சிவபூமி எனப் போற்றப்படும் இலங்கையில், இந்தியத் திருக்கோயில்களுக்குச் சற்றும் சளைக் காத பழம்பெரும் கோயில்கள் பல உண்டு. அவை தவிர, சமீப காலங்களில் எழுப்பப்பட்ட கோயில் களும் நிறைந்துள்ளன.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வந்த போர்ச்சுகீசியர்கள், அங்கே பல கோயில்களை இடித்து, அரிய பொக்கிஷங்களைக் கொள்ளையடித் தனர். பிற்காலத்தில், இந்த ஆலயங்களில் பல யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் முயற்சியால் கண்டறியப்பட்டு, ஆன்மிகப் பெரியவர்களின் உதவியுடன் புனரமைக்கப்பட்டன.

பின்னர் 1983-ல் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதும் பல ஆலயங்கள் இடிக்கப் பட்டன. அப்படி இடிக்கப்பட்ட ஆலயங்களும் அரசின் நிதியுதவி மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் களின் உதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றன.

இங்ஙனம், பல இடையூறுகள் ஏற்பட்ட காலங் களில்கூட, இன்னல்களைச் சந்திக்காமல் கம்பீர மாகவும் இலங்கையின் கௌரவச் சின்னமாகவும் விளங்குகிறது அருள்மிகு மாணிக்க விநாயகர் கோயில். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அந்த ஆலயத்தை தரிசிப்போமே!

கலைநயம்... கணபதி தரிசனம்!

கொழும்பு நகரில், பம்பலப்பிட்டி எனும் இடத்தில் - காலி வீதிக்கு அருகில், நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது, அருள்மிகு மாணிக்க விநாயகர் திருக்கோயில். கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் இடப் புறம் ஸ்ரீதண்டபாணி, வலப்புறம் ஸ்ரீதுவார கணபதி, இடும்பன் ஆகியோரின் சந்நிதிகளை தரிசிக்கலாம். மேலும் உற்சவத் திருமேனிகளின் சந்நிதி, துர்கையம்மன் சந்நிதி, நவகிரக சந்நிதி ஆகியவையும் அமைந்திருக்கின்றன.

கருவறையில், ஆலயத்தின் பிரதான மூர்த்தியாக அமர்ந்த நிலையில், இடம்புரி நாயகராக, நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை ஏந்தியபடி, எழிலார்ந்த திருக் கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீமாணிக்க விநாயகர்.

ஆலயத்தின் உள்புறம் சுதைச் சிற்பங்கள் வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன. ‘ஏதோ அரண்மனைக்குள் இருக்கிறோமோ?’ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும்படி, அவ்வளவு கலைநயத்துடன் காட்சி தருகிறது இந்தத் திருக்கோயில்.

கோயிலின் திருக்கதை...

கி.பி.18-ம் நூற்றாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளிலிருந்து வந்த வணிகர்கள் கொழும்பு நகரில் முதல் மற்றும் இரண்டாம் குறுக்குத் தெரு, செட்டியார் தெரு ஆகிய பகுதிகளில் குடியேறி வணிகம் செய்து வந்தனர். அவர்கள், தங்களது வணிகம் செழிக்கவும், இறைவழிபாட்டுக் காகவும் தங்கள் இஷ்ட தெய்வமான முருகப்பெருமானுக்கு ஓர் ஆலயம் எழுப்ப முடிவு செய்தனர். அதன்படி சிறிய கோயில் அமைத்து முருகப் பெருமானைப் பிரதிஷ்டை செய்து, கோயிலுக்கு ‘சம்மாங்கோடு ஸ்ரீகதிர் வேலாயுதசுவாமி திருக்கோயில்' எனப் பெயர் வைத்தனர்.

`சம்மாங்கோடு' என்பது புதுச்சேரி காரைக்காலுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தின் பெயராகும். இங்கிருந்து சென்றவர்கள், அங்கு தாங்கள் வசிக்கும் பகுதியையும் `சம்மாங்கோடு' என்றே அழைத்தார்களாம். தற்போது இலங்கையில் இந்தப் பகுதி `புறக்கோட்டை' என்று அழைக்கப் பட்டாலும், கோயிலின் பெயர் மட்டும் அப்படியே நிலைத்துவிட்டது.

முருகனுக்கு ஆலயம் ஏற்படுத்தியவர்கள், வருடம் தோறும் ஆடி மாதத்தில் ஒன்றுகூடி, கொழும்புவில் இருந்து சுமார் 270 கி.மீ. தொலை விலுள்ள கதிர்காமம் முருகனை தரிசிக்க பாதயாத்திரையாகச் சென்று வந்தனர். வழியில் பக்தர்கள் இளைப்பாறுவதற்காக பம்பிலப்பிட்டியில் ஒரு மடம் எழுப்பப்பட்டது. அந்த இடத்தில்தான் மாணிக்க விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது.

`ஆடி வேல்' திருவிழா!

1945-ம் வருடம் 2-ம் உலகப் போரின்போது காலரா உள்ளிட்ட நோய்கள் பரவியபோது, அப்போதைய அரசாங்கம் கதிர் காமத்துக்குப் பாத யாத்திரை செல்வதைத் தடை செய்தது. இந்த நிலையில், முருகனடியார் ஒருவரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘கவலை வேண்டாம். கொழும்பு பம்பலப்பிட்டியிலேயே தரிசனம் தருகிறேன்’ என்று அருளினார். அதன்படி பம்பலப்பிட்டியில் உபய கதிர்காமம், மாணிக்க விநாயகர் கோயில்களை நிர்மாணித்தனர்.

மேலும், தங்கள் பாதயாத்திரையை 10 கி.மீ. தொலைவிலுள்ள பம்பலப்பிட்டி மடம் வரை அமையும்படி மாற்றிக் கொண்டனர் பக்தர்கள். அப்படியே, ‘சாலமன் ரோட்’ கடற்கரையில் தீர்த்தமாடி, தாங்கள் எழுப்பிய முருகன் கோயி லுக்கு வந்து வழிபட்டனர்; ‘ஆடி வேல்’ விழாவை யும் சிறப்புடன் நடத்தத் தொடங்கினார்கள்.

சுமார் 175 வருடங்களாக விமர்சையாக நடை பெற்று வருகிறது இந்த விழா. நாட்டுக்கோட்டை நகரத்தார், சம்மாங்கோட்டார் சமூகத்து மக்கள் இணைந்து நிகழ்த்தும் இந்த விழாவின்போது தேரோட்டம், காவடி, கரக ஆட்டம், தவில் கச்சேரி மற்றும் பல சாகச விளையாட்டுகள் என்று நகரமே களை கட்டும்!

பம்பலப்பிட்டி மடத்தில் கி.பி.1910-ம் வருடம் ஏற்படுத்தப்பட்ட மாணிக்க விநாயகர் கோயில், 1983-ம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தின்போது, அகதிகள் முகாமாக மாறியது. பின்னர், 1995-ம் வருடம், திருப்பணிக் குழுத் தலைவர் மாணிக்க வாசகர் தலைமையில் மாணிக்க விநாயகர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, மற்ற தெய்வங்களுக்கும் சந்நிதி ஏற்படுத்தப்பட்டனவாம். தற்போது, கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீகதிர் வேலாயுதசுவாமி தேவ ஸ்தானம் நிர்வாகத்தினரால் பிள்ளையார் கோயில் சிறப்புடன் நிர்வகிக்கப்படுகிறது.

இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் அன்பர்கள், இந்த மாணிக்க விநாயகரையும் தரிசித்து, வாழ்க்கை வளம்பெற வரம் பெற்று வாருங்கள்!

- பனையபுரம் அதியமான்

உங்கள் கவனத்துக்கு...

தலத்தின் பெயர்: பம்பலப்பிட்டி.

சுவாமி: அருள்மிகு மாணிக்க விநாயகர்.

விழாக்கள்: ஸ்ரீவிநாயக சதுர்த்தி, `ஆடி வேல்' திருவிழா ஆகியவை சிறப்புடன் நடைபெறுகின்றன.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 11 மணி வரை; மாலை 6 முதல் 8.30 மணி வரை.

ஆலய அமைவிடம்: இலங்கையின் தலைநகரான கொழும்புவில், பம்பலப்பிட்டி காலி வீதிக்கு அருகில், நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது. போக்குவரத்து வசதிகள் உள்ளன.