Published:Updated:

எண்பதும் நூற்றைம்பதும்!

எண்பதும் நூற்றைம்பதும்!
பிரீமியம் ஸ்டோரி
எண்பதும் நூற்றைம்பதும்!

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன், படங்கள்: குமரகுருபரன்

எண்பதும் நூற்றைம்பதும்!

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன், படங்கள்: குமரகுருபரன்

Published:Updated:
எண்பதும் நூற்றைம்பதும்!
பிரீமியம் ஸ்டோரி
எண்பதும் நூற்றைம்பதும்!

‘தருமமிகு சென்னை’- எனப் பாடிய வள்ளலார் தரிசிக்க வந்தபோது, நடை சார்த்தப் பட்டிருந்ததால், வெளியில் இருந்தபடியே, முருகப் பெருமானை வணங்கிச்சென்ற திருக்கோயில். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வந்து பல பாடல்கள் பாடி முருகப்பெருமானைப் போற்றி வழிபட்ட திருத்தலம். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்பணி செய்தும், குளம் உருவாக்கியும், ராஜ கோபுரம் கட்டியும், கந்தக் கடவுளைப் பாடல்கள் பல பாடியும் வழிபட்ட க்ஷேத்திரம்.காஞ்சி மகாசுவாமிகளாலும், வாரியார் சுவாமிகளாலும், ஏழிசை மாமணி டி.எம்.எஸ் அவர்களாலும் பாராட்டப்பட்ட இசைவாணர் புரசை அருணகிரி, பன்முறை திருப்புகழ் பாடி வழிபட்ட திருத்தலம்!

இப்படி, பல பெருமைகள் கொண்ட திருத்தலம் எது தெரியுமா?

சென்னை புரசைவாக்கத்தின் அருகில் அமைந்துள்ள சண்முக ஞானபுரம் எனும் குயப்பேட்டை தான் அது. `குயப்பேட்டை முருகன் கோயில்' என்பது புழக்கத்தில் வழங்கும் பெயர்.

எண்பதும் நூற்றைம்பதும்!

கோயிலுக்கு எதிரில் திருக்குளத்தின் நுழை வாயிலில் அழகாக அமைக்கப்பட்டிருக்கும் வளை வில் (ஆர்ச்) ஒரு புறம் பாம்பன் சுவாமிகளும் மற்றொருபுறம் வாரியார் சுவாமிகளும் சிலை வடிவில் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

300 ஆண்டுகளுக்குமுன், ‘சால்ட் குவார்டர்ஸ்’ எனும் பகுதியில் இருந்தது இந்தக் கோயில். பிரிட்டிஷாருக்கு அந்த இடம் தேவைப்பட்டதால், இப்போது கோயில் உள்ள இடத்தைத் தந்தார்களாம். அதன்படி தற்போதுள்ள இடத்தில் திருக் கோயில் அமைந்தது.

இந்தத் திருக்கோயிலுக்குத்தான், ஆரம்பத்தில் பார்த்த மகான்கள் எல்லாம் வருகை புரிந்தார்கள். 80 ஆண்டுகளுக்கு முன்னால், சரவண முதலியார் என்ற அடியார் அருணகிரிநாதரின் பெயரில் ஒரு சபையை நிறுவி, திருப்புகழ் தேவாரப் பாடல்களை மக்களிடையே பரப்பிவந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எண்பதும் நூற்றைம்பதும்!

சுவாமி திருவீதி உலா வரும்போது, அடியார்களுடன் திருமுறைப் பாடல்களைப் பாடியவாறு செல்வது அவரது வழக்கம். அருணகிரிநாதர் பெயரில் அமைக்கப்பட்ட அந்தத் திருப்புகழ் சபை, சமீபத்தில் 80-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

விமரிசையாக நடந்த அந்த விழாவில், தங்கக் குடத்துக்குப் பொட்டு வைத்ததுபோல் (பட்டு சுற்றியதைப்போல் என்றும் சொல்வார்கள்) என்பார்களே, அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தேறியது.

ஹைதராபாத் சிவா எனும் இசைவாணரின் மாணவமணிகள்- நூற்றைம்பது சிறுவர், சிறுமியர் ஒன்றிணைந்து திருப்புகழ் பாடத் தொடங் கினார்கள்.

எண்பதும் நூற்றைம்பதும்!
எண்பதும் நூற்றைம்பதும்!

திருப்புகழை `சந்தக்குவியல் திருப்புகழ்' என்பார்கள். சந்தங்கள் சன்னல் பின்னலாக இருக்கும். சில விநாடிகள் அயர்ந்தால்கூட, பாடகர் தலைகுனிய வேண்டியதுதான். அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை, நூற்றைம்பது சிறுவர்-சிறுமியரும் ‘சுருதி’ தப்பாமல் பாடியது மட்டுமல்ல; சந்தங் களையும் சாமர்த்தியமாகவே கையாண்டார்கள். குருநாதர் திருப்புகழ் பாடல் பற்றிய தகவல் களைச் சொல்ல, மாணவ மணிகள் அனைவரும் அவர் மீதே பார்வை பதித்தபடி, அவர் சொல்லும் திருப்புகழ் பாடலைப் பாடத் தயாராக... அருணகிரி நாதர் தன்னுடைய பாடல்களில் அடிக்கடி சொல்லும், குருபக்தியை மேடையில் காண முடிந்தது. 

கானத்தால் அபிஷேகம் முடிந்து, அருணகிரி நாதருக்குத் தைல அபிஷேகமும் அலங்காரங்களும் வழிபாடும் சிறப்பாகவே நடைபெற்றன. அடியார் கள் அனைவரும், திருப்புகழ் பாடிய சிறுவர்-சிறுமியரையும், அவர்கள் குருநாதரையும் மனமாற வாழ்த்தினர்.

குழந்தைகள் திருப்புகழ் பாடியதையும், அதை ஏராளமான அடியார்கள் கேட்டு ஆனந்தித்ததையும் கண்டபோது, தருமமிகு சென்னை எனும் வள்ளலார் வாக்கின் உண்மை புரிந்தது. சண்முக ஞானபுர சண்முகன், நம் சங்கடங்களைத் தீர்க்க பிரார்த்திப்போம்; குயப்பேட்டை குமரன், நம் குறைகளைத் தீர்க்கவேண்டுவோம்!

எண்பதும் நூற்றைம்பதும்!

காசி ரகசியம்!

காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அதன் உட்பொருள் என்ன? கொலையும் களவும் செய்துவிட்டு காசிக்குப் போனால், அங்கே வாழ்க்கை நிறைவுற்றால் முக்தி கிடைத்துவிடுமா?

அப்படியல்ல! காசி என்பது புருவ மத்தி. புருவ மத்தியில் நாட்டம் வை. இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற திரிவேணி சங்கமம் அங்கே உள்ளது. அந்த இடத்தில்தான் `நான்' என்ற எண்ணம் சாக வேண்டும். அதுவே முக்தி.

(திருமுருக கிருபானந்தவாரியார் அருளியது...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism