Published:Updated:

சூரக்கோட்டை - ஸ்ரீபரமநாத அய்யனார்

சூரக்கோட்டை - ஸ்ரீபரமநாத அய்யனார்

சூரக்கோட்டை - ஸ்ரீபரமநாத அய்யனார்

சூரக்கோட்டை - ஸ்ரீபரமநாத அய்யனார்

Published:Updated:
சூரக்கோட்டை - ஸ்ரீபரமநாத அய்யனார்
சூரக்கோட்டை - ஸ்ரீபரமநாத அய்யனார்
சூரக்கோட்டை - ஸ்ரீபரமநாத அய்யனார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மண் மணம் மாறாம இருக்கிற கிராமங்களையும், அந்தக் கிராமங்கள்தான் நம்மளோட தொட்டில் பூமின்னு வாழற மக்களையும் காக்கறவர்தான் அய்யனார். ஹரிஹர அம்சம் அவர்; வெள்ளை யானைல, மனைவியர் சகிதமா நட்டநடு ராத்திரில ஊருக்குள்ளே வந்து, எங்களைக் காக்கற சாமி அவரு!'' என்று பக்தியுடன் சொல்கிறார்கள் சூரக்கோட்டை கிராமத்தினர்.

தஞ்சாவூர் அருகே சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது சூரக்கோட்டை. இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீபரமநாத அய்யனாரை வணங்காத தஞ்சாவூர் ஜில்லாக்காரர்களே அந்தக் காலத்தில் இல்லை எனலாம்.

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, ஆலயம் இருக்குமிடம் விவசாய பூமியாகத் திகழ்ந்ததாம்! அந்த ஊர் விவசாயி ஒருவர், ஒரு நாள் நிலத்தில் ஏர் பூட்டி வேலை செய்யும்போது, ஏர்க்கலப்பையில் கல் ஒன்று தட்டுப்பட்டது. அந்த இடத்தைத் தோண்டிப்பார்த்த விவசாயி, ஆடிப்போனார். காரணம், அந்தக் கல்லில் காட்சி தந்தருளியவர் அய்யனார்! அதுமட்டுமா?! 'இங்கே கோயில் கட்டி என்னைக் கும்பிட்டா, உங்க மொத்த ஊரையும் மக்களையும் நான் காப்பாத்தறேன்’ என்று அய்யனார் சுவாமி அருள... பிறகென்ன, சூரக்கோட்டை மக்களின் இஷ்டதெய்வம், கண்கண்ட தெய்வம், குலதெய்வம் என சகலமும் அருளும் சாமியானார் ஸ்ரீஅய்யனார். செல்லமாக இவரை, 'சூரக்கோட்டை ராசா’ எனப் பாசம் பொங்கச் சொல்கின்றனர், ஊர்மக்கள். ஆரம்பத்தில், அய்யனாருக்குச் சிலை வைத்து, சின்னதாகக் கோயில் கட்டி வழிபட்டனர். தங்களது குறைகளைச் சொல்லி அய்யனாரை வழிபட, அதற்குக் கைமேல் பலன் கிடைக்க... ஒரு சிலர், பொங்கல் வைத்து நன்றி தெரிவிப்பார்கள்; இன்னும் சிலர், கிடா வெட்டிக் கும்பிடுவார்கள்.  

சூரக்கோட்டை - ஸ்ரீபரமநாத அய்யனார்

சுமார் 80 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்று...

##~##
கேரளச் சித்தர் ஒருவர், ஊரில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு வந்து, அங்கேயே பல காலம் தங்கினார். அவரைப் பிள்ளையார் கோயில் சாமியார் என்றே அழைத்தனர். பிறகு, பரமநாத அய்யனார் கோயிலுக்கு அருகில் குடிசை அமைத்துத் தங்கினார் அவர். மிளகு, கண்டந்திப்பிலி மாதிரியான பொருட்களை மண்பானையில் இட்டுக் கஷாயம் தயாரித்து, அதையே உணவாக அருந்துவாராம் அந்தச் சாமியார். பரமநாத அய்யனாரைத் தரிசிக்க வந்தவர்கள், சாமியாரையும் வணங்க... அவர்களுக்கெல்லாம் அந்தக் கஷாயத்தைத்தான் தீர்த்தமாகத் தருவார். பிறகு, அவர் ஒரு மண்டலம் கடும் விரதமிருந்து, வேள்வியெல்லாம் செய்து, அய்யனார் சுவாமிக்கு சக்தியேற்ற... அய்யனார் சுவாமியின் புகழ், வெளியூர்களுக்கும் பரவியதாம்! அப்புறம், அந்தச் சாமியாரைக் காணோம் என வியப்புடன்  சொல்கின்றனர், சூரக்கோட்டை மக்கள்!

ஆலயத்தில், விவசாயியின் வழிவழியே வந்த பரம்பரையினர், பூசாரியாக இருக்கின்றனர்; ஆனாலும், பூஜை மற்றும் வழிபாடுகளை குருக் களே செய்து வருகிறார்.

அழகுற அமைந்துள்ளது கோயில். வாசலில், காவலர்கள் சகிதம் கம்பீரமாக நிற்கின்றன குதிரைச் சிலைகள்! அந்தப் பகுதியின் வழியே செல்லும் பக்தர்கள், அய்யனாரை கையெடுத்துக் கும்பிடத் தவறுவதே இல்லை. லாரி, கார் மற்றும் வேன்களில் வருவோர், வண்டியை நிறுத்திவிட்டு, காணிக்கை செலுத்தி, அய்யனாரைக் கும்பிட்டுச் சென்றால்தான், போகிற காரியம் நிறைவேறும் என்பதாக நம்பிக்கை! அதுமட்டுமின்றி, வழியில் எந்த விபத்தும் நேராமல், நிம்மதியான பயணத்தைத் தருவார் அய்யனார் என்கின்றனர் பக்தர்கள்.

சூரக்கோட்டை - ஸ்ரீபரமநாத அய்யனார்

இங்கு, ஸ்ரீஐயப்பன், அவரின் நண்பர் ஸ்ரீவாபர், ஸ்ரீமுனியாண்டவர், குழந்தைகளை எந்தத் தீயசக்தியும் அண்டாமல் காக்கும் பேச்சியம்மன், பொம்மி- வெள்ளையம்மாள் சமேதராக ஸ்ரீமதுரைவீரன் ஆகியோரையும் தரிசிக்கலாம். நமது கோரிக்கைகளை, துக்கங்களைக் கடிதமாக எழுதி, மதுரைவீரனுக்கு விண்ணப்பமாக அளித்து விட்டால், விரைவில் குறைகளைத் தீர்த்து வைப் பாராம். இங்கேயுள்ள ஸ்ரீகன்னிமூலை கணபதிக்கு 108 கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபட, நினைத்தது நிறைவேறும் என்கின்றனர். மஞ்சள் மாதா, ஸ்ரீவடிவழகி அம்மன் எனும் திருநாமத்தில் அருள்புரிகிறாள். கருவறையில், ஸ்ரீபூரணை - ஸ்ரீபுஷ்கலையுடன் கம்பீரமும் புன்னகையுமாக காட்சி தருகிறார் ஸ்ரீபரமநாத அய்யனார்.  

ஆடி மாதம் திருவிழா; ஐப்பசி மாதம், உத்திரட்டாதி நட்சத்திர நாளில், அய்யனாருக்குக் கிடா வெட்டு மற்றும் சிறப்பு பூஜைகள், யாகம் என அமர்க்களப்படுமாம். ஆனாலும், தை மாதப் பிறப்பின்போது, சீரும் சிறப்புமாகப் பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.

பொங்கல் திருநாளில் சூரக்கோட்டை, ஒரத்த நாடு என சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம் குடும்பம் குடும்பமாக வந்து, பொங்கலிடுவார்கள், மக்கள். சிலர், ஆடு- கோழிகளைப் பலியிடுவதும் நடைபெறும். அதேபோல், பௌர்ணமியில் அய்யனாருக்கும் தேவியருக்கும் சந்தனக்காப்பு, அமாவாசையின் போது விபூதிக் காப்பு என அலங்கரிப்பர். அப்போது தரிசித்தால், மண்ணும் பொன்னாகும்; மங்கலம் யாவும் சேரும் என்கின்ற னர் பக்தர்கள்.

- இரா.மங்கையர்க்கரசி
படங்கள்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism