Published:Updated:

பாதுகா தரிசனம்!

பாதுகா தரிசனம்!

பாதுகா தரிசனம்!

பாதுகா தரிசனம்!

Published:Updated:
பாதுகா தரிசனம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருளாளர்களும் மகான்களும் பாடிப் போற்றுவதும், வேண்டித் துதிப்பதும் பகவானின் திருவடிகளையே!

பெருமாளின் அர்ச்சாவதார திருமேனி யைத் தரிசிக்க திருக்கோயில்களுக்குச் செல்லும் அன்பர்களும் பாதாதி கேசம் பக வானைச் சேவிக்கவேண்டும் என்றே வகுத் திருக்கிறார்கள். பரம்பொருளின் திருவடி தரிசனத்துக்கு அவ்வளவு மகத்துவம்! ஆமாம்... ஒருமுறை தரிசிக்க, மறுபிறவி அகற்றும் மகத்தான பொக்கிஷம், இறை வனின் பாத கமலங்கள்!

பல்வேறு தோத்திரங்களால் திருமாலை பாடித் துதித்த ஸ்ரீவேதாந்த தேசிகர், பரம்பொருளின் பாதுகா மகிமைகளையும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். கவிதார்க்கிக சிம்ஹம் என்று பிரசித்திபெற்ற இந்த அருளாளர்... ஆயிரம் ஸ்லோகங்களுடன் இயற்றிய 'பாதுகா சகஸ்ரம்’ ஓர் உன்னதப் படைப்பு!

பாதுகா தரிசனம்!

எம்பெருமானின் பாதுகையை வர்ணிக்கும் 'பாதுகா சகஸ்ர’த்தில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகமும் அற்புதமான பலன்களை அள்ளித் தருபவை. அவற்றுள் ஒன்று...

சுபப்ரணாதா பவதீ ஸ்ருதீனாம்
கண்டேஷ§ வைகுண்ட பதிம் வராணாம்;
பத்நாஸி நூனம் மணிபாத ரக்ஷே
மங்கல்யஸ¨த்ரம் மணிரஸ்மி ஜாலை...

பொருள்: ஓ ரத்தினப் பாதுகையே! சுபத்தைக் குறிக்கும் நாதமுடைய நீ, உன்னில் உள்ள ரத்தினங் களின் கிரணங்களாகிய மங்கல நாணால் பகவானை மணக்கின்ற ஸ்ருதிகளின் (வேதங்களின்) கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டுகின்றாய் போலும்!

அனுதினமும் விடியற்காலையில் நீராடி, பரந்தாமனின் படம் அல்லது விக்கிரகத் திருமுன் விளக்கேற்றி வைத்து, இந்த ஸ்லோகத்தைப் பொருளுணர்ந்து, மனம் குழைந்து பாராயணம் செய்து பிரார்த்திப்பது சிறப்பு. இதனால், கன்னிப் பெண்கள் மனதுக்கேற்ற இனிய கணவனை அடைந்து இன்புற வாழ்வார்களாம்.

- கே.நிருபமா, பெங்களூரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism