Published:Updated:

நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்!’

நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்!’
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்!’

நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்!’

நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்!’

நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்!’

Published:Updated:
நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்!’
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்!’

`அடுத்த உலாவும் மலைத் தலம்தான்' என்று கூறிச் சென்ற நாரதரிடமிருந்து, `இன்றுதான் திருப்பதியிலிருந்து வந்துசேர்ந்தேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் அலுவலகத்தில் இருப்பேன்' என்று  வாட்ஸப் தகவல் வந்து விழுந்தது. நாரதருக்காகவும் திருப்பதி தகவல்களுக்காகவும் காத்திருந்தோம்.

சொன்னதுபோல் வந்து சேர்ந்தார் நாரதர். சூடாக இஞ்சி சேர்த்த தேநீரும், வேர்க்கடலையும் தயாராக இருந்தன அவருக்காக. தேநீரைப் பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவர், சிறிது நேரம் சேனலில் கவனம் பதித்தார். டி.வி-யில் தங்கம் விலை நிலவரம் ஓடிக்கொண்டிருந்தது.  ‘`தங்கம் விலை இரண்டே நாளில் 580 ரூபாய் அதிகரித்திருக்கிறது... பார்த்தீரா'' என்றார் நம்மிடம்.

‘`அதுபற்றி பிறகு பேசுவோம் நாரதரே! கொண்டுவந்த தகவல்களைக் கொட்டும். இதழ்ப் பணிகள் நிறைய இருக்கின்றன'' என்ற நம்மை இடைமறித்து, ``நான் கொண்டு வந்திருப்பதும் ஆபரணங்கள் குறித்த தகவல்கள்தான்'' என்றார் பூடகமாக.

`மலைத் தலம்... திருப்பதி...' என்று தகவல் அனுப்பினார். இப்போது, `ஆபரணத் தகவல்கள்' என்கிறார். விஷயம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையுடன் நாம் நாரதரைப் பார்க்க, அதைப் புரிந்து கொண்டவராகப் புன்னகைத்தவர், மேற்கொண்டு நமது பொறுமையைச் சோதிக்காமல் விஷயத்தைக் கூற ஆரம்பித்தார்.

நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்!’

‘`திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயிலைப் புராதன மற்றும் தேசிய பாரம்பர்ய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி, பி.கே.எஸ்.ஆர்.ஐயங்கார் என்பவர், பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். பின்னர், இந்த மனுவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அளிக்கக் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்தார்...''

``சரி! உரிய தகவல்கள் கிடைத்தனவா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்!’


``இல்லை! அவரது விண்ணப்பத்துக்கு முறையான பதில் கிடைக்காததால், தலைமை தகவல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்; இதுகுறித்து வழக்கும் தொடர்ந்துள்ளார்.

‘திருப்பதி கோயிலும் அதைச் சுற்றியுள்ள இன்னும்பல கோயில் களும் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானவை. திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளை, அவற்றை முறையாகப் பராமரிக்கவில்லை. திருப்பதி திருக்கோயிலைப் புராதன மற்றும் தேசிய பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கவேண்டும் என 2011-ல் ஒரு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல், கோயிலுக்குச் சொந்தமான புராதன நகைகளும் முறையாகக் கணக்கில் வைக்கப்படவில்லை.

இந்நிலையில், கோயிலின் முக்கிய வாசலுக்கு எதிரே இருந்த, 15-ம் நூற்றாண்டில் ராஜா சலுவா மல்லேதேவரா மகாராஜ் அமைத்த ஆயிரங்கால் மண்டபத்தை, எந்தக் காரணமும் இல்லாமல் இடித்துள்ளனர்.

இந்தக் கோயிலை, மாநில அரசுடன் இணைந்து பராமரிக்க வேண்டியது, மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் தொல்லியல் துறையின் கடமை. ஆனால், திருப்பதி தேவஸ்தானத்தில் பொறுப்பில் உள்ள சில அரசியல்வாதிகளே அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றனர். திருப்பதி கோயிலை, புராதன மற்றும் தேசிய பாரம்பரிய சின்னமாக உடனடியாக அறிவிக்க வேண்டும்’ என்பதே அவர் கோரிக்கை.''

``சரி... உரிய தீர்வு கிடைத்ததா?''

`‘இடையில் குறுக்கிடவேண்டாம். வேறுசில தகவல்களும் உண்டு. எல்லாவற்றையும் நானே சொல்கிறேன்...'' என்று உரிமையோடு நம்மைக் கடிந்துகொண்ட நாரதர், தொடர்ந்தார்:

நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்!’

``2011-ல் திருப்பதி கோயிலை ஆய்வு செய்த ஹைதராபாத் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத்தின் இயக்குநர், ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் இந்தக் கோயிலுக்கு, நகைகள் பலவற்றை நன்கொடையாக அளித்தது தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள், கோயிலில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல்,திருப்பதி திருக்கோயில் நகைகள் தொடர்பான விவரங்கள், 1952-ல் இருந்துதான், திருஆபரண பதிவேட்டில் பதிவு செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. `அந்தப் பதிவேட்டில், கிருஷ்ண தேவராயர் அளித்த நகைகள் குறித்து, எந்தத் தகவலும் இல்லை. அப்படியென்றால், அந்த நகைகள் எங்கே' என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.''

‘`மிகச் சரியான கேள்விதான்...'' நாம் சொல்லி முடிப்பதற்குள், நம்மைக் கையமர்த்திவிட்டு மேலும் தொடர்ந்தார் நாரதர்.

``திருக்கோயிலின் நகைகள் குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும், உச்சநீதிமன்ற நீதிபதிகள், டி.பி. வாத்வா, ஜகந்நாத ராவ் ஆகியோர் அளித்த பரிந்துரைகள் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்தப் பரிந்துரைகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரியவில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

திருப்பதி பெருமாளுக்கு, விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர், 16-ம் நூற்றாண்டில் நன்கொடையாக அளித்த நகைகள் குறித்து, திருப்பதி தேவஸ்தானம் மற்றும் பிரதமர் அலுவல கத்திடம் தலைமை தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. அதன்பிறகே இந்த விஷயம் மீடியாக்களுக்குத் தெரியவந்தது.

விரைவில், தகவல் ஆணையத்துக்குப் பதில் அளிக்கவுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.அப்போதுதான் முழுமையான நகைப்பட்டியல் குறித்த விபரங்கள் வெளியே தெரியும். அதன்பிறகு தான் எவ்வளவு நகைகள் காணாமல் போயிருக் கிறது என்பதும் தெரியவரும்’’ என்று கூறிவிட்டு புறப்படத் தயாரான நாரதரிடம் கேட்டோம்...

``சரி... திருப்பதி கோயிலை, புராதன மற்றும் தேசிய பாரம்பர்ய சின்னமாக அறிவிக்க வேண் டும் என்ற பரிந்துரைக்கு என்ன முடிவு எடுக்கப் பட்டுள்ளதாம்?’’

‘`எல்லாம் அந்த ஏழுமலையானுக்கே வெளிச் சம்’’ என்றவர், ``விரைவில் சந்திப்போம்'' என்றபடி விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...