`விதியை யாரால் வெல்ல முடியும்; எல்லாம் விதிப்படிதான் நடக்கும்’ என்று மனிதர்கள் புலம்புவதைக் கேட்கிறோம்!

விதியையும் நல்ல விதி - தீய விதி என்று பிரித்துவேறு கூறுவார்கள். இது, அவரவர் பாவ புண்ணிய கணக்கின் வழி வருவது. சாமான்யர் களுக்கான விதியும் அதனால் ஏற்படும் பலன்களும் அந்த நபரையோ அல்லது அவரைச் சார்ந்தோருக்கானதாகவோ அமையும்.

ஆனால், அருளாளர்களைப் பொறுத்தவரை விதிவசத்தால் அவர்களுக்கு உண்டாகும் பலாபலன்கள்... அவை, அவர்களுக்கான இன்னல்களாகவே இருந்தாலும், இந்த உலகுக்குப் பெரிய பலனை அளிப்பதாக அமைந்துவிடுவது உண்டு. இதைத் `திருவிதி’ என்று கூறலாமோ என்னவோ? இப்படியான திருவிதியின் வசத்தால் பிறந்ததே `நாராயணீயம்' எனும் காவியம். குருவாயூர் எவ்வளவு பிரபலமோ, அவ்வளவு பிரபலம் `நாராயணீயம்.’ சரி! இனி, இந்தக் காவியம் உதித்த கதைக்கு வருவோம்.

கிருஷ்ண பகவானோடு அமர்ந்து பேசிப் பேசியே இக்காவியத்தை எழுதியவர் நாராயண பட்டத்திரி. இவர், 1560-ம் ஆண்டில் ‘பாரதப்புழை’ ஆற்றின் வடகரையில் உள்ள மேல்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை தந்தையாரிடம் பயின்றவர், பின்னர் ரிக்வேதத்தை மாதவாசார்யரிடமும், தர்க்க சாஸ்திரம் போன்றவற்றைத் தாமோதராசார்யரிடமும் கற்றுத் தெளிந்தார். வியாகரணம் என்ற சம்ஸ்கிருத இலக்கணத்தை ‘அச்யுதபிஷாரடி’ என்ற அற்புதமான குருவிடம் கசடறக் கற்றார்.

ஒருநாள், காலை வேளையில் பட்டத்திரியை அழைத்தார் குருநாதர். ஓடிச்சென்று குருவைப் பணிந்து நின்றார் சீடர். குருநாதர் சொன்னார்: ``நாராயணா! கற்றுத்தர வேண்டியவற்றை எல்லாம் கற்றுத் தந்துவிட்டேன். இனி, நீ வீடு திரும்பலாம். இல்லறத்தை ஏற்று நடத்து. வானோருக்கான யாக - ஹோமங்களை எல்லாம் சிரத்தையோடு பண்ணு. ஆண்டவன் துணையிருப்பார்.”

குருநாதரை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி எழுந்த பட்டத்திரி, பின்னர் மிகப் பணிவோடு, ``குருவே! உங்களுக்கு நான் குருதட்சிணை அளிக்க வேண்டும்’’ என்றார்.

புன்னகைத்த குருநாதர், ``நாராயணா! குருவுக்கு யாரும் தட்சிணை கொடுத்துவிட முடியாது தெரியுமோ? ஆனாலும் நீ கேட்பதால் சொல் கிறேன். நீ என்னிடம் கற்ற இந்தப் பாடங்களை, மற்றவருக்கு இலவசமாகக் கற்றுக்கொடு. தட்சிணை வாங்காமல் நீ கற்றுக்கொடுக்கும் கல்விச் சேவையே நீ எனக்குத் தரும் தட்சிணை. போய் வா’’ என்றார்.

ஆனாலும், நாராயணப் பட்டத்திரி விடவில்லை. ``நீங்கள் நான் தரும் குருதட்சிணை யைப் பெற்றே ஆகவேண்டும்’’ என்று விடாப் பிடியாக நின்றார். அதற்கொரு பெரிய காரணமும் இருந்தது. அவரின் குருவுக்கு வாதநோய் இருந்தது; கை, கால்களை அசைக்க முடியாத நிலையில்தான் சீடர்களுக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுத்து வந்தார். அவரைக் குளிப்பாட்டி, உடுத்தி, தூக்கி வந்து நாற்காலியில் அமரவைப்பார்கள் சீடர்கள். பாடம் முடிந்ததும் தூக்கிச்சென்று உணவருந்த வைத்து, ஓய்வுக்கு விடுவார்கள். மீண்டும் மாலையில் பாடம் தொடரும்.

முதல் நாளிலேயே இதைப் பார்த்து, பட்டத்திரியின் மனம் மிகவும் கலங்கிப் போனது. குருநாதருக்கு நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று அன்றே முடிவுசெய்துவிட்டார். அதன் வெளிப்பாடே இப்போது இப்படியொரு பிடிவாதமாக எழுந்து நின்றது.

``ஏனப்பா உனக்கு இந்தப் பிடிவாதம். நான்தான் வேண்டாம் என்கிறேனே’’ என்ற குருநாதர், பின்னர், ‘‘சரி, என்ன தருவாய் சொல்’’ என்றார். இப்போது பட்டத்திரி சொன்னார்: ‘‘குருவே! உங்களின் உடம்பு சரியாகி, நீங்கள் மிக்க நலத்தோடு நடமாட வேண்டும். அதனால், உங்களின் வாத நோயை எனக்குத் தந்துவிடுங்கள். `நோய் நிவர்த்தி’ என்ற குருதட்சிணையை நான் உங்களுக்குத் தந்துவிட்டுச் செல்கிறேன்.’’

குருநாதர் நெகிழ்ந்துபோனார். ‘‘நாராயணா! அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீ புறப்படு. இப்படியொரு தட்சிணையை ஏற்றால், இந்த ஊர் - உலகம் என்ன சொல்லும். யோசித்துப்பார்...’’ என்றார். ஆனாலும், பட்டத்திரி விடுவதாக இல்லை.
``ஊர் - உலகம் எல்லாம் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது; எவரும் உங்களைப் பழிக்கு ஆளாக்கவும் முடியாது. அது எனக்குத் தெரியும். அதனால், உங்கள் நோயை எனக்குக் கொடுங்கள். நான் இளைஞன்; என்னால் தாங்கிக் கொள்ள முடியும். நீங்களோ ஆசார சீலர். மருத்துவரிடமும் செல்வதில்லை. நான் அப்படியில்லை. நல்ல வைத்தியரிடம் காட்டி குணமாகி, உங்கள் முன் வந்து நிற்பேன்’’ என்றார்.

‘என்னடா இது வம்பாகப் போயிற்றே’ என்று மனம் குழம்பிய குருநாதர், சற்று நேரம் கண்ணை மூடி சிந்தித்தார். ‘எல்லாமே தெய்வ சங்கல்பம்; குருவாயூரப்பனின் திருவிளையாடல்’ என்பது புரிந்தது. அவன் நினைத்தால் நாம் என்ன செய்ய முடியும் என்று குருநாதர் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த அற்புதம் நிகழ்ந்தது!

மயில் பீலி அணிந்து மஞ்சள் பட்டுடுத்தி, கையில் குழலோடும் வாயில் சிரிப்போடும், காலில் சதங்கை குலுங்க, மெள்ள வந்து நின்றான் கண்ணன். மெய்சிலிர்த்தார் குருநாதர். ``ஆஹா... ஆஹா...’’ என்று தன்னையுமறியாமல் சத்தமிட்டார். இந்தச் சீடனால் இன்று எனக்கு இந்தப்பேறு கிடைத்ததே என்று மகிழ்ந்து உருகி, ஆனந்தக் கண்ணீரோடு கண் திறந்து பார்த்தார். பட்டத்திரியை அழைத்தார்... ‘‘நாராயணா! உன் விருப்பமப்பா... நீர் எடுத்து வா’’ என்றார்.

நீரை எடுத்து வந்த பட்டத்திரி அவரின் வலது கையையும் இடது கையையும் மெள்ளத் தூக்கி தண்ணீருக்குள்... அப்படியே தன் இரு கைகளுக்கு மேல் வைத்துக்கொண்டார். கையில் வழிந்த தண்ணீரை எடுத்து கண்களில் ஒற்றித் தலையிலும் தெளித்துக்கொண்டார். அடுத்த கணம் இவரைப் போல் அவரும், அவரைப் போல் இவரும் ஆயினர். உருவத்தில் அல்ல; உடல் நிலையில். குருநாதர் குதித்து எழுந்தார்; இவர் முடங்கிக் கொண்டார்.

``பசங்களா! பட்டத்திரியை பத்திரமாகத் தூக்கிப்போய் அவன் வீட்டில் விட்டு வாருங்கள். அவன் பெற்றோர் என்மீது கோபப்படத்தான் செய்வார்கள். `தெய்வ சங்கல்பம் இது’ என்று கூறிவிட்டு வந்துவிடுங்கள்’’ என்றார் குருநாதர். காரியங்கள் அப்படியே நடந்தன.

ஊரில் உள்ள அத்தனை மருத்துவர்களைப் பார்த்தும் ஒன்றும் முடியவில்லை. குருவிடம் எதிர்த்துப் பேசியதன் பலனா, இல்லை, ஆண்டவன் சோதிக்கிறாரா? `கடவுளே என்னை மன்னித்து விடு’ என்று பட்டத்திரியின் வாய் முணுமுணுத்தது. ஜோதிடம் பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதுபற்றி பெற்றோரிடம் கூறினார். ``வைத்தியருக்கு அழுததே போதும். இனி ஜோசியருக்கு வேறா... அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீ பேசாமல் இரு’’ என்று ஒரு போடு போட்டு முடித்துவிட்டார்கள். பட்டத்திரிக்குத் தன்னைப் பற்றிக் கவலை இல்லை. `எங்கே... தான் குணமாகாமல் போனால், குருநாதர் வந்து மீண்டும் நோயை எடுத்துக் கொண்டுவிடுவாரோ’ என்ற பயம்தான் அவருக்கு.

அப்போது, பிரபலமாக இருந்த ‘எழுத்தச்சன்’ என்ற ஜோதிடரிடம் சென்றால், நிச்சயம் பரிகாரம் கிட்டும்; ஆனால், அவரிடம் எப்படிப் போவது, தனது ஜாதகத்தை அவரிடம் எப்படி சேர்ப்பிப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தவர், எந்த மார்க்கமும் கிடைக்காமல் சோர்ந்துபோனார். அவரின் தவிப்பைக் கவனித்துக்கொண்டிருந்தார், அங்கே நெடுங்காலமாக வேலை செய்யும் வேலையாள் ஒருவர்.

ஒருநாள், எவரும் கவனிக்காத வேளையில், மெள்ள நாராயணப் பட்டத்திரியின் பக்கம் வந்த அவர், ‘‘ஐயா! உங்கள் ஜாதகம் எங்க இருக்குண்ணு சொல்லுங்க. நான் எடுத்துப்போய் ஜோதிடரிடம் காட்டிப் பரிகாரம் கேட்டு வருகிறேன்’’ என்றார்.

கண்கள் பனித்துவிட்டன பட்டத்திரிக்கு. அவரால் கையைத் தூக்கிக் காட்டவும் முடியாது, சைகையில் சொல்லவும் முடியாது. சன்னமான குரலில் சொன்னார்; அதைப் புரிந்துகொண்ட வேலையாள், உடனே காரியத்தில் இறங்கினார்.

ஜோதிடரிடம் சென்ற பணியாள் அவரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்தார். பிறகு, ‘‘ஐயா! இதைப் பார்த்துப் பரிகாரம் சொல்லுங்க’’ என்று ஜாதகத்தைக் கொடுத்தவர், எல்லா விவரங்களையும் ஜோதிடரிடம் பகிர்ந்து கொண்டார். ஜோதிடர், சோழிகளை உருட்டினார். உருண்டு கவிழ்ந்த சோழிகளையும் நிமிர்ந்து கிடந்த சோழிகளையும் கரங்களில் எடுத்துக் கூட்டிக் கழித்தார். பின்னர், ‘‘உன் எஜமானனுக்கு இந்த நோய் நிச்சயம் குணமாகும். அதற்கு ஒன்றே ஒன்றுதான் செய்ய வேண்டும்’’ என்றார்.

``சொல்லுங்க ஐயா! உடனே செய்கிறேன்’’ என்றார் வேலையாள்.

``நீ பண்ணக் கூடாதப்பா. உன் எஜமானர்தான் பண்ணவேண்டும். குருவாயூர் என்ற தலத்துக்கு அவரை அழைத்துச் செல். அங்கே உள்ள நாராயண சரஸ் என்ற குளத்தில் அவரை நீராட்டி புது வஸ்திரம் அணிவித்து, கோயிலுக்குள் அழைத்துச்செல். உள்ளே, மூலஸ்தானத்துக்கு எதிரில் பகவானுக்கு வலப்பக்கம் உள்ள மேடையில் அமர வை. அங்கிருந்தபடி மத்ஸ்யம் தொட்டு பகவானைப் பாடச் சொல்’’ என்றார்.

இதைக் கேட்டதும் மனம்சோர்ந்து போனார் வேலையாள். ஜோதிடருக்குத் தட்சிணை வைத்தாரா இல்லையா என்பதுகூட நினைவில் இல்லை, வீட்டுக்கு விரைந்தார். வாட்டத்தோடு வந்தவரைக் கண்ட பட்டத்திரி, ‘‘என்ன ஆயிச்சு... பரிகாரம் ஏதும் கிடையாதா?’’ என்றார் கவலையோடு. வேலையாள் பதில் சொன்னார்: ‘‘இருக்கிறது ஐயா! ஆனால், ஜோதிடர் சொன்ன பரிகாரம் பண்ண முடியாத ஒன்றாய் இருக்கிறது. இப்படி ஒரு பரிகாரத்தைப் பண்ணுவதைவிடச் சும்மா இருந்துவிடலாம்.’’

பட்டத்திரி குழம்பினார். ‘‘பண்ண முடியாத பரிகாரமா?அதென்னப்பா அப்படியொரு பரிகாரம்... விவரமாகச் சொல்’’ என்றார்.

‘‘அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்கள். மீனை நாக்கில் வைத்துக்கொண்டு உங்களைப் பாடச் சொல்கிறார் ஜோதிடர். அதுவும் கோயிலுக்குள் உட்கார்ந்து பாடவேண்டுமாம்’’

பட்டத்திரிக்கு அப்போதும் புரியவில்லை. ஜோதிடர் சொன்னதை வரி பிசகாமல் சொல்லும்படி வேலையாளைப் பணித்தார்.

``மத்ஸ்யம் தொட்டுப் பாடச் சொல் என்றார் ஜோதிடர்’’ எனக் கூறினார் பணியாள். இதைக் கேட்டதும் உவகை கொண்டார் பட்டத்திரி.

‘‘அவர் மத்ஸ்யம் தொட்டுத்தானே பாடச் சொன்னார். நீயோ, நாக்கில் வைத்துப் பாடச் சொல்கிறார் என்றுகூறிவிட்டாயே’’ என்று புன்னகைத்தவர், உடனே குருவாயூருக்குப் புறப்பட ஆயத்தமானார். வேலையாளோ மறுத்தார். ``அது எப்பேர்ப்பட்ட கோயில்?! அங்கு போய் மீனை வைத்துக்கொண்டு பாடுவதாவது. நான் வரமாட்டேன்’’ என்று மறுத்ததோடு, ``நீங்களும் போகக் கூடாது’’ என்றார்.

‘‘தவறாகப் புரிந்துகொண்டுவிட்டாய். ஜோதிடர் சொன்னதற்கு அர்த்தம் வேறு. மத்ஸ்யம் தொட்டுப் பாடு என்றால், பகவானின் முதல் அவதாரமான மச்ச(மீன்) அவதாரம் தொட்டுப் பாடு என்று அர்த்தம். புரிகிறதா... கிளம்பு’’ என்று பணியாளுக்குப் புரியவைத்தார் பட்டத்திரி. இப்போது, பணியாள் எஜமானரை விடவும் இரட்டிப்பு உற்சாகத்தோடு கிளம்பினார்.

குருவாயூரில், கிருஷ்ண பகவான் நீராடி மகிழ்ந்த, `நாராயண சரஸ்’ என்ற குளத்தில் நாராயண பட்டத்திரியை நீராட்டினார். பின்னர், அவரை அலேக்காகத் தூக்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்று, பகவானுக்கு வலப்பக்கம் இருந்த மேடையில் அமரவைத்தார். அதிகாலை வேளை அது. சூட்சுமமாக ஆண்டவனை வணங்கிச் செல்ல வந்திருந்த முப்பது முக்கோடி தேவர்களும் முனிவர்களும் பட்டத்திரியை மனமார ஆசீர்வதித்துப் புறப்பட்டார்கள்.

அதுவரை குருவாயூரப்பனை தரிசித்திராத பட்டத்திரிக்குக் குருவாயூரப்பனைப் பார்க்க முடியவில்லை. கழுத்தைவேறு அசைக்க முடிய வில்லை. ``என் அப்பனே! இதென்ன சோதனை. என் கழுத்தைக் கொஞ்சம் அசைக்க வை. நான் உன்னைப் பார்த்தால்தானே பாட முடியும். கருணை காட்டு’’ என்று கண் கலங்கினார். குருவாயூரப்பன் பேச ஆரம்பித்தார்.

``நாராயணா! உன் கழுத்தை இப்போது சரி செய்ய முடியாது. அது, நீ வந்த காரியம் முடிந்த பின்தான் நடக்கும். இப்போது, நீ உன் கழுத்தைச் சாய்த்து என்னைப் பார்க்கவேண்டும் என்றில்லை, நான் உன்னைப் பார்க்கிறேன்’’ என்றபடி பகவான் தன் தலையைச் சாய்த்துப் பார்த்த பார்வையில், சாய்ந்தேபோனார் பட்டத்திரி.

``ம்... ஆரம்பிக்கலாம்’’ என்றார் குருவாயூரப்பன். பாடல் பிரவாகமாக ஓட ஆரம்பித்தது.

இருவரும் பேசும் பாவனையில் அமைந்த இந்த நாராயணீயம் எழுதப்பட்ட இந்த மேடையில் (திண்ணை), செப்புப்பட்டயம் ஒன்று உள்ளது. அதில், `நாராயணப்பட்டத்திரி நாராயணீயம் எழுதிய இடம்’ என்று தமிழிலும், மலையாளத்திலும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

நாராயணீயம் என்ற மகா காவியத்தைப் பட்டத்திரி படைத்து முடித்ததும், குருவாயூரப்பன் மகிழ்ந்து ஆசீர்வதித்தார். அத்துடன், ``பட்டத்திரி! இந்த ஊரில் எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால், இந்தத் திண்ணை மட்டும் உனக்குச் சொந்தம். இன்று முதல் இந்த இடம் பட்டத்திரி மண்டபம் என்று விளங்கட்டும்” என்று அருள் பாலித்தார். மேலும், துள்ளி ஓடிவந்து காலை சற்றே தூக்கியபடி நின்ற பகவான், ‘‘நான் உன் இடத்துக்கு வரட்டுமா, இல்லை உன்னிடத்தில் வரட்டுமா’’ என்று கேட்டார். நெகிழ்ந்து, கரைந்து உருகிய பட்டத்திரி, அப்படியே கைகளைத் தூக்கி ``கண்ணா’’ என்று வணங்கித்தொழுதார் பகவான்.

ஆம், காவியம் பிறந்தது; நோய் பறந்தது!

குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்!

ஓவியர் பத்மவாசனின் கைவண்ணத்தில் ஸ்ரீகுருவாயூரப்பன் முதலான தெய்வ ஓவியங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்...