Published:Updated:

தடைகள் நீங்க... திருவோண தரிசனம்!

தடைகள் நீங்க... திருவோண தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
தடைகள் நீங்க... திருவோண தரிசனம்!

கண்ணன் கோபாலன், படங்கள்: தே.அசோக்குமார்

தடைகள் நீங்க... திருவோண தரிசனம்!

கண்ணன் கோபாலன், படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
தடைகள் நீங்க... திருவோண தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
தடைகள் நீங்க... திருவோண தரிசனம்!

காவிஷ்ணுவைப் போற்றும் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பன்னிரண்டு நாமங்கள் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஸ்ரீவைஷ்ணவர்கள் இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் ஜபித்தபடி திருமண் தரித்துக் கொள்வார்கள்.


பன்னிரு நாமங்களில் முதலாவது `ஓம்ஸ்ரீ கேசவாய நம:' என்பதாகும்.

மகாவிஷ்ணு ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த போது, அவரைக் கொல்ல கம்சன் ஏவிய அரக்கர்களில் ஒருவன் கேசி. குதிரை வடிவம் எடுத்து வந்த அசுரன் கேசியைக் கொன்றதால், ஸ்ரீகிருஷ்ணருக்கு `கேசவன்' என்ற திருப்பெயர் ஏற்பட்டதாகப் போற்றுகிறது பாகவதம்.

தடைகள் நீங்க... திருவோண தரிசனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தடைகள் நீங்க... திருவோண தரிசனம்!

இந்தத் திருப்பெயருடன் பல திருத்தலங்களில்  அர்ச்சாமூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார் திருமால். அவற்றில் ஒன்றுதான் வல்லிபுரம். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு - திருக் கழுக்குன்றம் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ளது இந்தக் கிராமம்.

இங்கு பல்லவர்களாலும், பிற்காலச் சோழர் களாலும், விஜயநகர மன்னர்களாலும் திருப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஆலயத்தில், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக அருள்காட்சி தருகிறார் ஸ்ரீஆதிகேசவ பெருமாள்.

கருவறையில் நின்ற திருக்கோலத்தில், மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் திகழ கீழிரு கரங்கள் அபய - கடி ஹஸ்தங்களைக் காட்ட, எழில்கோலத்தில் அருள்கிறார் ஆதிகேசவர். ஸ்வாமியின் இருபுறமும் ஸ்ரீ தேவியும் பூமிதேவியும் காட்சி தருகின்றனர்.  இங்குள்ள உற்சவரும் மூலவரைப் போலவே காட்சி தருவது இக்கோயிலின் தனிச்சிறப்பு.

ஸ்ரீஆண்டாள் மற்றும் ஸ்ரீஅம்புஜவல்லித் தாயார் தனித் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளி யுள்ளனர். மேலும் பக்த ஆஞ்சநேயர், விஷ்வக் சேனர், ஸ்ரீவேதாந்த தேசிகர் ஆகியோரும், பூதத்தாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களையும் இங்கே தரிசிக்கலாம்.

தடைகள் நீங்க... திருவோண தரிசனம்!

இந்தத் திருக்கோயிலில், ஒரே கல்லினால் ஆன சுமார் 20 அடி உயர தீப ஸ்தம்பம் அமைந்திருக்கிறது. கோயிலுக்குப் பின்புறத்தில் உள்ள புஷ்பபுரி புஷ்கரணி முழுவதும் அல்லி மலர்கள் நிறைந்து காட்சி தருகிறது. இந்தத் திருக்குளத்தில்தான் அம்புஜவல்லித் தாயார் அவதரித்ததாக ஐதீகம்.

கோயிலில் நடைபெறும்  சிறப்பு வழிபாடுகள் குறித்து ஆலய அர்ச்சகர் வி.எஸ்.சௌந்தரராஜ பட்டாச்சாரியாரிடம் கேட்டோம்.

‘`உத்திரம் நட்சத்திர நாளில் இந்தக் கோயி லுக்கு வந்து, ஸ்ரீஅம்புஜவல்லித் தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கி மகிழ்ச்சியான குடும்பம் அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேபோல், காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் விலக விரும்புபவர்கள், திருவோண நட்சத்திர நாளில் இந்தக் கோயிலுக்கு வந்து பெருமா ளுக்கு அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டால், தடைகள் நீங்கும் நினைத்தகாரியங்கள் நினைத்தபடி நிறைவேறும் என்பது ஐதீகம்'' என்றார்.

தடைகள் நீங்க... திருவோண தரிசனம்!

அற்புதமான இந்தத் திருக்கோயிலில் வரும் ஆகஸ்ட் மாதம் 6 மற்றும் 7 ஆகிய தினங்களில், திருபவித்ர மகோற்சவம் நடைபெறவிருக்கிறது. ஆலய பூஜைகளில் அறியாமல் ஏற்பட்ட தோஷங்களை நீக்குவதற்காகவும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும், உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதற்குமான வேண்டுதல் சங்கல்பத்துடன் நடைபெறும் வைபவம் பவித்ரோற்சவம். பக்தர்கள், இந்த பவித்ரோற்சவத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதோடு, நேரிலும் சென்று இந்த வைபவத்தில் கலந்துகொண்டு ஸ்ரீஆதிகேசவப் பெருமாளின் திருவருளைப் பெற்று வரலாம்.

எப்படிச் செல்வது..?: செங்கல்பட்டிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லிபுரம். செங்கல்பட்டிலிருந்து இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மட்டுமே பேருந்து வசதி உண்டு.

(ஆலயத் தொடர்புக்கு: எஸ்.சௌந்தரராஜ பட்டாச்சாரியார்: 09962565956).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism