Published:Updated:

ஆன்மிகத் துளிகள்!

ஆன்மிகத் துளிகள்!

ஆன்மிகத் துளிகள்!

ஆன்மிகத் துளிகள்!

Published:Updated:

அர்த்தநாரீஸ்வரர்

ஆன்மிகத் துளிகள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிழகத்தில் ஐந்து இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் காண முடியும்! உமையருபாகனாக ஈசன் தரிசனம் தரும் இந்தத் திருவுருவை (விக்கிரகங்களை) திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரில் உள்ள சிந்தாமணிநாதர் கோயிலிலும், திருச்செங்கோட்டிலுள்ள கோயிலிலும், திருக்கண்டியூரிலும், திருமழப்பாடியிலும், காஞ்சிபுரத்திலும் தரிசிக்க முடியும்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கையில் ஒரு கோல் வைத்திருக்கிறார். இந்த அமைப்பு, தமிழகத்தில் வேறெங்கும் காண்பதற்கரிய ஒன்று! திருக்கண்டியூரில் அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த நிலையில் உள்ளார். திருமழப்பாடியில் இடப்பகுதிக்குப் பதிலாக வலப்பகுதியில் உமாதேவியின் (பெண்) உருவம் உள்ளது. காஞ்சி புரம் கயிலாசநாதர் கோயிலில் அபயமுத்திரை இல்லாமல் காட்சி தருகிறார் அர்த்தநாரீஸ்வரர்!

மிகப்பெரிய விளக்கு!

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள செட்டிகுலங்காரதேவி திருக்கோயிலில், 11 அடி உயரத்துக்கு ஒரு விளக்கு இருக்கிறது. இந்த விளக்கு 1000 திரிகள் ஏற்றக்கூடிய வகையில், 13 சுற்றுக் கிளைகளுடன், பெரிய ஆலமரம்போல் அமைந்துள்ளது. கன்மெட்டல் என்ற உலோகத்தால் செய்யப்பட்ட இந்தத் திருவிளக்கு, 1,500 கிலோ எடை கொண்டது. இதுவே, இந்தியக்கோயில் விளக்குகளில் மிகப்பெரியதாம்!

ஆன்மிகத் துளிகள்!


வியாழக்கிழமை தரிசனம்

திருப்பதி - திருமலையில் பெருமாள்... எப்போதும், தம் கண்களை மறைத்து  இட்டிருக்கும் திருநாமத்தை அகற்றிவிட்டு, மெல்லியதான திருநாமம் ஒன்றை இட்டுக்கொண்டு, மலர் அலங்காரம் பெற்று திருநயனம் திறந்து சேவார்த்திகளுக்கு அருள்பாலிக்கிறார். இந்தத் தரிசனம், 'பூலங்கி தரிசனம்’ எனப்படும். வாரந்தோறும் வியாழன் மாலை முதல் வெள்ளி காலை வரை இந்தத் தரிசனத்தைக் கண்டுகளிக்கலாம்.

ஷனகரின் இயற்பெயர்!

சீதையின் தந்தை பெயர் 'ஜனகன்’ என்பது வழக்கில் இருந்தாலும், உண்மையில் அது ஒரு வம்சத்தின் பெயரே! சீதையின் தந்தை பெயர், ஸீரத்வஜ ஜனகர். அதேபோல், சூர்ப்பணகையின் கணவர் பெயர்- வித்யுத் ஜிஹ்வர்; ராவணனின் தந்தை- விச்ரவஸ்; ராவணனின் தாயார்- கேசுகீ!

- எம்.முருகேசன், திருச்சி-21

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism