Published:Updated:

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை
பிரீமியம் ஸ்டோரி
சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

Published:Updated:
சித்தர்கள் போற்றும் அத்ரி மலை
பிரீமியம் ஸ்டோரி
சித்தர்கள் போற்றும் அத்ரி மலை
சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

சித்தர்களால் பெருமை பெற்ற மேற்கு மலைத்தொடரின் ஒரு பகுதிதான் அத்ரி தபோவனம். அத்ரி மாமுனிவரும் அவரின் சீடர்களும் தங்கி அருள்பாலித்த இடம்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து தென்காசி செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவிலுள்ளது ஆழ்வார்குறிச்சி. இவ்வூரில் அண்ணாசிலை அருகில் இடப் புறமாகப் பிரியும் சாலையில் சுமார் 13 கி.மீ. தூரம் பயணித்தால், கடனாநதி அணையை அடைய லாம். இங்கிருந்து சிறிது தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது அத்ரி தபோவனம்.

இறையருள் நிறைந்த இந்தத் தலத்துக்கு ஒரு முறை சென்று வந்தால் போதும், நமது கிரக தோஷங்கள் நீங்கும்; வாழ்வில் சந்தோஷம் பெருகும்.

மேற்குமலைத் தொடரில் மிக அற்புதமான க்ஷேத்திரங்கள் பல அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமானது பொதிகை. தென்கயிலை எனப் போற்றப் படும் பொதிகையில், அகத்தியர் தங்கியிருந்து தமிழ் வளர்த்ததாகச் சொல்வார்கள். இன்றும் அவர் பொதிகையில் வசிப்பதாக நம்பிக்கை உண்டு.

அடுத்தது மகேந்திரகிரி. இந்த மலைப்பகுதியில் முருகப் பெருமான் மற்றும் ஆஞ்சநேயரின் திருப்பாதத் தடங்களை தரிசிக்க லாம். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வரையிலும் பக்தர்கள் மகேந்திரகிரிக்குச் சென்று வந்தார்கள். மகேந்திரகிரியில் ராக்கெட் தளம் அமைக்கப்பட்ட  பிறகு, பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுவிட்டது.

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மற்றோர் அபூர்வமான மலை சதுரகிரி. சித்தர்களால் சிறப்பு பெற்ற க்ஷேத்திரம். அருள்மிகு சந்தன மகாலிங்கம், அருள்மிகு சுந்தர மகாலிங்கம் அருளும் சதுரகிரி தரிசனம், வாழ்வில் நல் திருப்பங்களை அளிக்கவல்லது. இந்த க்ஷேத்திரங்களின் வரிசையில் வரும் மிக அற்புதமான தலம்தான் அத்ரி மலை (அத்ரி நாத்). 

இந்த தபோவனத்தில், அத்ரி மகரிஷி தன் குடும்பத்தோடு வாசம் செய்வதாக நம்பிக்கை. வடக்கேயுள்ள `கேதார்நாத்' திருத்தலம் போன்று, தெற்கே மகிமைபெற்று திகழ்கிறது அத்ரி நாத் எனப்படும் அத்ரிமலை.

அகத்தியர் பொதிகை மலைக்கு வருவதற்கு முன்பே இந்த பகுதியில் வாழ்ந்தவர் அத்ரி மகரிஷி. சப்த ரிஷிகளில்  முதன்மை பெற்றவ ரான அத்ரி மகரிஷி வாழ்ந்த இடம் என்பதால், இதை `அத்ரி மலை' எனப் போற்றுகிறார்கள்.

இந்த மலைக்கு வந்து வழிபட் டால், அத்ரி, அகத்தியர், கோரக்கர் போன்ற தவசீலர்களின் திருவருளைப் பெறுவதுடன், சிவனாரின் அனுக்கிரகத்தையும் பரிபூரணமாகப் பெறலாம்.

அத்ரி மலையை தரிசிப்பது, கயிலை மலையை தரிசிப்பதற்கு ஒப்பானது என்று சிலிர்ப்புடன் விவரிக்கின்றன ஞானநூல்கள். தீவினைகள் நீங்கவும், வாழ்வில் வளர்ச்சி காணவும், தோஷங்கள் விலகி சந்தோஷம் பெருகவும் இத் தலத்தை நாடி வந்து வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

இரண்டு வழிகள்

த்ரி மலை பயணத்துக்கு இரண்டு வழிகள் உண்டு. மழை இல்லாத காலத்தில் கடனா நீர்த் தேக்கம் வறண்டு கிடக்கும். அப்போது, கடனா நீர்த்தேக்க பகுதியின் உள்ளே உள்ள வழியா கச் செல்லலாம். இந்த வழியில் செல்லும் போது, பயண தூரம் சுமார் 2 கி.மீ. அளவுக்குக் குறையும்.
ஆனால் மழை பெய்து கடனா நதி நீர்த்தேக்கம் நிறைந்து விட்டால்,  கரையின் வழியே பயணித்து  கல்லாற்றை அடைந்து,  அங்கிருந்து அத்ரி மலைக்குச் செல்லவேண்டும்.

கல்லாறு, கடனா நதி இரண்டும் ஒன்றே. தன் சீடர் கோரக்கருக்காக கங்கையை இந்த மலைப்பகுதிக்கு வரைவழைத்தாராம் அத்ரி மகரிஷி. அந்த நதிக்குக் கருணை நதி என்றும் பெயர் வைத்தாராம்.   இந்தப் பெயரே பிற்காலத்தில் `கடனா நதி' என்று மருவியதாகச் சொல்கிறார்கள்.

`கல்லாறு' என்ற திருப்பெயர் ஏற்பட்டது எப்படி?

இந்த நதிக்கடியில் கிடக்கும் கற்கள் சில, சிவலிங்க ரூபத்தில் திகழ்கின்றனவாம். அன்பர்கள் பலரும் அவற்றை எடுத்துச்சென்று  ஆவுடையில் பிரதிஷ்டை செய்து, சிவலிங்கமாக வழிபடுகிறார்கள். புனிதமிகு கற்களைக் கொண்ட இந்த நதிக்கு `கல்லாறு' எனும் பெயர் வந்தது இப்படித்தானாம்!

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

தெய்வ மூலிகைகள்!

டனா நதியைக் கடந்து பயணிக்கும்போது, காற்றில் மிதந்து வரும் மூலிகை வாசம், நாசித் துவாரங்களில் நுழைந்து சிந்தையைச் சிலிர்க்கவைக்கும்.

ஆம், பல அற்புத மூலிகைகளால் நிறைந்தது இந்த மலைப்பகுதி. விஷ்ணு கிரந்தை என்னும் ஒரு மூலிகைச் செடி இங்குண்டு. இது, விஷக் காய்ச்சலைக் குணப்படுத்த வல்லது. அம்மான் பச்சரிச்சி  மூலிகை, தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும். இங்கு கிடைக்கும் சஞ்ஜீவி மூலிகை இதய நோய்களுக்கு அருமருந்து. சர்க்கரை வேம்பு என்ற மூலிகைச் செடி, சிறுநீரகக் கல்லடைப்பு நீங்க, மருந்தாகத் திகழ்கிறது. அதேபோல் இந்தப் பகுதியில் கிடைக்கும் வலம்புரி காய், இடம்புரி காய் எனப்படும்    காய்களை ஹோம குண்டத்தில் பயன்படுத்துவார்களாம். அப்போது எழும்பும் நறுமணம், சுவாசப் பிரச்னைகளைச் சீர் செய்யும் என்கிறார்கள்.

புளிஆரை எனும் மூலிகை, உணவுப் பொருள்களைக் கெட் டுப் போகாமல் பாதுகாக்க உதவுகிறது. இந்தப் `புளிஆரை' புளிப்புத்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், வாதம் மற்றும் தோல் பிரச்னைகளுக்கு மருந்தாகத் திகழ்கிறது. இந்த மலையின் அடிவாரத்தில்   `மயில்கொன்றை' எனும் மூலிகை உண்டு. இது, உடலின் அனைத்து நோய்களையும் தீர்க்கவல்லதாம். அதேபோல், நாரயண சஞ்சீவி எனும் மூலிகை மூச்சிறைப்பு பாதிப்பை விலக்கும், `தென்றலாடும் பாவை' எனும் மூலிகை விஷம் நீக்கும், `ஆரோக்கிய பச்சிலை' தேக பலம் அளிக்கும் என்கிறார்கள்.

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

இவையெல்லாம் எங்கிருக் கின்றன என்பது, மூலிகை மருத்து வத்தோடு சம்பந்தப்பட்டவர் களுக்கே தெரியும்; மற்றவர்கள் இவற்றை இனம் காண்பது, எளிதில் இயலாத காரியம்.

ஆனாலும் அத்ரி மலைக்குச் செல்லும்போது, இந்த மூலிகை களைத் தழுவியபடி வரும் காற்றை சுவாசித்தாலே போதும், நம் உடற்பிணிகள் அனைத்தும் நீங்கிவிடும்!

மூலிகைகள் மட்டுமின்றி  இரு முக ருத்ராட்ச மணிகளும் இந்த மலைப்பகுதியில் கிடைக்கின்றன.

`இது இந்த மூலிகை' என்று நாமகவே முடிவுசெய்துகொண்டு, அவற்றைப்  பறித்து பயன்படுத்த முயற்சிசெய்யக் கூடாது. அது ஆபத்தில் முடியலாம். ஆகவே, யாத்திரை செல்பவர்கள் கவன மாக இருக்கவேண்டும்.

அதேபோல், யாத்திரையாக வரும் அன்பர்கள் மூலிகை வேண் டும் என்ற எண்ணத்தில் இங்குள்ள செடிகளில், மரங்களிலிருந்து இலைகளைப் பறிப்பதையும், கனிகளைக் கொய்வதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.  நமது அறியாமையால், அரிய மூலிகைகளைப் பாழ்படுத்தக் கூடாது.
`இந்த மலை முழுவதுமே சித்தர்கள் வியாபித்து இருக்கிறார் கள்' என்கிறார்கள் பக்தர்கள். மலைப் பகுதியில் இருக்கும்போது, எச்சில் துப்புவதாக இருந்தாலும் கூட, கைகளைத் தட்டி ஓசை எழுப்பிவிட்டே உமிழ்கிறார்கள்.  

அத்ரி மலையில் சித்தர் பெரு மக்கள் நிறைந்திருப்பதால், அவர்களின் கவனத்தை ஈர்த்து அனுமதி பெறவே கைத்தட்டி ஓசை எழுப்புகிறார்களாம் அன்பர்கள். ``மலையில் சூட்சும மாக அமர்ந்து தவம் செய்யும், உலவும் சித்தர்களுக்கு இடைஞ்சல் தராமல், அடியெடுத்து வைப்ப திலும்கூட கவனமாக இருப்போம்'' என்கிறார்கள் பக்தர்கள்.

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

கோரக்கர் குகை!

த்ரிமலைக்குச் செல்லும் வழியில் கடனா நதியைக் கடந்து  மலைக்குச் செல்லும் வழியில், கோரக்கர் குகையை தரிசிக்கலாம்.

சதுரகிரி மலையிலும் கோரக் கர் குகை இருக்கிறது. ஆனால், இங்கே அத்ரி மலையிலுள்ள கோரக்கர் குகைச் சுவர்கள்  வித்தியாசமாக - சுண்ணாம்புப் பாறைபோன்று காட்சியளிக்கின்றன. விபூதியைக் கொட்டிவைத்தது போன்றும் தெரிகிறது. சாம்பலாக விபூதியில் கோரக்கர் பிறந்ததை நினைவூட்டும் வகையில், இங்கே அவர் தவம் செய்த குகையும் இப்படி விபூதி பூசியது போன்று திகழ்கிறதோ?!

போகர்பிரான், பழநியில் அருளும் நவ பாஷாண முருகன் சிலையை உருவாக்கிய இடம் அத்ரி மலையே என்றும் சிலர் சொல்கிறார்கள். அந்த விக்கிர கத்தை உருவாக்கிய பிறகு, மீதமான ஒளஷதங்களே இங்கே மூலிகைப் பாறையாகத் திகழ்கிறது என்ற நம்பிக்கையும் உண்டு.

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

கோரக்கர் குகைக்கு முன்ன தாக, இஸ்லாமிய மகான் ஒருவரது குகை ஸ்தலம் உள்ளது. சடமலை மகான் என்கிறார்கள். அத்ரி மலைக்கு சடைமலை என்றும் பெயர் உண்டு. கேரள மாநிலத்திலிருந்து அத்ரி மலைப் பகுதிக்கு வந்த இந்த மகான், இங்கு அவர் தங்கியிருந்த குகையிலிருந்து மண்ணெடுத்துக் கொடுத்து, அன்பர்களின் நோய் தீர்த்து வந்தாராம். பிணிகள் நீங்கியதோடு, அவரின் அருளால் விவசாயம், வியாபாரம் செழித்தன மக்கள் வாழ்வும் சிறப்புற்றதாம். இன்றைக்கும் அத்ரி மலைக்கு வரும் அன்பர்கள் இந்த மகானின் குகைக்கும் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். 

இந்த மகானின் குகையையும், கோரக்கர் குகையையும் தரிசித்த பிறகு, அங்கிருந்து சிறிது தூரம் நடந்தால் போதும், அத்ரி மலை யின் பிரதானமான திருக்கோயிலை அடைந்துவிடலாம்.

கோயில் அமைந்திருக்கும் அந்த இடத்தையே அத்ரி தபோவனம் என்கிறார்கள் பக்தர்கள்.

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

காவல் நாயகி வனதுர்கை!

த்ரி தபோவனத்தில் நுழையும் அன்பர்கள், முதலில் தரிசிப்பது, அருள்மிகு வனதுர்கையையே!

இந்தப் பகுதியின் காவல் தெய்வம் இந்த துர்கை. அன்பர்கள் பலர் வழிபாட்டின் பொருட்டு அத்ரி தபோவனத்தில் இரவில் தங்குவது வழக்கம். அப்படிச் சிலர், ஒருமுறை இரவில் இங்கு வரும்போது, கடனாநதியை கடந் ததுமே `ஜல் ஜல்' எனும் கொலுசு ஒலியைக் கேட்டார்களாம். மலைக்குமேல் கோயிலை அடை யும்வரை, தொடர்ந்து ஒலித்ததாம் கொலுசுச் சத்தம்.

பின்னர், பெரியவர்கள் மூலம் அம்பிகையே தங்களுக்குப் பாது காவலாக வந்ததை அறிந்து சிலிர்த்தார்களாம்.

மலைக்கு வரும் அன்பர்கள், வழிபாடு முடிந்து திரும்பி கடனா நதியைக் கடந்து செல்லும்வரை, அவர்களுக்குப் பாதுகாப்பாக நின்று அருள்பாலிப்பவள் இந்த வனதுர்கை என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தீர்க்கமான கண்கள், சிரித்த முகத்துக்கு சொந்தக்காரி. பக்தர் கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் அவளை அலங்கரித்து வணங்குகிறார்கள்.  துர்கை என்றாலே கோட்டம் என்று பொருள். கோட்டம் என்பதற்குக் `காவல்' என்று அர்த்தம். ஆக, இவளின் பெயரில்... அதாவது, கோட்டையப்பன், கோட்டை யம்மாள் என்று குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

வனதுர்க்கைக்கு அமாவாசை, பெளர்ணமி முதலான விசேஷ தினங்களிலும், விழாக் காலங் களிலும் சிறப்பு அபிசேகம், அலங்கார வழிபாடுகள் உண்டு.

இந்த அம்பிகையை அலங் கரித்து, மலைக்கு மேல் அத்ரி முனிவர் உருவாக்கிய கங்கை யிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து வைத்து பூஜை செய்கிறார்கள்.

தீர்த்தம் எடுத்து வைத்து வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த வன துர்கையை வணங்கினால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

கோரக்கரின் வேண்டுகோள்!

த்ரி தபோவனத்தில்  திகழும் ஆலயம், அவரின் பெயரால் அழைக்கப்படாமல், கோரக்கரின் பெயரிலேயே அழைக்கப் படுகிறது. ஏன் தெரியுமா?

சதுரகிரியில் தவம் செய்து வழிபட்டுக்கொண்டிருந்த கோரக் கருக்கு, அத்ரி மகரிஷியைக் காணவேண்டும் அவருக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்று தீராத ஆவல்.

எனவே, விரைவில் அத்ரி மலைக்குப் புறப்பட்டுவிட்டார்.  அத்ரி மலையின் அடிவாரத்தை அடைந்தவர், கடனா நதிக்கு சற்று கீழ்புறமாக அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அதன் பலனாக அவருக்குச் சிவசைலம் ஈசனின் தரிசனம் கிடைத்தது.

அவரைக் கண்டதும் ஆனந்தக் கூத்தாடினார் கோரக்கர். தான் தேடிவந்த குருநாதர் அத்ரி  மகரிஷி அவர்தான் என்று நினைத்து வணங்கி நின்றார்.

அப்போது சிவனார், “நான் சிவசைலநாதன். நீ தேடி வந்த அத்ரி மகரிஷி, அதோ தெரிகிறதே...  அந்த மலையிலுள்ள தபோ வனத்தில் இருக்கிறார்” என்று வழிகாட்டி அனுப்பிவைத்தார்.

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

(ஆழ்வார்குறிச்சியிலிருந்து சிறிது தூரத்திலேயே சிவசைலம்  அமைந்திருக்கிறது. அன்பர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய சிவாலயம் அது) சிவனாரின் வழிகாட்டல்படி அத்ரி மலைக்கு மேல் சென்று அத்ரி மகரிஷியைச் சந்தித் தார் கோரக்கர். அதன் பிறகு, அத்ரி மகரிஷிக்கான பணிவிடை களுக்காகத் தன்னை அர்ப்பணித் துக் கொண்டார்.

 தினமும் பூஜைக்கு மலர் பறித்து வருவது, அத்ரி முனிவ ரின் தவத்துக்கு வேண்டிய உதவி களைச் செய்வது என்று கோரக்கரின் காலம் கழிந்து கொண்டிருந்தது.

ஒருமுறை, பூஜைக்காக மலர்கள் பறிக்கச் சென்றார் கோரக்கர். அப்போது, அத்ரி தபோவனத்தின் கிழக்கே மீண்டும் அவருக்குச் சிவசைல நாதரின் தரிசனம் கிடைத்தது. இறைவனின் தரிசனத்தால் மெய்ம்மறந்த கோரக்கர், அந்த இறைவனை எப்போதும் தரிசித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்பினார்.

தனது விருப்பத்தை அத்ரி மகரிஷியிடம் தெரிவித்தார். சீடரின் மேலான அசையை குருநாதர் நிராகரிப்பாரா?  உடன டியாக, அருள்மிகு  சிவசைல நாதரை அத்ரி தபோ வனத்தில் பிரதிஷ்டை செய்தார்.  அப்படி அவர் பிரதிஷ்டை செய்த சிவனார் அத்ரி பரமேஸ்வரர் என்றும், அவருக்கான அம்பிகை அத்ரி பரமேஸ்வரி என்றும் திருப்பெயர் பெற்றனர். ஆனால் கோயிலுக்கு, `கோரக்கர் ஆலயம்' என்றே திருப்பெயர் சூட்டினார்.

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

இரண்டு லிங்கங்கள்!

திருக்கோயிலை வலம் வர துவங்கினால், இடதுபுறம் இரட்டை விநாயகர்கள் உள்ளனர். தொடரும் வலத்தில், மகிஷாசுரவர்த்தினி, அத்ரி, அகத் தியர் ஆகியோரை தரிசிக்கலாம். கோயிலின் தென்புறச் சுவரில் தட்சிணாமூர்த்தி, கோயிலின் பின்புறத்தில் பிரம்மா ஆகியோர் அருள்கின்றனர். வடக்குப் புறச் சுவரில் விஷ்ணு அருள்கிறார். அவருக்கு எதிர்புறம் சாஸ்தா அருள்பாலிக்கிறார்.

இந்த தெய்வங்களையெல்லாம் வணங்கி வழிபட்டுவிட்டு, மீண்டும் கோயிலின்முன் வந்தால் தேவியருடன் அருளும் முருகனை தரிசிக்கலாம். கருவறைக்கு எதிரில் நந்தி; இருபுறமும் முருகன், விநாயகர். அவர்களை வணங்கி விட்டு கருவறையைத் தரிசிக்கச் செல்லலாம். கருவறையில் சிவசக்தி அம்ச மாக இரண்டு லிங்க மூர்த்தங்கள். ஒன்று ஈஸ்வரன்; எண்பட்டை பாணத்துடன் திகழும் மற்றொன்று அம்பாளின் அம்சமாம்.

பௌர்ணமி தினங்களில் இங்கு வந்து ஆகாய கங்கையில் நீராடி, பால் சமர்ப்பித்து அம்பாளையும் ஸ்வாமியையும் வழிபட்டால், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும். அதேபோல், அமாவாசை தினங் களில் வந்து வழிபட்டால், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

ஆகாய கங்கை!

கோயிலின் அருகிலேயே ஆகாய கங்கை உள்ளது. சிறு தொட்டி போன்ற தீர்த்தக் கட்டத் தில், விக்கிரகத் திருமேனியாக காட்சி தருகிறாள் கங்காதேவி.

ஒருமுறை, அத்ரியின் சீடர்கள் தீர்த்த யாத்திரை புறப்பட்டனர். ஆனால், குருநாதருக்கு பணிவிடை செய்ய ஆள் வேண்டுமே என்பதற்காக கோரக்கர் மட்டும் இங்கேயே தங்கிவிட்டார்.

இதனால் நெகிழ்ந்த அத்ரி முனிவர், ‘மற்றவர்கள் கங்கையைத் தேடி வடக்கே செல்லட்டும். உன்னைத் தேடி கங்கையே இங்கு வருவாள்’ என்று கூறி, தமது தவ வலிமையால் உண்டாக்கிய தீர்த்தமாம் இது. தீர்த்தத் தொட்டிக்குள் சிறிதளவே தண்ணீர்; சலனமில்லாத நீர்ப் பரப்பு! சிறு மடையின் வழியே பூமிக்கடியில் செல்லும் இதன் தீர்த்தம், சுமார் 20 அடி தூரத்தில் உள்ள முகத்துவாரம் வழியே வெளியேறுகிறது. சொன்னால் நம்பமாட்டீர்கள்... தீர்த்தத் தொட்டிக்குள் பாதமும் நனையாத அளவுக்கே இருக்கும் நீர், முகத் துவாரத்தில் திபுதிபுவென கொட்டுகிறது!  ஆகாய கங்கையின் நீர் எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தால்... அது,விடை சொல்ல முடியாத இயற்கையின் விநோதம்தான்!

இதில் ஒருமுறை நீராடினால், பிறகு எந்தப் பிணியும் நம்மை அண்டாது என்பது நம்பிக்கை.

மற்றுமோர் அதிசயத்தையும் விவரிக்கிறார்கள். இந்த தீர்த்தத் தொட்டிக்குள் எப்போதாவது (பல வருடங்களுக்கு ஒருமுறை) அபூர்வமாக வெள்ளை ஆமை வந்து சேருமாம். தேவேந்திரனே இப்படி வெள்ளை ஆமையாய் வந்து, இங்கு வழிபடுவதாக ஐதீகம்.

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

தெய்வ விருட்சங்கள்!

த்ரி  தபோவனத்தில் ஒரு விருட்சத்தைப் பக்தர்கள் பயபக்தி யுடன் வணங்குகிறார்கள். ‘சகல பிணிகளும் தீர்க்கும் அமிர்த விருட்சம் இது’ என்கிறார்கள்! இது பாலை மரம். இதன் விசேஷம் என்ன தெரியுமா? பங்குனி மாதத்தின் கடைசி 5 நாட்கள், சித்திரையின் முதல் 5 நாட்கள்... இந்த பத்து தினங்களில் ஏதேனும் இரண்டு நாள், இதன் அருகில் வந்து நின்றால், பன்னீர் தெளிப்பது போன்று, நீர்த் தாரைகள் நம் மீது பொழியுமாம்.

காரணம் என்ன தெரியுமா? குறிப்பிட்ட அந்த தினங்களில், இந்த மரத்தில் அடையும் வண்டு கள்தான்! மரத்தின் நிறத்திலேயே இருப்பதால், கீழிருந்து பார்க்கும்போது வண்டுகள் கண்ணுக்குத் தெரியாது. அவற்றின் உடம்பிலுள்ள சுரப்பிகளின் நீர்தான், தூவானம் போன்று தூறிக்கொண்டே இருக்குமாம். இந்த மரத்தை நெருங்கினாலே, நம்மிடம் இருந்து பிணிகள் விலகும் என்பது நம்பிக்கை. அதனால் இதை அமிர்த விருட்சம் என்கிறார்கள்.

இன்னொரு விருட்சம் உண்டு. ஆதிசேஷ அம்சமாகக் கருதப் படும் அந்த விருட்சத்தின் கிளை யில், தலைகீழாக தொங்கியபடி உலக நன்மைக்காக தவம் செய்தாராம் அத்ரி மகரிஷி. இதன் அடிப்பகுதியில் அத்ரி வழிபட்ட சிவலிங்கம் உள்ளது! கருவறை போன்று உட்குழிந்திருக்கும் மரத்தின் பகுதி, ஆதிசேஷன் படமெடுத்திருப்பது போன்று அமைந்திருப்பது, விநோதம்தான்!

இந்த விருட்சத்தில் பெரிய நாகம் வசிப்பதாக நம்பிக்கை!

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

பக்தர்கள்   கவனத்துக்கு...

நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரம்-தென்காசி வழியில் உள்ளது ஆழ்வார்குறிச்சி. இந்த ஊரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலுள்ளது கடனாநதி நீர்த்தேக்கமும், அதையொட்டிய அத்ரிமலையும்.

தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.  அம்பாசமுத்திரம் அருகிலுள்ள ஆழ்வார்குறிச்சி யில்  இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் கடனா நதி அணைப்பகுதிக்குச் சென்று, பின் அங்கிருந்து நடந்தால் 1 மணி நேரத்தில் அத்ரி மலைக்குச் சென்றுவிடலாம்.

தினமும் காலை 6 மணியளவில் சிவசைலம் திருக்கோயிலிலிருந்து அர்ச்சகர் ஒருவர், அத்ரிமலைக்குச் செல்வார். அன்பர்களும் அதற்கேற்ப திட்டமிட்டு சென்றால், அவருடன் மலைக்குப் பயணிக்கலாம்.

அத்ரி முனிவருக்குச் சிறப்பு பூஜை அத்ரி மரத்தின் அடியில் நடக்கும். இந்தப் பூஜை ஞாயிறு, அமாவாசை, பௌர்ணமி, சித்திரை மாதபிறப்பு முதலான முக்கிய நாள்களில் நடக்கிறது.

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

வெளியூர் பக்தர்கள் தென்காசியில் முதல் நாள் வந்து தங்கியிருந்து, மறுநாள் அதிகாலையில் ஆழ்வார் குறிச்சிக்கு வந்து செல்வது நன்று.

வனப்பிரதேசம் பாதுகாக்கபட வேண்டும். எனவே, தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். பூஜை போன்ற பொருள்களை துணிப்பையில் கொண்டு செல்லவேண்டும்.

மதிய உணவை கையில் வைத் துக் கொள்வது அவசியம். இரவில் தங்குவது கடினம். தற்போது, உரிய அனுமதியின்றி புகைப் படம், வீடியோ எடுக்க இயலாது.

தனியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். புதியவர்கள், தகுந்த வழிகாட்டிகளுடனும் அனுபவசாலிகளுடனும் பயணத்தை மேற்கொள்வது அவசியம்.

தொகுப்பு: முத்தாலங்குறிச்சி காமராசு, படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism