Published:Updated:

கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?

கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?

கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?

கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?

கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?

Published:Updated:
கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?

? நவகிரகங்களை எப்படி வலம் வர வேண்டும்? சிலர் ஏழு முறை பிரதட்சிணமாகவும் இரண்டு முறை அப்பிரதட்சிணமாகவும் வரவேண்டும் என்கிறார்கள். அது சரியா?

 -எம்.ராமகிருஷ்ணன், புனே

எல்லா கடவுள்களையும் பிரதட்சிணம் (வலம்) வருதலே சரியானது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அப்பிரதட்சிணம் வரக்கூடாது. ராகு, கேது கிரகங்கள் எதிர்த் திசையில் வலம் வருவதால், மக்களும் அப்படி வரவேண்டும் என்று சிலர் அறியாமையினால் கூறியிருக்கலாம். இதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை.

கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?

பிரதோஷ காலங்களில் சோமசூக்த பிரதட்சிணம் எனும் முறை உள்ளது. அது வேறு. ஆகமங்களில் கூறப்பட்டுள்ளவை எவையோ அவற்றைத் தற்காலத்தில் முடிந்த அளவு செய்து வருவதே நல்லது. வேண்டாம் என்று கூறியவற்றைக் கண்டிப்பாக செய்யக்கூடாது. அதனால் விபரீத பலன்களே நேரும். எந்தக் காரணத்தைக் கொண்டும் நவகிரகங்களை மாற்றி வலம் வரக் கூடாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

? அசுரர்கள் - அரக்கர்கள் என்ன வேறுபாடு?

-எம்..சிவராமன், பெங்களூர்


இருவரும் ஒருவரே. அசுரர் என்பது சம்ஸ்கிருத மொழியிலும், அரக்கர் என்பது தமிழ் மொழியிலும் உள்ளது. அவ்வளவுதான். சுரர்கள் எனில் தேவர்கள்; எல்லா காலங்களிலும் உலகுக்கு நன்மையே செய்பவர்கள். வடமொழியில் ‘அ’ எனும் எழுத்தை ஒரு சொல்லுக்கு முன்னர் சேர்த்தால், எதிர்மறையான அர்த்தம் வரும். சுரர் - எனில் நல்லவர்கள்; அசுரர் எனில் தீமை செய்பவர்கள். இரக்கம் இல்லாதவர்கள் அரக்கர்கள்.

? நான் வீட்டில் வேல் வைத்து வழிபடுகிறேன். இதற்குரிய பாராயண மந்திரங்கள் உள்ளனவா?

- எஸ்.கார்த்திகேயன், திருத்தணி

கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?`வேல் உண்டு வினையில்லை' என்பது நம் நம்பிக்கை. நம்முடைய கர்ம வினைகளை அகற்றி நல்வாழ்க்கையை நமக்கு அளிக்கக்கூடிய ஆற்றல் வேல் போன்ற கடவுளின் ஆயுதங்களுக்கு உண்டு.

சாதாரண மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட உபகரணங்களுக்கே ஆற்றல் உண்டு என்றால்,  உலகின் தாய் தந்தையான பார்வதி பரமேசுவரரின் மகனான கந்தனின் திருக்கரத்தில் இருக்கும் வேலினால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை விவரிக்க இயலாது.  அருணகிரிநாதர்,  அகத்தியர், நக்கீரர் போன்று பல மகான்கள், குமரக்கடவுளை வழிபட்டு ஆனந்த அனுபவம் அடைந்தவர்கள்.

அந்த ஆனந்த அனுபவத்தில் திளைத்தவர்களாக அவர்கள் அருளிய நூல்களான திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, வேல் விருத்தம் போன்றவை மிகுந்த ஆற்றல் கொண்டவையாகவும் அளவற்ற நன்மைகளை அருள்பவையாகவும் உள்ளன.

நல்ல குருவை அடைந்து, வேலுக்கு உரிய மூல மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபம் செய்வது சிறந்த பலனை நல்கும். மேலும், அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு,  வேல்வாங்கு வகுப்பு ஆகிய துதிப்பாடல்கள் வேலாயுதத்தைப் போற்றும் வண்ணம் அமைந்துள்ளன. அவற்றில்  வேல்வகுப்பு நூலில் உள்ள 16 வரிகளை எடுத்து முன்னும் பின்னுமாகவும், திரும்பத் திரும்ப வரும்படியும் வேல்மாறல் பாராயணம் என்ற நூலை, வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்துத் தந்துள்ளார்.  அதையும் பாராயணம் செய்து வழிபடலாம்.

கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?

? வீட்டில் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும்போது புஷ்பம் தீர்ந்துவிட்டால், ஏற்கெனவே அர்ச்சனை செய்த புஷ்பங்களை எடுத்து மறுபடியும் பயன்படுத்தலாமா?

-கே.கிருஷ்ணமூர்த்தி, சென்னை

துளசி, தாமரை, வில்வம் இவை மூன்றைத் தவிர மற்ற மலர்களைக் கண்டிப்பாக மீண்டும் பயன் படுத்தக் கூடாது. பூக்கள் கிடைக்காவிடில் அட்சதையினால் அர்ச்சிக்கலாம். நெற்பொரியைப் பயன்படுத்தலாம். ‘லாஜ புஷ்பம்’ என்று அவற்றைக் குறிப்பிடுவார்கள். நெருப்பிலிருந்து கிடைப்பதால் மிகுந்த தூய்மை வாய்ந்தது நெற்பொரி.

நல்ல அரிசியில் சிறிது நெய் விட்டுப் பிசைந்து, பிறகு சிறிது மஞ்சள் பொடி கலந்து அட்சதையைத் தயாரித்து வீட்டுப் பூஜை அறையில் வைத்துக் கொண்டால் குறையே வராது. சாஸ்திரம் இவற்றைச் செய் என்றும், இவற்றைச் செய்யக் கூடாது என்றும் கட்டளை இடும். அவற்றை நாம் நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பதே நமக்கு உயர்ந்த பலன்களை அளிக்கும். 

நம் வீடுகளிலேயே மலர்களை வளர்த்து கடவுளுக்கு அளிப்பது மிகச் சிறந்தது. முடியாத போது கடைகளில் வாங்கிச் செய்யவேண்டும். வெளியூர்களில் இருக்கும் போது அட்சதை, நெற்பொரி போன்றவற்றை பக்தியுடன் கடவுளுக்கு அர்ப்பணிப்பதால் நிறைவான பலன்களைப் பெறலாம். பக்தியே முக்கியம்.

கிடைக்கும் இடங்களில் நிறைவாக செய்வதிலும், கிடைக்காத இடங்களில் பக்தியும் பாவனையும் ஒன்று கூடி செய்வதிலும் தவறில்லை.

கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா?

? நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்று சொல்வது ஏன்?

- எம்.சிவகுமார், சென்னை - 100

‘நதிமூலம்’ என்பதை முதலில் பார்க்கலாம். தாங்கள் தலைக் காவிரி அல்லது கங்கோத்ரி போன்ற இடங்களுக்குச் சென்று பார்த்தால் அகண்டமாக, அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மையை அளித்து வரும் புண்ணிய நதிகளான காவிரியும் கங்கையும் அந்த இடங்களில் மிகச் சிறியதாக உற்பத்தியாகி, பிறகு மிகப்பெரிய அளவில் விரிந்து பரவி மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குகின்றன.

`ரிஷி' என்று எடுத்துக் கொண்டால், அவரது ஆரம்ப காலகட்டம் சாதாரணமாகவும், துன்பம் நிறைந்ததாகவும், அவர் பல தவறுகள் செய்தவராகவும் இருக்கலாம். ஆனால், பிற்காலத்தில் அவருடைய தீய வினைகள் அழிக்கப்பட்டு, தெய்வ அனுக்கிரகம் பெற்று, அதன் மூலம் மக்களுக்கும் சமுதாயத்துக்கும் பயன்தரக் கூடிய வகையில் சேவை செய்கிறார். வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டிருந்த ஒருவர், நாரத முனிவரால் திருந்தி, வால்மீகியாகி ராமாயணம் எனும் உன்னத இதிகாசத்தை நமக்குத் தரவில்லையா?

நம் சநாதன தர்மம் அவரை வெறுத்து ஒதுக்கச் சொல்லவில்லையே. அனைவரிடமும் நன்மையை மட்டுமே பார்க்கவேண்டும். ஒருவர் முன்பு எப்படி இருந்தார் என்று பார்ப்பதைவிட, தற்போது அவர் எப்படி இருக்கிறார், அவரால் சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கும் நன்மை என்ன என்றுதான் பார்க்கவேண்டும்.

நம் சநாதன தர்மம் யாரையும் ‘பாவி’ என்று வெறுத்து ஒதுக்கும்படிக் கூறவில்லை. அனைவரும்  கடவுளின் குழந்தைகள் (அம்ருதஸ்ய புத்ரா:) என்றே குறிப்பிடுகிறது. நதி மூலம், ரிஷி மூலம் இவற்றுடன் ஸ்த்ரீ மூலம், தன மூலம் ஆகியவற்றை யும் பார்க்கக்கூடாது என்று கட்டளையிட்டு இருக்கிறது. ஒரு பெண் இப்போது எப்படி இருக் கிறாள் என்றுதான் பார்க்கவேண்டும் என்றும், திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்தாள் என்று பார்க்கக்கூடாது என்றும் சாஸ்திரம் தெளிவுபடுத்து கிறது. இவற்றைப் பல வீடுகளில் கடைப்பிடித்தால், அமைதியான வாழ்க்கை அமையப் பெறலாம்.

? வீட்டுப் பூஜையறையில் கல் விக்கிரகங்களை வைத்து வழிபடலாமா. அதற்கான விதிமுறைகள் இருக்கின்றனவா?

-ரா.ராகவன், பெங்களூரு

வீட்டுப் பூஜையறையில் கல் விக்கிரகங்களை வழிபடுவது சிறப்பானதுதான். ஆனால், அதற்கும் ஓர் அளவு உண்டு. 6 அங்குலம் அளவு பொருத்தமானது; அதைவிட சிறியதாகவும்கூட இருக்கலாம். கோயில்களில் அனைவரின் நலனையும் கருதி, பெரிய அளவில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்து, உரிய ஆசார்யர்களைக் கொண்டு வழிபாடுகள் செய்யலாம்.

ஆனால், வீட்டில் ஒரு தனி நபரால் பெரிய விக்கிரகம் வைத்து, முறைப்படி தொடர்ந்து வழிபாடு செய்யமுடியும் என்று கூறுவதற்கில்லை. எனவே, கடவுளின் உருவங்களைச் சிறிய அளவில் செய்து, உரிய பூஜை முறைகளுடன் வழிபடுவதே சிறந்தது. வீட்டில் பூஜை செய்யும் விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்யாமல், எடுத்து வைக்கும்படி இருக்க வேண்டியது அவசியம். பெரிய அளவில் பூஜைகள் செய்வதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், அதனால் நம் அன்றாட வாழ்க்கை பாதிக்கக்கூடாது. பெரியவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் குறைவில்லாமலும், குழந்தைகளிடம் செலுத்தும் அன்பில் குறை இல்லாமலும் நமது பக்தியை வெளிப்படுத்துவதே சிறந்தது.

வீட்டில் சிறிய அளவில் கல் விக்கிரகமாக இருந்தால், தினமும் சிறிய அளவில் பால் போன்றவற்றினால் அபிஷேகம் செய்து, சுத்த அன்னம் நைவேத்தியம் செய்யலாம். தினசரி முடியவில்லை என்றாலும், மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அபிஷேகம் நைவேத்தியம் செய்யவேண்டும். உலோகத்தினால் ஆன விக்கிரகமாக இருந்தால் பௌர்ணமி அல்லது மாதம் இருமுறை அபிஷேகம் செய்து நைவேத்தியம் செய்யலாம்.

- பதில்கள் தொடரும்...

- `காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ  சண்முக சிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002.