Published:Updated:

மதுரை சித்திரைத் திருவிழா நிறைவு - மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர் ( படங்கள்)

மதுரை சித்திரைத் திருவிழா நிறைவு - மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர் ( படங்கள்)
மதுரை சித்திரைத் திருவிழா நிறைவு - மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர் ( படங்கள்)

மதுரை: தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக அழகர்மலையைவிட்டு கிளம்பிய அழகர், ஒரு வாரத்திற்கு பிறகு இன்று அதிகாலையில் மீண்டும் மலைக்கு திரும்பினார்.
 

மதுரை சித்திரைத் திருவிழா நிறைவு - மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர் ( படங்கள்)

கடந்த 23 ஆம் தேதி மாலை, அழகர் கோயிலிலிருந்து கிளம்பிய கள்ளழகர், பொய்க்கரைபட்டி, கள்ளந்திரி வழியாக பல மண்டகப்படிகளில் அமர்ந்து, மக்களுக்கு ஆசி வழங்கினார். 24 ஆம் தேதி மூன்றுமாவடி பகுதியில் பக்தர்களின் எதிர்சேவையை எதிர்கொண்டு, மாலையில் தல்லாகுளத்தில் தங்கினார். 25 ஆம் தேதி காலையில் தங்க குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டுடுத்தி புறப்பட்டு வைகை ஆற்றில் இறங்கினார். அதன் பிறகு, அங்கிருந்து வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு சென்றவர், தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கும், நாரைக் கும் சாபவிமோசனம் அளித்தார்.

##~~##
பின்னர், கருட வாகனத்தில் ஆஞ்சனேயர் கோயிலுக்கு புறப்பட்டார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தங்கினார். 26 ஆம் தேதி இரவிலிருந்து, 27 ஆம் தேதி காலை வரை தசாவதார நிகழ்ச்சிகள் நடந்தன. அன்று மாலை, மதிச்சியம், ஆழ்வார்புரம், வைகை ஆற்று திருக்கண் மண்டகப்படி வழியாக, தல்லாகுளத்திலுள்ள ராமநாதபுரம் ராஜா சேதுபதி மண்டபத்தில், ராஜாங்க திருக்கோலத்தில் காட்சி தந்தார் கள்ளழகர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
 
மதுரை சித்திரைத் திருவிழா நிறைவு - மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர் ( படங்கள்)

28 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லாக்கில் எழுந்தருளிய அழகர், அப்பன்திருப்பதியில் தங்கிவிட்டு இன்று அதிகாலையில், கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்மலைக்கு புறப்பட்டார். மூன்று மாவடியில் அவருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அழகரை காண வண்டி கட்டி புறப்பட்டு வந்த விவசாயிகள், தங்கள் வயலில் விளைந்த தானியங்களை, தல்லா குளம் பெருமாள் கோயிலில் காணிக்கையாக செலுத்தினார்கள்.
 
கே.கே.மகேஷ், செ.செல்மான்

படங்கள்:
வீ.சிவக்குமார்