Published:Updated:

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்
புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்

இந்த இதழ் சக்தி விகடன்: https://bit.ly/2Brpcbj

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்


மேஷம்: புது வருடத்தின் முற்பகுதி, உங்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தினாலும், பிற்பகுதி உங்களைச் சாதிக்க வைப்பதாக அமையும்.

ரிஷபம்: இந்தப் புது வருடம் சுற்றியிருப்பவர்களின் சுயநலப் போக்கை உணரவைப்பதுடன், சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் அமையும்.

மிதுனம்: உங்களின் நீண்டகால விருப்பங்களை நிறைவேற்றுவதுடன் மன அமைதியைத் தருவதாகவும் இருக்கும்.

கடகம்: புது வருடத்தின் முற்பகுதி, உங்களுக்கு அலைச்சலையும் ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும், வருடத்தின் பிற்பகுதி அதிரடி முன்னேற்றங்களைப் பெற்றுத் தருவதாக அமையும்.

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்

சிம்மம்: இந்தப் புது வருடத்தின் தொடக்கம் அலைச்சலைத் தருவதாக அமைந்தாலும், ஜூன் - ஜூலை மாதம் முதல் முன்னேற்றம் மற்றும் ஆதாயம் தருவதாக அமையும். 

கன்னி: இந்தப் புது வருடம் மன நிம்மதியையும் ஓரளவு வசதி வாய்ப்புகளையும் அளிப்பதுடன், சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

துலாம்:  உங்களுக்குத் தேவையான பண வரவையும், செல்வாக்கையும், பதவிகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

விருச்சகம்: உங்களின் திறமையை அதிகப்படுத்துவதுடன், பணப் புழக்கத்தையும் வெற்றியையும் தருவதாக அமையும்.

தனுசு: சகிப்புத் தன்மையை அளிப்பதுடன், அதன் மூலம் வெற்றபெற வைப்பதாகவும் அமையும். 

மகரம்: இந்தப் புது வருடத்தில் தடைகள் ஏற்பட்டாலும், உங்களின் விடாமுயற்சியால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்: அனுபவம் மற்றும் சமயோசித அறிவால் பெரும் வெற்றிகளைப் பெற்றுத்தரும் ஆண்டாக அமையும்.

மீனம்: இந்தப் புது வருடம், உங்களின் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றிகளை ஈட்டித் தருவதாகவும் அமையும்.

- 2019 புத்தாண்டு ராசிபலன்களை கச்சிதமாக கணித்து, விரிவாகக் கூறியுள்ள ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன், அனைத்து ராசிக்காரர்களுக்குமான எளிய பரிகாரங்களையும் முன்வைத்திருக்கிறார். சக்தி விகடனின் புத்தாண்டு ராசிபலன்கள் பகுதியைத் தவறவிடாதீர்கள். 

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந்திரம் 2104). ஆன்மிகத்தின் உச்சநிலையில் இருப்பது உருவமற்ற ஒரே கடவுள். மலையின் அடிப் பகுதியில் ஆயிரம் வழிகள். அதன் உச்சத்தைத் தொடும்போது சிகரம் ஒன்றுதான். நம் எல்லோராலும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்துவிட முடியாது. ஆகவே, கிடைக்கும் வழிகளைப் பிடித்துக்கொண்டு ஏறலாம். சிகரத்தை எட்டிவிட்டால், ஞானியாக ஆகலாம். இயலாதவர்கள், வழிபட்டு மேன்மை அடையவே நடராசரை நம்முன் நிறுத்துகிறார் திருமூலர். 9-ம் தந்திரம் 8-ம் தலைப்பு ‘திருக் கூத்து தரிசனம்’. இதில் சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொன்தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து ஆகிய தலைப்புகளில் - 82 பாடல்களில் நடராசரின் ஆனந்த தாண்டவத்தை பாடியுள்ளார் திருமூலர். 

இதை முழுதும் படிப்பவருக்கு நடராசர் பேரருள் நிச்சயம் வந்து சேரும். அவற்றில் சில பாடல்களின் சிறப்புகளைத் தருகிறது 'திருமூலர் தரிசித்த சிவதாண்டவம்!' எனும் முதன்மைக் கட்டுரை.

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்

பெண் ரஜஸ்வலையான பிறகு (மாதவிடாய் ஏற்பட்ட பிறகு) பதினாறு நாள்தான் ருது கால நாள்கள். அந்தப் பதினாறு நாள்களில் முதல் நான்கு நாள்கள் கர்ப்பாதானம் பண்ணக்கூடாது. 11, 12-வது நாள்களிலும் முகூர்த்தம் சுகம் இல்லை. பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்தசி, அஷ்டமி ஆகிய நாள்களிலும் பிள்ளை வேண்டி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது... - பிள்ளை வரம் கிடைக்க 'தோஷங்கள் நீங்கும்... பிள்ளை வரம் கிடைக்கும்!' எனும் ஜோதிடப் பகுதி நமக்கு விரிவாகவே வழிகாட்டுகிறது. 

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி, அகிலத்தில் புகழ்பெற்று விளங்குவீர்கள். பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்தைப் பிடித்தவர்கள் உங்களில் அதிகம் பேர். எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உடையவர்கள் நீங்கள். உறவினர்களுக்கும் உடன் இருப்பவர்களுக்கும் உதவும் மனப்பாங்கு இருக்கும். பொறுப்பானதும், சவாலானதும், பெரியதுமான பணிகளைத் திறம்பட முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். தயவு தாட்சண்யமும் மனசாட்சிக்கு பயந்து நடப்பதும் உங்களின் சுபாவம். நன்னெறிகளும் ஒழுக்கமும் குடிகொண்டிருக்கும். - பூசம் நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்களையும், பலன்களையும், பரிகாரங்களையும் அடுக்கிறது `நேசம் நிறைந்த பூசம்!' பகுதி.

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்

திருஉத்திரகோச மங்கை மங்களநாதரை வழிபட்டால் முற்பிறவி பாவம், முன்னோர்களின் சாபம், ஜாதகத்தில் உள்ள தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் நீங்கும். திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். குழந்தைப்பேறு, கல்வியில் முன்னேற்றம், உத்தியோகத்தில்  உயர்வு ஆகிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை... - ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள இந்தத் தலம் குறித்து விரிவாகச் சொல்லி வழிகாட்டுகிறது 'ஆருத்ரா நாளில்... அற்புத தரிசனம்!' கட்டுரை.

இந்த இதழ் சக்தி விகடன்: https://bit.ly/2Brpcbj

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்

குன்றக்குடி முருகன் சந்நிதியில ஐயாவோடு சேர்ந்து நின்னு வாசிச்ச அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அதேபோல, கர்நாடகாவில் இருக்கிற மகாபலி கோயில்ல ஐம்பதாயிரம் பேருக்கு முன்னால வாசிச்சோம். அப்போ, பாலமுரளி கிருஷ்ணா ஐயா என்கிட்ட வந்து, ‘குன்னக்குடி வாசிச்ச மாதிரியே இருந்துச்சும்மா’னு வாழ்த்தினார். பக்கத்துல நின்னுட்டு இருந்த குன்னக்குடி ஐயா என்னைப் பெருமையா பார்த்தார். நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கணும்!” என்று புன்னகை பூக்கிறார் பாலாம்பாள்.

- ‘ஞானக் குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்...’ - குன்னக்குடி வைத்தியநாதனின் சிஷ்யை பாலாம்பாளின் பேரனுபவப் பகிர்வு நெகிழ்ச்சிகள் நிரம்பியவை.

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்

* மார்கழி மாதத்தில் உடலின் உஷ்ணமும் ஸ்திரத்தன்மையும் சம நிலையில் இருப்பதால், தவமும் யோகமும் செய்ய உகந்த காலம் என்று ரிஷிகளால் சொல்லப்பட்டுள்ளது.

* மார்கழியை `சூன்ய மாதம்’ என்பார்கள் பெரியோர்கள். சூன்யம் என்றால் ஒன்றுமில்லாதது என்று அர்த்தமல்ல; ஆதியானது, முடிவில்லா இன்பமளிப்பது’ என்று காஞ்சி முனிவர் குறிப்பிடுவார்.

* சகல பயங்களையும் போக்கும்  `மிருத்யுஞ்ஜய ஹோமம்’ நடத்த சிறந்த மாதமாகவும் கருதப்படுகிறது, மார்கழி.

- மார்கழியின் பெருமைகளையும் சிறப்புகளையும் அடுக்கிறது 'மனமகிழ் மார்கழி!' எனும் தொகுப்பு.

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்

ஏகாதசியன்று அதிகாலை கண்விழித்து நீராடி,  தூய ஆடை உடுத்திக்கொண்டு பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்று முழுதும் உணவு உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். அன்றாடக் கடமைகளைச் செய்துகொண்டே இறை சிந்தனையில் மனதை லயிக்கவிட வேண்டும். தேவைப்பட்டால் குளிர்ந்த நீரை மட்டும் பருகி விரதம் இருக்கலாம். இயலாதவர்கள் பழங்கள் உண்டு விரதம் அனுஷ்டிக்கலாம். - ஏகாதசியின் மேன்மைகளை விரிவாகவும் எளிமையாகவும் நமக்குச் சொல்கிறது 'அரங்கனே... அழகனே! - ஏற்றங்கள் அருளும் வைகுண்ட ஏகாதசி' எனும் சிறப்புக் கட்டுரை.

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்

நிலைகுலைந்து தேரில் இருந்துவிட்ட பார்த்தனிடம்
நிலையாமை இறவாமை எவை என அறிகிலையோ
நிதானம் கொள்வாய் எனக் கண்ணன் கூறினான்
அழிவது உடலாகும் அழிவில்லை ஆன்மாவிற்கு

போற்றிவளர்த்த உடல் அழியும் என்ற உண்மை
மாற்றமுடியாததை மனிதனால் அறிவாய்
அரசகுல தர்மமாகும் போரிடல் என்றறிவாய்
அடையும் வெற்றிதோல்வி சமமாக ஏற்றிடுவாய்...

- லீலா நாராயணசாமி முயற்சியில் எளிய வடிவிலான இந்த ஸ்ரீமத்பகவத் கீதையை வாசகர்களுக்கு சிறப்புப் பகுதியாக வழங்கியிருக்கிறது சக்தி விகடன். ``ஸ்ரீமத் பகவத் கீதை: எளிதாக... இனிதாக!" பகுதியைத் தவறவிடாதீர்கள்.

புத்தாண்டு ராசிபலன்களுடன் 5 நிமிட வாசிப்பில் சக்தி விகடனின் 10 அம்சங்கள்

குழந்தையில்லாத தம்பதிகள், கடும் மலைப் பாதையில் பயணித்து வந்து வடமலை நாச்சியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கிறார்கள். வேண்டுதல் பலித்து குழந்தை பிறந்ததும் கொண்டுவந்து அவள் காலடியில் வைத்து நன்றி செலுத்துகிறார்கள். வெள்ளிக்கிழமை நாச்சிக்கு உகந்தநாள். அன்று, பச்சரிசி, நெய், வெல்லம் போட்டு இடித்து தெள்ளுமாவு தயாரித்து மூன்று உருண்டைகளாகப் படைத்து, வடமலை நாச்சியாளை மனமுருகி வணங்கி, வழிபடுகிறார்கள். போடி சமஸ்தானம் மட்டுமல்ல... தேனி மாவட்டத்துப் பெண்கள் அனைவருமே வடமலை நாச்சியாளை தங்கள் தாயாக, சகோதரியாகக் கருதுகிறார்கள். எல்லா நல்ல நிகழ்வுகளையும் வடமலை நாச்சியாளின் இல்லத்திலிருந்தே தொடங்குகிறார்கள்...

- வாசிக்கவும் தரிசிக்கவும் துணைநிற்கிறது 'மண்... மக்கள்... தெய்வங்கள்! - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்!' எனும் பகுதி.

இந்த வார சக்தி விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2PJ0Z5x

அடுத்த கட்டுரைக்கு