Published:Updated:

'எங்க வயலுக்கும் வரணும் சாமி!'

'எங்க வயலுக்கும் வரணும் சாமி!'

'எங்க வயலுக்கும் வரணும் சாமி!'

'எங்க வயலுக்கும் வரணும் சாமி!'

Published:Updated:
'எங்க வயலுக்கும் வரணும் சாமி!'
'எங்க வயலுக்கும் வரணும் சாமி!'
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நா
கை மாவட்டம், சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருநகரி. ஆரம்பத்தில், திருவாலி திருநகரி என ஒரே ஊராகப் போற்றப்பட்ட இந்தத் தலம், திருவாலி மற்றும் திருநகரி என இரண்டு ஊர்களாக வளர்ந்திருக்கிறது.

புராண- புராதனப் பெருமைகள் கொண்ட இந்தத் தலத்தில், ஸ்ரீகல்யாண ரங்கநாத பெருமாளின் திருக்கோயிலில், வருடந்தோறும் தை அமாவாசை வந்துவிட்டாலே சுற்றியுள்ள 11 ஊர்களில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்களும் குதூகலமாகிவிடுவார்கள்; சின்ன படபடப்பும் மிகப் பெரிதான பிரார்த்தனையுமாக தவித்து மருகுவார்கள். 'நான் முந்தி... நீ பிந்தி’ என முண்டிக்கொண்டு நிற்பார்கள்; 'எங்கள் வயலுக்கு வரணும்’ என்று கனிவும் பக்தியும் மேலிட அழைப்பார்கள்!

என்ன காரணம்? யாரை அழைப்பார்கள்?

ஆலி தேசத்து மன்னன் நீலனுக்கு, அந்த ஊரின் குமுதவல்லி எனும் பேரழகியைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம்! ஸ்ரீபெருமாளின் பரம பக்தை அவள்; 'தினமும் ஆயிரம் அடியவர்களுக்கு என வருடம் முழுவதும் அமுது படைத்தால், திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று நிபந்தனை விதித்தாள் அவள்.

'எங்க வயலுக்கும் வரணும் சாமி!'

'அவ்வளவுதானே! அப்படியே செய்தால் போயிற்று!’ என்று அன்னதானப் பணியில் இறங்கினான் நீலன். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருட நிறைவுக்கு வரும் வேளையில், அரசு கஜானா முழுவதும் காலியான விவரம் தெரியவந்தது. கலங்கி னான் நீலன். என்றாலும், கதறித் துடிக்கவில்லை. குமுதவல்லியை அடைந்தே தீருவது எனும் குறிக்கோளுடன் இருந்தவனாயிற்றே..! அவனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளின் கட்டளையை எப்படியேனும் நிறைவேற்றும்விதமாக, வழிப்பறியில் ஈடுபட்டான்.

ஒருமுறை, ஊருக்குள் புதுமணத் தம்பதி வந்திருப்பதாக அறிந்தான் நீலன். ஆனால், அந்தத் தம்பதி ஸ்ரீதிருமாலும் ஸ்ரீமகாலட்சுமியும் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்?

'புதுமணத் தம்பதி என்றால், நிறையவே நகைகள் அணிந்திருப்பார்கள். அவர்களை மடக்கினால், நாளைய அன்னதானச் சேவைக்கு ஒரு குறையுமில்லை’ எனும் நோக்கத்தில், அந்தத் தம்பதியை வழிமறித்துக் கத்தியை நீட்டினான்; நகைகளைக் கழற்றும்படி மிரட்டினான்!

'எங்க வயலுக்கும் வரணும் சாமி!'
'எங்க வயலுக்கும் வரணும் சாமி!'

நடிக்கத் தெரிந்த மனிதர்களைப் படைத்த ஆண்டவனுக்கு நடிக்கச் சொல்லியா தரவேண்டும்?! பயந்ததுபோல் நடித்து, அனைத்து ஆபரணங்களையும் கழற்றி கொடுத்தார் திருமால். ஆனாலும், மாப்பிள்ளையின் திருப்பாதத்தில் உள்ள மிஞ்சியையும் விட்டுவிட மனமில்லை நீலனுக்கு. அதையும் கழற்றச் சொல்ல... 'முயன்று பார்த்தும் முடியலியே! முடிந்தால் நீயே கழற்றிக் கொள்!’ என்று 'பரிதாபமாக’ச் சொன்னார் மணமகன். நீலனாலும் மிஞ்சியைக் கழற்ற முடியவில்லை.

கோபம் பொங்க மணமகனைப் பார்த்து, ''நீ என்ன, மந்திரவாதியா?'' என்று நீலன் கேலியாகக் கேட்க... ''ஆமாம். மந்திரவாதிதான். உனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரட்டுமா? காதைக் கொடு!'' என்று சொல்லி, நீலனின் காதில் மெல்லிய குரலில், வீணையின் நாதமெனக் குழைந்த லயத்துடன், 'ஓம் நமோ நாராயணாய...’ எனும் மந்திரத்தை உச்சரித்தார்.

அவ்வளவுதான்... அந்த மந்திரம் காதுக்குள் நுழைந்து, புத்திக்குள் புகுந்து என்னவோ செய்ய... நீலன் விதிர்விதிர்த்து நின்றான். அவனுக்கு ஸ்ரீமகாலட்சுமி சகிதமாக திருக்காட்சி தந்தருளினார் திருமால். முதலில் மன்னனாக இருந்து, வழிப்பறிக் கொள்ளையனாகவும் மாறிய நீலன், அன்று முதல் திருமங்கையாழ்வார் எனும் திருநாமம் பெற்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.  

'எங்க வயலுக்கும் வரணும் சாமி!'

இந்தத் தலத்தின் நாயகன் ஸ்ரீகல்யாணரங்கநாதர்; தாயார்- ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார். வருவோர்க் கெல்லாம், வரங்களை வாரி வழங்கும் இறைத் தம்பதி குடிகொண்டு இருக்கும் தலம்தான் இது! ஆனாலும், இங்கே முக்கியமாகத் திருமங்கையாழ்வாரைத் தரிசிப்பதும் பிரார்த்தித்துச் செல்வதும், மிகுந்த பலனைத் தரும் என்கின்றனர், பக்தர்கள்.

சரி... தை அமாவாசையில், 'எங்கள் வயலுக்கு வரணும்’ என 11 ஊர் விவசாயிகளும் யாரை அழைக்கின்றனர்?

வேறு யாரை? திருமங்கையாழ்வாரைத்தான்! அன்ன தானம் செய்த வள்ளலாயிற்றே, இவர்!

திருமங்கையாழ்வார், வருடந்தோறும் ஸ்ரீரங்கத்தில் நடை பெறும் மஞ்சள் குளி உத்ஸவத்தைக் காணச் செல்வாராம். பிறகு திருமாலின் திருவடியை அடைந்ததும், திருநகரியை ஆட்சி செய்த சோழ மன்னன், கங்கையின் கிளை நதியாக மணிகர்ணிகா இருப்பது போல், காவிரியின் கிளை நதியை உருவாக்கினான். அருகில், மஞ்சள்குளி மண்டபத்தையும் அமைத்தான். திருமங்கையாழ்வார், மஞ்சள்குளி உத்ஸவத்தைக் காணும் திருவிழாவை விமரிசையாக இங்கேயே நடத்தி மகிழ்ந்தான்.

'எங்க வயலுக்கும் வரணும் சாமி!'

தை அமாவாசை நாளன்று, அதிகாலையிலேயே புறப்பட்டு விடுவார், திருமங்கையாழ்வார். சுற்றியுள்ள 11 திவ்விய தேசங்களுக்கும் சென்று, அங்கேயுள்ள பெருமாளின் அழகுத் திருமேனியை கண்ணாரத் தரிசித்து, அன்றிரவு அந்திசாயும் வேளையில், ஊருக்குத் திரும்பும் வைபவம் நடைபெறும். இந்தத் திருவிழாவின்போது, எந்த வயலில் திருமங்கையாழ்வாரின் உத்ஸவத் திருமேனி இறங்கிச் செல்கிறதோ, அந்த வயலில் அமோக விளைச்சல் உறுதி என்று சிலிர்ப்பு மேலிடச் சொல்கின்றனர் விவசாயிகள். 'ஆழ்வார், நம் வயலில் இறங்கமாட்டாரா..?’ என அனைத்து விவசாயிகளும் ஏங்கித் தவிக்கிற இந்த விழா, 'தாமுகந்த உத்ஸவம்’ எனப்படுகிறது; இந்த முறை... 3.2.11 அன்று துவங்கி, 5.2.11 வரை விமரிசையாக நடைபெற உள்ளது!

இன்னொரு விஷயம்... இந்த நாளில்தான், 11 கருட சேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக இங்கே நடைபெறுகிறது. இதனைக் காணக் கண் கோடி வேண்டும் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism