பட்டது.

இந்தக் கோயிலில் உற்சவ காமாட்சி சந்நிதிக்கு எதிரே அவளைத் தொழுதபடி நின்ற கோலத்தில் திகழ்கிறார் துண்டீர மகாராஜா. உற்சவ காமாட்சி சந்நிதியிலிருந்து துண்டீர மகாராஜா சந்நிதி வரை மௌனமாகச் செல்லா விட்டால், துண்டீரரின் சாபத் துக்கு ஆளாக நேரிடும் என்பது நம்பிக்கை.

பிரம்மன் நடத்திய ஸ்ரீசக்ரபூஜை

ரு முறை, காமாட்சியைப் பூஜிக்க வந்த பிரம்மன், தன்னையுமறியாமல் காயத்ரீ மண்டபத்தில் பாதம் பதித்துவிட்டார். அதனால் அவரது பார்வை மங்கியது.

பிறகு, கலைவாணியின் ஆலோசனைப்படி கோயிலுக் குள் சென்று ஸ்ரீசக்ர பூஜை செய்து பார்வை பெற்றார்.

மேலும் அவர் வேண்டிய படி, ஸ்ரீசக்ரத்தை வணங்கும் பக்தர்கள் எந்தப் பாவத்துக்கும் ஆளாகாமல் இருக்கும் வரத் தையும் அன்னை காமாட்சி அளித்ததாகப் புராணம் கூறுகிறது.

ஸ்ரீகாமாட்சி,  பண்டாசுரனை சம்ஹரித்தாள் அல்லவா? பிறகு அவனது உடம்பை தேவர்களிடம் ஒப்படைத்து, அதனைப் புதைத்து அந்த இடத்தில் ஜய ஸ்தம்பம் ஒன்றை நட ஆணையிட்டாள்.

அதன்படி, தேவர்கள் தோண்டிய பள்ளத்தில் மல்லகன் எனும் அசுரன் தோன்றி அவர்களை எதிர்த்தான். அவனை சம்ஹரிக்க விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணு மல்லகனுடன் போரிட்டபோது, அவன் உடலிலிருந்து விழுந்த ரத்தத் துளி ஒவ்வொன்றும் ஒவ்வோர் அசுரனாக உருப்பெற்றதைக் கண்டு, திகைத்து ஈசனை வேண்டினார்.

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

உடனே அங்கு தோன்றிய ஈசன், தன் தலையிலிருந்து இரண்டு சடையை எடுத்து தரையில் அடிக்க, அதிலிருந்து ஆண், பெண் என இரு பூத கணங்கள் தோன்றினர். அவர்கள் அசுர உடலிருந்து வரும் ரத்தத்தைப் பருகினர். இதனால் அசுர உற்பத்தி தடைப்பட்டதால், விஷ்ணு, மல்லகனை சம்ஹரித்தார். அதன் பிறகும் பூத கணங்கள் அடங்கவில்லை.

விஷ்ணு அவற்றைக் கீழே தள்ளி, அவற்றின் மேல் ஏறி, நின்றும் அமர்ந்தும் பார்த்தார். இறுதியில் அவற்றின் மேல் சயனித்தார் மகாவிஷ்ணு. பூதகணங்கள் தெளிவடைந்து, தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கோரின.

விஷ்ணு அவர்களிடம், ‘‘அசுர ரத்தம் பருகியதால் அசுர குணம் மேலோங்க என்னை எதிர்த்தீர்கள். நானோ, ஈசன் அனுப்பிய உங்களை மிதித்து அபவாதம் செய்துவிட்டேன். இதற்குப் பரிகாரத்தைச் சிவபெருமானிடமே கேட் போம்’’ என்றார்.

அப்போது அங்கு தோன்றிய ஈசன், தனது ஐந்து ஜடைகளைப் பிரித்துவிட்டு, கங்கையைப் பொழியச் செய்தார். அதுவே பஞ்ச தீர்த்தம். அதில் நீராடி விஷ்ணுவும் பூதங்களும் பாவம் நீங்கப் பெற்றனர்.
இந்தத் தீர்த்தத்தின் அருகில், நின்ற - அமர்ந்த - சயனித்த கோலங்களில் பூதநிக்ரஹ பெருமாளும், தீர்த்தத்துக்குக் காவலாக ஆண்- பெண் பூதங்கள் இரண்டும் இருக்கின்றனர்.  இங்கு வெள்ளிக் கிழமைகளில் நீராடுதல் சிறப்பு.

இங்கு பஞ்ச காமாட்சிகள் இருப்பதாக ஐதீகம். மூலஸ்தான காமாட்சி, தபஸ் காமாட்சி, பிலாகாஸ காமாட்சி, உற்சவர் காமாட்சி ஆகிய நான்கு காமாட்சி விக்கிரகங்களுடன் ஐந்தாவது காமாட்சியின் பாதம் மட்டுமே உண்டு.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் அன்றும் அம்மனுக்குச் செய்யப்படும் ‘நவாவரண பூஜை’ சிறப்பு வாய்ந்தது.

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

ஸ்ரீகாமாட்சி விக்கிரகத்துக்கு எதிரிலுள்ள ஸ்ரீசக்ர தொட்டி யில் புடைத்துக் காணப்படும் சிற்பத் தேவதை களை அஷ்ட துர்கைகள் அல்லது அஷ்ட காளிகள் என்பர்.ஸ்ரீசக்ரத்தில் வசினி, காமேசி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேஸ்வரி, கௌலினி ஆகிய எட்டு தேவிகளையும் தரிசிக்கலாம்.ஒவ்வொரு மாதத்திலும் பூரத்தன்று இங்கே சிறப்பு வழி பாடுகள் நடைபெறுகின்றன. ஆடிப்பூரத்தன்று காமாட்சியை தரிசிப்பதால் மங்கல வாழ்வு ஸித்திக்கும்.

ஞானம் அருளும் திருக்காளத்தி நாயகி!

கண்ணப்பர் அப்பிய கண் தாங்கி, சிவபெருமான் திருக்கோலம் காட்டும் தலம் திருக்காளத்தி!

பஞ்சபூதத் தலங்களில் வாயு லிங்கத் தலம்.

`ஸ்ரீ' எனும் சிலந்தியும், `காளம்' எனும் பாம்பும், `ஹஸ்தி' எனும் யானையும் வழிபட்டு உய்வுபெற்ற க்ஷேத்திரம்.

ஸ்ரீவித்யா பீடம் ஒரு மலை யாகத் திகழ, அந்த மலையின் மீது முருகன் ஞானப்பண்டிதனாகக் காட்சி தரும் திருக்காளத்தி!

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

உத்தரவாகினியாகப் பொன் முகலி ஆறு பாயும் ஊர். ராகு, கேது ஆகிய சாயா கிரகங்கள், நல்ல கிரகங்களாக நன்மை வழங்கும் தலம்.

வணங்குவோருக்கெல்லாம் சிவஞானம் வழங்கும் தட்சிணா மூர்த்தியாக, ஐயன் திருக்கோலம் கொண்டு இலங்கும் திருவூர்.

சைவ நால்வரும் பாடிப் பரவி வழிபட்ட திருத்தலம். ‘கயிலை பாதி; காளத்தி பாதி’ என்று நக்கீரர் பெருமையுடன் போற்றிய நகரம். இவ்வளவு மகிமைகளைக் கொண்ட திருக் காளத்தியில்தான், ஞானம் தரும் நாயகியாக அருள்பாலிக்கிறாள் ஸ்ரீஞானப்ரசூனாம்பிகை.

திருக்காளத்தி திருக்கோயி லின் அமைப்பு விசேஷமானது. ஐயன் சந்நிதியும் அம்மன் சந்நிதியும் அடுத்தடுத்து இணை யாக உள்ளன. ஐயன் சந்நிதி மேற்குப் பார்த்தது. அம்மன் சந்நிதி கிழக்குப் பார்த்தது.
இரண்டையும் சுற்றித்தான் உள் பிராகாரம் இருக்கிறது. தவிர, இரண்டு சந்நிதிகளிலும் தனித் தனி உள் சுற்றுகள் உண்டு. இந்த அமைப்பினால், ஐயனுக்கு வலப் புறத்தில் அம்மன் எழுந்தருளியிருக்கும் ஒரு சில கோயில்களில் இதுவும் ஒன்றாகிறது.

ஞானப்பூங்கோதை, ஞானக் கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப் பேரொளி, சிற்புட்கேசி, வண்டார் குழலாள் என்று பற்பல பெயர்களில் அழைக்கப் படுகிறாள், இத்தலத்து அம்பிகை.கருவறையில், நின்ற திருக் கோலத்தில் அருள்பாலிக்கிறாள் ஸ்ரீஞானப்ரசூனாம்பிகை.

அம்பிகையின் இடுப்பில் ஒட்டியாணமாகக் கட்டப்பட் டிருக்கிறது கேது. அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் தங்கப் பாவாடை சார்த்தப்பெறுமாம். அம்பாளுக்கு முன்னால், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்த மேரு உள்ளது. அம்பிகை பரமேஸ்வரி, இங்கே ஞானப்ரசூனாம்பிகை ஆனது எப்படி?

அம்பாள் பெற்ற உபதேசம்!

யிலாயத்தில் ஒரு நாள். சிவ பஞ்சாட்சர மந்திரத்தைத் தனக்கு உபதேசிக்கும்படி, ஐயனிடம் அம்மை வேண்டிக்கொண்டாள்.அதற்கு ஒப்புக்கொண்ட ஐயனும், அம்மையை மௌன நிலைமைக்குப் போகச் செய் தார். ஆனால், தன் பணிப் பெண் மாலினியிடம் தான் உபதேசம் பெற இருப்பதை அம்பிகை கூறிவிட்டாள்.
 
இதனால், மானுடப் பெண் ணாகும்படி சபிக்கப் பட்டு பூமிக்கு வந்தாள். நாரத ரிஷி சொன்னதற்கேற்ப, ஸ்வர்ண முகி நதி தீரத்தை அடைந்து, வாயுலிங்கத்துக்கு அருகில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினாள்.

காற்றை மட்டுமே சுவாசித்து, அகன்ற வில்வ இலைக ளால் பூஜித்து தவம் செய்தாள். தனது தவத்தைக் காக்க, துர்கையைக் காவல் வைத்தாள்.

இந்த நிலையில் வேண்டு மென்றே பிரளய வெள்ளத்தை ஏற்படுத்தினார் இறைவன்.  துர்கை அந்த நீர் முழுவதை யும் தன் உள்ளங்கையில் ஏந்திக் குடித்தாள். அம்பாள் கடுந்தவம் புரிய, தை மாதப் பௌர்ணமி அன்று இறையனார் பிரத்தியட்சமாகி, சாத்விக குணம் நிரம்பப் பெற்றிருந்த தன் நாயகிக்குப் பஞ்சாட்சரத்தை உபதேசித்தார்.

அம்பிகை, மானுடப் பெண்ணாக, இரண்டு கரங் களுடனே,  ஞானப்ரசூனாம்பிகா ஆனாள். ஹஸ்தஸ்த ஸாகர என்றழைக்கப்படும் துர்கை (பிரளய சமுத்திரத்தைக் கரத்தால் குடித்தவள்), கருமை நிறம் மாறித் தங்க நிறம் பெற்றாள். அதனாலேயே, கனக துர்கா ஆனாள் என்கிறது புராணம். இங்கே அம்பாளின் சந்நிதிக்கு நேர் எதிரில், பிராகாரக் கூரையில் ராசிச் சக்கரம் ஓவியம். அம்பாள் எதிரில் நின்று கொண்டு, அவரவர் ராசியைப் பார்த்து, அம்பாள் பாதங்களைப் பணிந்து வழிபடுதல் மரபு.

 சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் சுமார் 110 கி.மீ தொலைவிலுள்ளது திருக்காளத்தி. ஆடிப்பூர நன்னாளிலோ அல்லது ஆடி வெள்ளிக்கிழமைகளிலோ இந்தத் தலத்துக்குச் சென்று, ஞானப்ரசூனாம்பிகையை தரிசித்து வழிபட்டு வாருங்கள். ஞானமும் அறிவும் வடிவான இந்த அன்னையின் அருளால் கிரக தோஷங்கள் தீரும்; கல்வி-கலைஞானம் ஸித்திக்கும்.

செல்வம் செழிக்க வரம் தருவாள் அகிலாண்டேஸ்வரி!

திருச்சிக்கு அருகிலுள்ள மிக அற்புதமான க்ஷேத்திரம் திருவானைக்கா. பஞ்சபூத சிவத் தலங்களில் `நீர்' திருத்தலம்.

கச்சியப்ப முனிவரது ‘திருவானைக்கா புராணம்’ இத் தலத்தின் புராணப் பெருமை களை அழகுற விளக்குகிறது

ஒரு முறை அன்னை பார்வதி தேவிக்கு, ‘தான் அருகில் இருக்கும்போதும் சிவனார் யோகத்தில் திளைக்கிறாரே... என்ன காரணம்?’ என்று அறியும் ஆவல் உண்டானது. அதுகுறித்து இறைவனிடமே கேட்ட பார்வதிதேவி, போகம்- யோகம் குறித்து விளக்குமாறும் வேண்டினாள்.

அதற்கு, ‘`நீ பூலோகத்தில் காவிரிக் கரையில் உள்ள சம்பு வனத்துக்குச் சென்று தவம் இயற்று. காலம் வரும்போது எல்லாவற்றையும் அறிவாய்!’’ என்று அருள்பாலித்தார் சிவபெருமான்.

அதன்படி பூலோகத்தில் சம்புவனமாகிய திருவானைக் காவல் பகுதியை அடைந்த பார்வதிதேவி, காவிரி நீரைத் திரட்டி லிங்கமாக ஸ்தாபித்து வழிபட்டு வந்தாள்.

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

இந்த நிலையில், ஜம்புநாதர் என்ற முனிவர் ஒருவர் தமக்குக் கிடைத்த அரிய நாவல் பழம் ஒன்றை சிவபிரானிடம் சமர்ப் பித்தார். பழத்தை உண்ட சிவனார் அதன் விதையை உமிழ்ந்தார். அதைக் கையில் ஏந்திய ஜம்பு முனிவர் சிவப் பிரசாதமாகக் கருதி உண்டார்.

முனிவரின் வயிற்றுக்குள் சென்ற நாவல் விதை சிவனரு ளால் முளை விட்டு சடுதியில் வளர்ந்து, மரமாகி முனி வரின் தலையைப் பிளந்து வெளிப் பட்டது! விநோத உருவம் கொண்ட ஜம்பு முனிவர், ‘யாது செய்வது?’ என இறைவனிடம் வேண்டினார்.

அவரிடம், ‘`காவிரிக்கரையில் தவம் புரியும் அன்னைக்கு நிழலாக நில். உரிய காலத்தில் அங்கு வந்து அருள் புரிவேன்!’’ என்றார் சிவபெருமான்.

அதன்படியே சம்புவனம் வந்த ஜம்பு முனிவர் அங்கு நாவல் மரமாக - அம்பிகைக்கு நிழலாகி நின்றார்.

நாள்கள் நகர்ந்தன. அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான் குரு வடிவாக அன்னைக்கு போக- யோக நிலைகளை விளக்கினார். அப்போது அவர் அருகில் நின்றிருந்த ஜம்பு முனிவர் மற்றும் நந்திதேவர் ஆகியோரும் இந்த உபதேசத்தைக் கேட்டு மகிழ்ந்தனர். அதன்பின் அங்கேயே அப்புலிங்கமாக உறைந்தார் இறைவன்.

அவரிடம் ஞான உபதேசம் பெற்ற அம்பிகை, அகிலாண்டேஸ்வரியாக கோயில்கொண்டாள். சுவாமி கருவறை மீது கிளைவிட்டுப் படர்ந்து நிற்கும் வெண்ணாவல் மரமே, ஜம்பு முனிவரின் வயிற்றினின்று கிளர்ந்து எழுந்த மரம் என்பர். கருவறையின் வெளிப்புறம் முனிவரின் சிலையையும் தரிசிக்கலாம்.

வேத விளக்கம் எல்லையில் லாதது. குறிப்பிட்ட காலத்தில் கற்பிக்கவோ, கற்றுக்கொள்ளவோ முடியாதது. எனவே, இந்தத் தலத்தில் அம்பிகை கன்னி கோலத்திலேயே மாணவியாக அமர்ந்து சிவனாரிடம் உபதேசம் பெறுவதாக ஐதீகம். ஆதலால் இங்கு திருக்கல்யாண வைபவம் கிடையாது!

அம்பாள் அற்புதங்கள்! - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு

அம்பிகை கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். நான்கு திருக் கரங்கள். நின்ற திருக்கோலம். மேலிரு கரங்களில் தாமரை மலர்கள். கவசம் அணிவித்து அலங்கரிக்கும்போது வலது மேல் கரத்தில் கிளியும், இடது மேல் கரத்தில் தாமரையும் கொண்டு அலங்கரிப்பதும் வழக் கம். கீழ்க் கரங்கள் இரண்டும் அபய- வரத முத்திரையுடன் திகழ்கின்றன.

சிவ சக்ரம்... ஸ்ரீசக்ரம்!

சந்நிதியின் எதிரில் உள்ள ஸ்ரீபிரசன்ன விநாயகரை வணங்கிய பிறகே சந்நிதிக்குள் நுழைந்து அம்பாளை வழிபட வேண்டும். முற்காலத்தில் இந்த அம்பாள் மிக உக்கிரமாக திகழ்ந்தாளாம். அப்போது இங்கு வந்த ஆதி சங்கரர், அம்பாளது உக்கிரத்தைத் தணிக்க விழைந்தார்.

ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்ய எண்ணினார். ஆனால் இது நீர் தலம். தரையில் பிரதிஷ்டிக்க முடியாது. ஆதலால்... சிவ சக்ரம், ஸ்ரீசக்ரம் என இரண்டு சக்ரங்களை உருவாக்கியவர், அவற்றை அம்பாளின் காது
களில் தாடகங்களாக அணிவித் தார். அம்பாளின் உக்கிரம் சற்று தணிந்து ஸ்ரீசக்ர ரூபிணியாக விளங்கினாள்.

மேலும் ஸ்ரீஆதிசங்கரர், அம்பாள் சந்நிதிக்கு எதிரில் ஸ்ரீபிரசன்ன விநாயகரையும், சந்நிதிக்குப் பின்புறம் ஸ்ரீமுருகனையும் பிரதிஷ்டை செய்தார். அதன் பின் அம்பாள் சாந்த சொரூபிணியானாள் என்கின்றன புராணங்கள். பிற்காலத்தில்ஸ்ரீபிரசன்ன விநா யகர் சந்நிதியில் ஸ்ரீசங்கரரின் சிலையை வைத்துள்ளனர். இந்த அம்பிகையை வழிபட்டு உய்வடைந்தவர்கள் பலர்.

‘அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்’ என்று த்விஜா வந்தி ராகத்தில் பாடிய ஸ்ரீமுத்துசாமி தீட்சதர், ‘லம்போதர (விநாயகர்) குருகுக (முருகா) பூஜிதே’ என்று இந்த அம்பிகையைப் போற்று கிறார்.

ஸ்ரீபிரசன்ன விநாயகர் சந்நிதி சேர்த்து ஸ்ரீஅகிலாண் டேஸ்வரி சந்நிதி ‘ஓம்’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்நிதியை தினமும் 12 முறை (48 நாட்களுக்கு) வலம் வந்தால் இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி- காலையில் லட்சுமி சொரூப மாகவும், உச்சிக் காலத்தில் பார்வதி தேவியாகவும், மாலைப் பொழுதில் சரஸ்வதியாகவும் திகழ்வதாக ஐதீகம். எனவே, இரவில் வெண்ணிற ஆடையை மட்டுமே அணிவிப்பது வழக்கம்.

இந்த தேவிக்கு அகிலாண் டேஸ்வரி, அகிலாண்ட நாயகி, அகிலாண்டவல்லி, தண்டனி, தண்டநாயகி, சிதானந்தரூபிணி ஆகிய திருப்பெயர்களும் உண்டு. அருணகிரியார்- ஞானமுதல்வி, இமயம் பயந்த மின், கவுரி, பராபரை, மங்கை, குண்டலி, திரிபுர ஆயி, நாத வடிவி, அகிலம்புரந்தவள், ஆலின் உதரம் உளள் என பலவாறு வர்ணிக்கிறார்.

சாகம்பரி அலங்காரம்!

பெளர்ணமி தோறும்  ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சந்நிதியிலுள்ள மஹா மேருவுக்கு நவாவரண பூஜை செய்யப் படுகிறது. ஆடி மற்றும் தை மாத வெள்ளிக் கிழமைகள் மற்றும் நவராத்திரி தினங்களில் அம்மனுக்கு தாழம்பூ முதலான பூக்களால் ஆன புஷ்ப பாவாடை, சாகம்பரி (காய்-கனிகளால் செய்யப்படும்) அலங்காரம் ஆகியன செய்யப்படுகின்றன.

இங்கு அம்மன் கன்னியாக இருப்பதாக ஐதீகம். எனவே பள்ளியறையில் மீனாட்சி அம்மன் நிரந்தரமாக உள்ளார். இவளை ‘படி தாண்டா பத்தினி’ என்று அழைக்கிறார்கள்.

இரவில் இங்கு எழுந்தருளும் ஸ்வாமி, ‘சொக்கர்’ எனப் படுகிறார். இரவு பள்ளியறை பிரசாதமாக வெல்லம், நெய் கலந்த ‘சொக்கர் அப்பம்’ வழங் கப்படுகிறது. காலையில் பள்ளி யெழுச்சி பிரசாதமாக பால் வழங்கப்படுகிறது.

இத்தலத்தில் வழிபாடு செய்பவர்கள் ‘அமுத ராகு’ எனும் நித்திய பதவி அடைவர். ஆடி மாதம் வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியை வணங்கி வழிபட்டால் வருடம் முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தொகுப்பு: நமசிவாயம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism