மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது?

கேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது?

காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

? உயிருடன் இருக்கும்போது பெற்றோரை முதியோர் இல்லங்களில் வாடவிடும் பிள்ளைகள், இறந்த பின் அவர்களுக்குச் சிராத்தம் செய்வது தர்மம் ஆகுமா?

-எஸ்.ரங்கராஜன், சென்னை-44

தவறுதான். ஆனால், அவர்களுக்கும் ஒரு வழி வேண்டுமே. மேலும், சாஸ்திரங்களில் விதிக்கப் பட்ட கர்மாக்களைச் செய்வதிலிருந்து நாம் தவறி விடக்கூடாது.

பெற்றோர் உயிருடன் இருந்தபோது அவர் களை முதியோர் இல்லத்தில் சேர்த்ததற்குப் பிராயச்சித்தமாகவும், செய்த தவற்றுக்கு ஒரு பரிகாரமாக இருக்கும் என்பதாலும் கண்டிப்பாக சிராத்தம் செய்யவேண்டும். பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தவர்கள், அவர்களுக் குச் சிராத்தம் செய்யவில்லை என்றால், மேலும் அதிக பாவம் சேர்ந்துவிடும். எப்படியிருந்தாலும் ஒவ்வொருவரும் தன் முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்வது கண்டிப்பான கடமையாகும்.

? ஸ்வாமி படங்களுக்குச் சமர்ப்பிக்கும் புஷ்பங்கள் மாலை நேரத்தில் வாடிவிடுகின்றன. வாடிய புஷ்பங் களை உடனே அகற்றிவிடலாமா அல்லது மறுநாள் காலையில் புஷ்பம் சாத்தும்போதுதான் அகற்ற வேண்டுமா?

கேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது?-ஜி.ராமகிருஷ்ணன், திருநெல்வேலி

தினமும் காலையில் நீராடி உடலையும் உள்ளத் தையும் தூய்மை செய்துகொண்ட பிறகே ஸ்வாமிக் குப் புஷ்பங்கள் சாத்தவேண்டும். மாலை வேளை யிலும் மலர்களைச் சாத்தவேண்டும் என்றால், நீராடி நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அணிவிப்பதே சிறந்தது.

ஆக, மாலையில் புதிய புஷ்பங்கள் சமர்ப்பிக்கும் போது பழையவற்றை அகற்றலாம். அப்படி முடியாவிட்டால், மறுநாள் காலையில் அணிவிக் கலாம். அதில் தவறு இல்லை.

தூய்மைதான் முக்கியம். கடவுளுக்குச் சமர்ப்பிக் கப்படும் மலர்கள், நம்முடைய முன்வினைகளைப் போக்கக்கூடியவை. எனவே, எவ்வளவு மலர்கள் வேண்டுமானாலும் ஸ்வாமிக்குச்  சமர்ப்பிக்கலாம்.

? கணவரின் ஜாதகத்தை எங்கே எடுத்துச் சென் றாலும் அவருக்கு பித்ரு சாபம், பிரம்மசாரி தோஷம், சாபம் என்று சொல்கிறார்கள். அவற்றுக்குப் பரிகாரமும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் பரிகாரங்களைச் செய்வதற்கு எங்களுக்கு வசதியில்லை. நான் என்ன செய்வது?

- எம்.செல்வி, மதுரை-2

‘யதா விபவ விஸ்தரம்’ என்று சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறபடி, நமது பொருளாதார சக்திக்கு ஏற்ப பூஜைகள் செய்யலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்கிச் செய்வது கூடாது.

நீங்கள், உங்களின் குலதெய்வந்தை வணங்கி வழிபட்டு, குறைகளைச் சொல்லி முறையிடுங்கள். குலதெய்வம் உங்களது நிலைமையைப் புரிந்து கொள்ளும். மேலும், தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். ஆலயங்கள், நந்தவனங்கள், மாட்டுத் தொழுவம், நீர்நிலைகள் ஆகியவற்றை முடிந்த போதெல்லாம் சுத்தம் செய்யுங்கள். இவற்றின் மூலம் உங்களுடைய பூர்வ ஜன்ம வினைகளால் ஏற்படக் கூடிய தோஷங்களும் நீங்கி விடும். கவலைவேண்டாம்.

கேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது?

? கோயிலில் நமது பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வது உயர்வானதா அல்லது சுவாமியின் பெயருக்கு அர்ச்சனை செய்வது சிறந்ததா?

-கா.தியாகராஜன், சிதம்பரம்

உயர்ந்தது, சிறந்தது என்பது போன்ற வேறுபாடுகள் கடவுள் வழிபாடுகளில் இல்லை. அவரவர் மனதின் பக்குவ நிலைக்கு ஏற்ப கடவு ளிடம் வழிபடுவதே நமது மரபு.

மக்கள் தங்களின்சக்திக்கு ஏற்றவாறு மந்திரங்கள் கூறியோ, பலவித மலர்களை அளித்தோ, திருப் பணிகளில் பங்குபெற்றோ... எப்படி முடிகிறதோ, அந்த வழியில் கடவுளை வழிபடலாம் என்று கூறுகின்றன ஞானநூல்கள்.

அர்ச்சனை என்பது, தினமும் ஆலயங்களில் அர்ச்சகர்களால் செய்யப்படும் பூஜைகள்தான் என்று ஆகமங்கள் கூறுகின்றன. சம்ஸ்கிருத மொழியில், ‘அர்ச்’ என்றால் வழிபடுதல் என்று பொருள். அர்ச்சகர்கள் செய்யும் பூஜைகள், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நன்மை ஏற்படவேண்டும் என்பதற் காகவே செய்யப்படுகின்றன.

தற்காலத்தில், நாம் நம் பெயருக்கு தனித் தனியாக அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். இதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், ஆலயங் களில் பக்தர்கள் வந்தாலும் வராவிட்டாலும் அர்ச்சகர்கள் தினமும் பூஜைகள் செய்து வருகின் றனர். உலக நன்மைக்காக அவர்கள் செய்யும் பூஜை வழிபாடுகளுக்கு நம்மால் முடிந்த உதவி களைச் செய்வது அளவற்ற நன்மைகளைத் தரும். நம்மால் உதவ முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் குறை கூறாமல் வழிபடுவது அவசியம்.

ஆக, சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்தாலும், தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்தாலும் அந்த மந்திர ஒலிகளின் சக்தி அனைவருக்கும் பொது வாகச் சென்று சேரும். தூய்மையான பக்தி மட்டும் தான் முக்கியம்.

கேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது?

? கோயிலுக்குச் சென்று வந்ததும் கால் அலம்பலாமா?

-ஆர்.ராகவி சிவராமன், கடலூர்

அந்தக் காலத்தில் வசிப்பிடமும் சுற்றுப்புறமும் தூய்மையாக இருந்தன. மக்கள், தங்கள் வீட்டின் அருகிலேயே இருக்கக் கூடிய ஆலயங்களுக்கு அனுதினமும் சென்று வழிபட்டு வந்தனர். எனவே, அவர்கள் வீட்டுக்கு வந்த பிறகு கால்களை அலம்ப வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

கோயிலிலுள்ள தெய்விக ஆற்றலின் நினைவி லேயே தங்கள் மனதை நிலைக்கவிட்டிருந்தனர். கால்களை அலம்பினால், அதன் மூலம் உடலிலும் உள்ளத்திலும் மாறுதல் ஏற்பட்டு, நம் இறை யுணர்வைப் பாதிக்குமோ என்ற எண்ணமும் அதற்குக் காரணம். ஆனால், தற்காலத்தில் அப்படி இருப்பது கஷ்டம். சென்று திரும்பும் பாதைகள், வீதிகள் சுத்தமாக இல்லாதபட்சத்தில், கால் அலம்ப எண்ணினால், தாராளமாகச் செய்யலாம்.அதில் தவறேதும் இல்லை.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002