Election bannerElection banner
Published:Updated:

முப்பத்து ஆறு படிகள் ஏறினால்... முக்தி நிச்சயம்!

திருவாதிரை தரிசனம்!

முப்பத்து ஆறு படிகள் ஏறினால்... முக்தி நிச்சயம்!
##~##
ஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது, சுந்தரபெருமாள் கோவில். இங்கிருந்து வலங்கைமான் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருநல்லூர் திருத்தலம்.

இந்தத் தலத்து இறைவன் திருநாமம் - ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர். அகத்திய முனிவருக்கு சிவனார் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் என்பதால் ஸ்வாமிக்கு இந்தத் திருநாமம். அம்பாள் - ஸ்ரீகல்யாண சுந்தரி.

இறைவனை அடைவதற்கு ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், மகா தத்துவம் என்பது முதலான 36 படிகள் உள்ளனவாம். எனவே இதனைக் குறிக்கும் வகையில், இங்கே... மூலவரைத் தரிசிக்கச் செல்வதற்கு முன், முப்பத்து ஆறு படிகள் ஏறிச் செல்லவேண்டும். இந்தப் படிகளைக் கடந்து, இறைவனை மனதாரத் தொழுதால், முக்தி நிச்சயம் என்பார்கள்! இன்னொரு சிறப்பு... பெருமாள் கோயிலில் சடாரி சார்த்துவது போல், இங்கும் சடாரி சார்த்தி ஆசீர்வதிக்கிற சம்பிரதாயம் உண்டு.

முப்பத்து ஆறு படிகள் ஏறினால்... முக்தி நிச்சயம்!

குந்திதேவிக்கு சாப விமோசனம் கிடைத்தது, மாசி மக நன்னாளில். எனவே, அன்றைய தினம் இங்குள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும் விலகும் எனப் பெருமைகள் கொண்ட ஆலயத்தில், அழகிய கோலத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீநடராஜர்.

மார்கழி திருவாதிரையில், அபிஷேகம் செய்து வணங்கினால், கஷ்டங்கள் யாவும் விலகும்; கல்யாண யோகம் கைகூடும் என்பது ஐதீகம்! திருநல்லூருக்கு வாருங்கள்; இனி எல்லாம் நல்ல காலம்தான்!

                     - கோ.சுதர்சனன்
படங்கள்: ர.அருண்பாண்டியன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு