Published:Updated:

பெருந்துறை - ஸ்ரீகோட்டை முனிஸ்வரர்

பெருந்துறை - ஸ்ரீகோட்டை முனிஸ்வரர்

பெருந்துறை - ஸ்ரீகோட்டை முனிஸ்வரர்

பெருந்துறை - ஸ்ரீகோட்டை முனிஸ்வரர்

Published:Updated:
பெருந்துறை - ஸ்ரீகோட்டை முனிஸ்வரர்
##~##
கா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

த்துக் கருப்பு ஏதும் அண்டாமல், எவரையும் நோய் நொடி தாக்காமல், ஊரின் எல்லையில் இருந்தபடி ஊர் மக்களைக் காத்தருளும் தெய்வங்களைக் காவல் தெய்வங்கள், எல்லைச்சாமிகள் என்றெல்லாம் போற்றி வணங்குவார்கள், பக்தர்கள். அப்படி, ஊரைக் காக்கிற ஒரு காவல் தெய்வம்தான் ஸ்ரீகோட்டை முனீஸ்வரஸ்வாமி.

ஈரோட்டில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ள பெருந்துறை எனும் ஊரில், அழகும் வீரமும் பொங்கக் கோயில்கொண்டிருக்கிறார் ஸ்ரீகோட்டை முனீஸ்வரர்!

பெருந்துறை பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே அமைந்துள்ள, சுமார் 400 வருடங்கள் பழைமையான இந்த ஆலயத்தின் பிரதான தெய்வமாக ஸ்ரீகோட்டை முனீஸ்வரர் அருள் பாலிக்க, அவருக்குப் பரிவாரத் தெய்வமாக தன்னாசியப்பர் காட்சி தருகிறார்.

மைசூர் மகாராஜாவின் அரசாங்கப் பிரதிநிதி ஒருவன், கோயம்புத்தூர் பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி செய்து வந்தானாம். எதிரிகள் தேச எல்லைக்குள் வராமலும், அப்படி யாரேனும் வந்து போரிட்டாலும் இவனுக்கே வெற்றி கிடைக்குமாறும் காத் தருளினாராம் முனீஸ்வர ஸ்வாமி. இதனால், கோட்டை முனீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது என்கின்றனர் பக்தர்கள். இன்றைக்கும் எதிரிகளால் தொல்லை, வழக்கில் நீதி கிடைப்பதில் இழுபறி என்று அல்லலுறுவோர், இங்கு வந்து ஸ்ரீகோட்டை முனீஸ்வரரை வணங்கினால் போதும்; எல்லாப் பிரச்னைகளையும் முனீஸ்வரன் பார்த்துக்கொள்வான் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.

இதேபோல், தாழை குளக்கரை வாரணாசி என்பவன் குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்கித் தவித்தான். பிறகு, முனிஸ்வாமியின் பேரருளை அறிந்து, இங்கு வந்து வேண்டிக் கொள்ள, பிள்ளை பாக்கியம் பெற்றான்; அந்த நன்றிக்கடனாக கோயிலைப் புதுப்பித்து விரிவுபடுத்திக் கட்டினான் என்கிறது ஸ்தல வரலாறு. இன்றைக்கும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தெல்லாம் பிள்ளை வரம் வேண்டி, எண்ணற்ற பெண்கள் இங்கு வந்து மாவிளக்கேற்றியும், கரும்பு படைத்தும் வழிபட்டுச் செல்கின்றனர். கோட்டை ஸ்ரீமுனீஸ்வரனுக்கு இணையாக இருந்து, ஊர்மக்களை வாழச் செய்தருள்கிறாள், ஸ்ரீசெல் லாண்டியம்மன். அவளுக்கும் இங்கே தனிச்சந்நிதி உண்டு!

பெருந்துறை - ஸ்ரீகோட்டை முனிஸ்வரர்

விவசாயத்துக்குப் பெயர் பெற்று விளங்கும் கொங்கு மண்டலத்தில் உள்ள பெருந்துறை மற்றும் சுற்றுவட் டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொங்கலன்று இங்கே வந்து,

முனீஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு எதிரே பொங்கல் வைத்து, கட்டுக் கட்டாகக் கரும்பு படைத்து வேண்டிச் செல்வார்கள். அன்றைய தினம், சுமார் ஒரு லட்சம் பேர் திரள்வார்கள் என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பெருந்துறைக்காரர்கள்!

மாவிளக்கேற்றி அம்மனை வழிபட்டால், குடும்பமும் அந்தக் குடும்பத்தின் நிலமும் செழிக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், கரும்பு படைத்து முனீஸ்வரரை வணங்கி னால், எதிரிகள் தொல்லை இன்றி, வாழ்க்கை கரும்பு போல் இனிக்குமாம்!  

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார ஊர்க் காரர்கள், விவசாயத்துக்குப் பயன்படுத்துகிற டிராக்டர் போன்ற வண்டிகள் முதல்,  குழந் தைகள் ஓட்டிச் செல்லும் சைக்கிள் வரை... எந்த வாகனம் வாங்கினாலும், கோட்டை முனீஸ்வரருக்கு முன் வண்டியை நிறுத்தி, தீபாராதனை காட்டி, தேங்காய் உடைத்து வழிபட்ட பின்பே ஓட்டிச் செல்வார்கள்; இதனால், கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம் என்பது ஐதீகம்!

ஸ்ரீசெல்லாண்டியம்மனுக்குப் புரட்டாசி மாதத்தில்தான் பூச்சாட்டு விழாவும், பொங் கல் படையல் விழாவும் நடக்கும் என்றாலும், கோட்டை முனீஸ்வரனுக்குப் பொங்கல் வைக்கும்போது, செல்லாண்டியம்மனுக்கும் படையலிடுகின்றனர், பக்தர்கள்!

படங்களும் தகவலும்: க.அருள்பிரசன்னா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism