Published:Updated:

நாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா?

நாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா?
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா?

நாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா?

நாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா?

நாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா?

Published:Updated:
நாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா?
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா?

‘ஏடு தந்தானடி தில்லையிலே...’

நாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா?- ராஜராஜ சோழன் திரைப்படப் பாடலை ராகத்தோடு ஹம் செய்தபடி அறைக்குள் பிரவேசித்தார் நாரதர்.

‘சரிதான்! சிதம்பரம் கோயிலைப் பற்றி ஏதோ சொல்லப்போகிறார்’ என்ற எதிர்பார்ப்புடன் கேட்டோம்: ‘`என்ன நாரதரே, சிதம்பரத்தில் ஏதேனும் பிரச்னையா?”

‘`நான் பாடிய பாட்டை வைத்து `சிதம்பரம்’ என்று நீரே முடிவு செய்துகொண்டால் எப்படி? நான் சொல்லப்போகும் விஷயமே வேறு...’’ என்று பீடிகையுடன் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார் நாரதர்.

முன்னதாக, உபசரிப்பாக நாம் கொடுத்த வில்வப்பழ ஜூஸைப் பருகியவர், ‘‘ஆஹா! சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமான பானம்’’ என்று பாராட்டிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

‘‘நான் சொல்ல வந்தது, பாட்டில் இடம்பெறும் ஊரைப்பற்றி அல்ல; அந்தப் பாடல், யாரைக் குறித்துப் பாடப்பட்டதோ அந்த ராஜராஜ சோழனைப் பற்றியது.

தஞ்சைப் பெரிய கோயிலிலிருந்து காணாமல் போன ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவியார் சிலைகள் சமீபத்தில் குஜராத்திலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்ட விஷயம் நமக்குத் தெரியும். அதேபோல், வேறுசில கோயில்களிலிருந்தும் ராஜராஜ சோழரின் சிலைகள் காணாமல் போயிருக்கக்கூடும் என்றொரு பேச்சு நிலவுகிறது ஆன்மிக அமைப்பினர் மத்தியில்.’’

‘‘எதன் அடிப்படையில் இப்படியான பேச்சு...’’

நாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா?

நாம் கேட்டு முடிப்பதற்குள் இடைமறித்து பதில் சொன்னார் நாரதர். ‘`நான் கும்பகோணம் சென்றிருந்தபோது நண்பர் ஒருவர் தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். ‘ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு அவர் மகன் ராஜேந்திர சோழன், ஐப்பசி சதய நாளில் தன் தந்தைக்குச் சிறப்புச் செய்ய நினைத்து, பல கோயில்களில் சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். மேலும், விழாவின்போது வீதியுலா வரும் இறைவனைத் தன் தந்தை தரிசிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், ராஜராஜன் சிவபெருமானை வழிபடும் வகையில், அவரது திருவுருவச் சிலையைக் குறிப்பிட்ட சில ஆலயங்களில் செய்துவைத்ததாகக் கல்வெட்டுத் தகவல்கள் இருக்கின்றன.

பாபநாசம் 108 சிவாலயத்தில் அம்பிகை சந்நிதி வாசலில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. தொல்லியல்துறை அந்தக் கல்வெட்டை படியெடுத்து வெளியிட்டுள்ளது (எண் 99/1986). அந்தக் கல்வெட்டு தரும் செய்தியின்படி, கோயிலில் ராஜராஜ சோழன் சிலை இருந்திருப் பதை ஊகித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தற்போது கோயிலில் ராஜராஜ சோழன் சிலை காணப்படவில்லை. இப்போது அந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

ஆகவே, கல்வெட்டு தகவலின் அடிப்படையில், இக்கோயிலில் ராஜராஜ சோழனின் சிலை இருந்தது குறித்து ஆய்வு செய்து, உரிய  நடவடிக்கை எடுத்து, சிலை மீட்கப்பட்டால், நடைபெற வுள்ள கும்பாபிஷேகம் முழுமையானதாக அமையும்' என்று தெரிவித்தார்.

நாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா?

இந்த விவரங்களையே விண்ணப்பமாக,   முதலமைச் சரின் தனிப் பிரிவுக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் இறையடியார் குழுவினர் அனுப்பியுள்ளார்களாம்'' என்ற நாரதர் தொடர்ந்து, தமிழக அரசின் தொல்லியல்துறை வெளியிட்டிருக்கும் கல்வெட்டுச் செய்திக் குறிப்பை யும் நம்மிடம் கொடுத்தார். வாங்கிப் பார்த்த நம் மனதில், ‘இன்னும் எத்தனைக் கோயில்களில் ராஜராஜ சோழன் சிலைகள் காணாமல் போயிருக்கின்றனவோ’ என்ற கேள்வி எழுந்தது. அதை அப்படியே நாரதரிடமும் கேட்டோம்.

‘`ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்’’ என்று பெருமூச்செறிந்த நாரதர்,  அடுத்த செய்திக்கு மாறினார்.

``கும்பகோணம் அருகில் `ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம்’ அமைப்பின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்திருக்கிறது. அதுபற்றி உமக்குத் தெரியுமா?''

‘`ராஜராஜ சோழன் சிலையை  மீட்பதற்கான உண்ணா விரதப் போராட்டமா?’’

``இல்லையில்லை.. இது, கோயிலுக்கு வரும் பக்தர்களின் பிரார்த்தனை சம்மந்தப்பட்டது'' என்ற நாரதர், அதுபற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

‘`சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஓர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், `கோயில்களில் பக்தர்கள் பிரார்த்தனையின்பொருட்டு தனித்தனியே அகல் விளக்குகள் ஏற்றுவதற்குத்  தடைவிதித்திருப்பதாகவும் அதற்குப் பதிலாகக் கோயில் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் அகண்ட தீபத்தில் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் நெய்யைச் சேர்க்கலாம்' என்று அறிவித்துள்ளது. இப்படிச் செய்வது பக்தர்களின் விளக்கேற்றும் உரிமையில் குறுக்கிடுவதாகும் என்றும், அந்தத் தடையை விலக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்தான் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். இந்த விஷயத்தில் பக்தர் களின் உணர்வைப் புரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் நல்லதொரு தீர்வைக் காணவேண்டும்’’ என்ற நாரதர், தமக்கு வந்த வாட்ஸப் தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

நாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா?

‘`அன்பர் ஒருவர் `எண்கண்’ முருகன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கே மயில் ஒன்று இறந்துகிடந்ததைக் கண்டவர், கோயில் பணியாளரிடம் அதுபற்றி விசாரித்துள்ளார். ‘இந்த மயிலுக்குக் கொஞ்ச நாளாவே உடம்பு முடியாமத்தான் இருந்தது. நாங்களும் இதுபற்றி ஆபீசரிடம் சொல்லிக் கொண்டுதான் இருந்தோம். ஆனால் அவர் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. நாங்கள் என்ன செய்யமுடியும்’ என்று அங்கலாய்த்துக் கொண்டாராம். இதுபற்றி விசாரியுங்களேன் என்று வாட்ஸப்பில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நண்பர்’’ என்ற நாரதர் நிறைவாக, ``திருப்பதிக்குச்  செல்ல வேண்டும். பயண ஏற்பாட்டைத் துரிதமாகச் செய்யும்’’ என்று அதிகாரத் தொணியில் நமக்குக் கட்டளையிட்டு விட்டுப் புறப்பட்டார்!

படங்கள்: ம.அரவிந்த்

`நாரத’ ரகசியம்!

தருமமிகு சென்னையில் பிரதானமான இடத்திலுள்ளது மீசைக் காரக் கடவுளின் திருக்கோயில். அங்கே ஸ்வாமி வீதியுலாவின்போது குடைபோடுவதற்கான பணி காலியாக உள்ளதாம்.

அந்தப் பணியை, தற்போது தினக்கூலி அடிப்படையில் தம்மிடம் ஓட்டுநராகப் பணிபுரியும் நபருக்கு ஒதுக்கவேண்டும் என்று விடாப்பிடியாக வலியுறுத்துகிறாராம், அறநிலையத்துறை தலைமையக அதிகாரி ஒருவர். அதற்குக் கோயிலின் நிர்வாகத் தரப்பில் ஒத்துழைப்பு தராததால், இங்கிருந்து அனுப்பப்படும் ஃபைல்களை ஏதேதோ  காரணங்களைச் சொல்லி திருப்பி அனுப்பிவிடு கிறாராம் அந்த அதிகாரி. இதனால் கோயிலின் பல பணிகள் தாமதப்படுகின்றன என அங்கலாய்க்கிறார்கள் இங்குள்ள பக்தர்களும் பணியாளர்களும்!