Published:Updated:

நட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி!

நட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி!
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி!

நட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி!

நட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி!

நட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி!

Published:Updated:
நட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி!
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி!

கல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஆடம்பர கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியின் ஆளுகையின் கீழ் வருகிறது. சந்திரனின் சாரம் பெற்றுள்ள இந்த நட்சத்திரம், பால்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மையுடையது.

நட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி!

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எந்த வித்தையையும் விரிவாகக் கற்றுக்கொள்வதில் வல்லவர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். ஜாதக அலங்கார நூல், ‘நீரதிக தாகமுளன்; சொன்னது கேட்பான் புலவன் நிருபன்...’ என்கிறது. அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோர், பழ ரசம், இளநீர், பசும்பால், நெய், தயிர் போன்ற பானங்களை விரும்பி அருந்துபவராகவும் கார வகைகளை விரும்பாதவராகவும் இருப்பார்கள் என்கிறது. பெரியோரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பவராகவும், மொழிப் பாடங்களில் பண்டிதராகவும், பசித்தவர்க்கு உணவு தருபவராகவும் விளங்குவார்கள் என்பது இதன் பொருள். நட்சத்திர மாலை எனும் நூல், ‘செய்வினை தெரிந்து செய்வான், சேயிழையார்க்கு நல்லன், மையுரை மணியும் பொன்னும் மகிழ்ச்சியா அணைய வல்லன்...’ என்கிறது. அதாவது வருங்காலத்தை உணரும் ஆற்றலைப் பெற்றவராகவும், பெண்களுக்குப் பிரியமானவராகவும், விலையுயர்ந்த ஆபரணங்களை விரும்பி அணிபவராகவும் விளங்குவார் என்பது அர்த்தம்.

யவன ஜாதகப் பாடல், ‘ஸூருப ஸ்திர...’ என்கிறது. அதாவது அழகானவராகவும், ஸ்திர புத்தியுடையவராகவும், சிற்றின்பப் பிரியராகவும் இருப்பார்கள் என்று அர்த்தம். பிருஹத் ஜாதகமோ `சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி வாழ்பவர்களாகவும் இனிமையாகப் பேசுபவர்களாகவும் இருப்பார்கள்’ என்கிறது.

ஆக, ரோகிணியில் பிறந்த அன்பர்களே, நீங்கள் அமைதியான வாழ்க்கையையே அதிகம் விரும்புவீர்கள். அதிர்ந்து பேச மாட்டீர்கள். தெளிந்த அறிவுடனும் அதி நுட்ப மதியுடனும் எந்த ஒரு செயலையும் செய்வீர்கள். உங்கள் செயல்களைக் கண்டு பகைவர்கள்கூட வியப்படைவர். ஆடை, அணிகலன்களில் தனிக் கவனம் செலுத்துவீர்கள். எப்போதும் நேர்மையாக இருப்பதையே விரும்புவீர்கள். பேச்சில் ஒளிவு மறைவு என்பதே இருக்காது. ஆசாரம் உடையவராகவும் சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவராகவும் இருப்பீர்கள். அளவற்ற செல்வம் திரண்டு இருக்கும். எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டே இருப்பீர்கள். உங்களில் சிலர் கவிதை, கட்டுரை, கதை, நாடகம் ஆகியவற்றை எழுதுவார்கள். பெரும்பாலோர் திரைத் துறையில் பெரிய கலைஞர்களாக இருப்பார்கள். நிர்வாகத் திறமை இல்லாவிட்டாலும் சிலர் மாபெரும் தொழிலதிபராக இருப்பார்கள். முதலாளியாக இருந்தாலும் சிறிதும் கர்வம்கொள்ளாமல் தொழிலாளியைத் தனக்குச் சமமாக நடத்துவார்கள்.

அதி திறமைசாலி. கலைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு, பாராட்டு பெறுவீர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகம் இருக்கும். குறிப்பாக இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் எப்போதும் தன் மனைவிக்கு விட்டுக்கொடுத்துப் போகிறவராக இருப்பார்கள்.

சுகபோக வாழ்க்கையை வாழும் உங்களுக்கு, சோம்பேறித்தனமும் அதிகமாக இருக்கும். இரக்க குணம் உங்களிடம் வஞ்சமில்லாமல் இருக்கும். சண்டை போடும் இரு தரப்பினரையும் இனிமையான பேச்சால் சமாதானப்படுத்தி ஒற்றுமை ஏற்படச் செய்வீர்கள். அடிக்கடி தண்ணீர் குடிக்கவும், அதிக நேரம் நீராடவும் விரும்புவீர்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தாய் மாமனுக்கு தோஷம் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருந்து ஐந்தாம் வீட்டுக்குரிய கிரகமும் பாவ கிரகங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே தாய் மாமனுக்கு ஆகாது.

எப்போதும் ஒரு கூட்டத்திலேயே நீங்கள் இருப்பீர்கள். சமூகத்தில் இருக்கும் எல்லோராலும் விரும்பப்படுபவர்களாக இருப்பீர்கள். உங்களுடைய பேரும், புகழும் வீட்டுக்குப் பயனளிப்பதைவிட பொதுநல சேவைக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும். உதவி கேட்டு வரும் சொந்தம், நட்பு அனைவருக்கும் முகம் சுளிக்காமல் உதவிகளைச் செய்துகொண்டே இருப்பீர்கள். எப்போதும் இளமையாகக் காட்சியளிப்பீர்கள். உங்கள் முகத்தைப் பார்த்தோ உடல் வாகைப் பார்த்தோ யாராலும் வயதை கணிக்க முடியாது. அந்த அளவுக்கு உடல் நலத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

முதல் பாதம் (சந்திரன் + சுக்கிரன் + செவ்வாய்)

முதல் பாதத்துக்குச் செவ்வாய் அதிபதியாக இருப்பதால், இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் கம்பீரமாக இருப்பார்கள். உடையலங்காரப் பிரியர்களாகவும் ஆடம்பரப் பிரியர்களாகவும் இருப்பார்கள். வரவுக்கு மீறி செலவு செய்ய தயங்கமாட்டார்கள். பொன், பொருள் சேர்க்கை இருக்கும். சிறு வயதிலேயே அநியாயத்தைத் தட்டிக் கேட்பார்கள். தவறு செய்பவர்களைத் திருத்துவார்கள். விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருக்கும். படிப்பில் இடையிடையே தடைகள் வரும். இயற்பியல், வானவியல் பாடங்கள் இவர்களைக் கவரும். இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள். நினைத்தபடி அடைந்துவிடத் துடிப்பவர்கள்.

இவர்களில் சிலர் சற்று முன்கோபிகள். எல்லோருடனும் சிடுசிடுவென நடந்துகொள்வார்கள். ஆனாலும், கோபத்தை மனஸ்தாபத்தை விரைவிலேயே மறந்துவிடுவார்கள். காரசாரமான ஆந்திர வகை உணவுகளை விரும்பி உண்பார்கள். காவல் துறையிலும் ராணுவத்திலும் உயர் பதவி வகிக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்குக் கிடைக்கும். தற்பெருமையை அதிகம் விரும்புபவர்கள். தன்னைச் சார்ந்திருப்பவர்களை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். சின்னச்சின்ன விஷயத்துக்குக்கூட டென்ஷனாவதால் மன இறுக்கம் வரும். முப்பத்திரண்டு வயதிலிருந்து நாற்பத்தைந்து வயதுக்குள் சகல சௌபாக்கியங்களும் இவர்களுக்குக் கிட்டும்.

பரிகாரம்: நவமி திதிநாளில், செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருமலைவையாவூருக்குச் சென்று, ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் பெருகும்.

இரண்டாம் பாதம் (சந்திரன் + சுக்கிரன் + சுக்கிரன்)

இரண்டாம் பாதத்தில் நவாம்ச அதிபதியாக சுக்கிரன் இருப்பதால், இதில் பிறந்தவர்கள் சாத்விகக் குணமுடையவர்களாக இருப்பார்கள். எந்தச் சூழ்நிலையிலும் உண்மையும் மனதில் பட்டதை வெளிப்படையாகவும் பேசுவார்கள். இவர்களுடைய சுபாவத்தினால் விலைமதிக்க முடியாத பல நண்பர்களைப் பெறுவார்கள்.

படிப்பில் முதலிடம் பிடிப்பார்கள். ஓவியம், இசை, பாட்டுப் போட்டிகளில் வெல்வார்கள். கணிதம், வேதியியல், கணினித் துறைகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். பழகுவதற்கு மென்மையான குணமுடையவராக இருந்தாலும் எடுத்த காரியத்தை மன வலிமையோடு முடிப்பார்கள். இது, சுற்றியிருப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். மனதுக்குப் பிடித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்வார்கள்.

பக்தியிலும் தர்ம சிந்தனையிலும் சிறந்து விளங்கும் இவர்களுக்கு வேதம், சோதிடம் ஆகியவற்றிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. முடியவே முடியாது என்று மற்றவர்கள் ஒதுக்கிய காரியங்களைக்கூட இவர்கள் முடித்து வெற்றி காண்பார்கள். இருபத்தேழு வயதிலிருந்து எல்லா வளங்களும் பெறுவார்கள்.

பரிகாரம் சின்னக் காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் வரதராஜப் பெருமாளை சனிக்கிழமைகளில் சென்று வழிபடுவது நலம்.

மூன்றாம் பாதம் (சந்திரன் + சுக்கிரன் + புதன்)

புதன் தலைமை தாங்குகிறார். ஆதலால் சகிப்புத்தன்மை உடையவராக விளங்குவார்கள். யாருடைய உதவியுமின்றி சுய உழைப்பால் எதையும் சாதிப்பார்கள். எல்லாம் அறிந்திருந்தும் எதுவும் தெரியாததுபோல இருப்பார்கள். சிறு வயதிலேயே பெரிய சிந்தனைகளெல்லாம் தோன்றும். பல வகை சங்கீத வாத்தியங்களை வாசிக்கக் கற்று வைத்திருப்பார்கள்.

கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் இளமையிலிருந்தே திறமை இருக்கும். ஆசிரியர்கள் மெச்சும் மாணாக்கராக இருப்பார்கள். சிலருக்கு இடையில் படிப்புத் தடைப்படும். திரை இசைப் பாடல் எழுதும் கவிஞர்களாகப் பலர் மிளிர்வார்கள். இனிப்பு, பழவகைகளை அதிகம் விரும்பி உண்பார்கள். மனைவியை அனுசரித்துப் போவார்கள். பிள்ளைகளின் மேல் வாஞ்சையுடன் இருப்பார்கள். அறிவியல், கணிதம், மருத்துவம், சோதிடம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருப்பார்கள். மந்திர தந்திரங்களைத் தெரிந்துவைத்திருப்பார்கள். இவர்கள், சுகபோக வாழ்வை அனுபவிப்பவர்கள். அரசு, தனியார், வியாபாரம் என எந்தத் துறையானாலும் சரி, வித்தியாசமான அணுகுமுறையால் வெற்றிகளை எளிதாக ஈட்டுவார்கள். மறைமுக எதிரிகளின் திட்டங்களைப் போகிறபோக்கில் தவிடுபொடியாக்குவார்கள். முப்பது வயதிலிருந்து வாழ்வில் முன்னுக்கு வருவார்கள்.

பரிகாரம்:  இவர்கள் சனிக்கிழமைகளில், சென்னை நங்கநல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்கி வருவது சிறப்பு.

நான்காம் பாதம் (சந்திரன் + சுக்கிரன் + சந்திரன்)

நான்காம் பாதத்துக்கு சந்திரன் அதிபதியாக இருப்பதால் இதில் பிறந்தவர்கள் எதிலும் சமாதானத்தையே விரும்புவார்கள். அழகை ஆராதிப்பார்கள். காதல் மீது விருப்பம் கொண்டவர்கள். ஆதலால்  காதலர்களை ஒன்று சேர்ப்பார்கள். நீதி, நேர்மை, உண்மை இவற்றுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பார்த்த மாத்திரத்திலேயே எவரையும் மிகச் சரியாக எடைபோட்டுவிடும் வல்லமை படைத்தவர்கள்.

அவரவர் போக்குக்கேற்ப வளைந்துகொடுத்துப் பழகுவார்கள். இதனால் இவர்களைச் சுற்றி நண்பர் கூட்டமும் உற்றார் உறவினர் கூட்டமும் இருந்துகொண்டே இருக்கும். திரைத் துறை, தொலைக்காட்சி, வானொலி, நாடி சோதிடம், வங்கி, ஆடிட்டிங் ஆகிய துறைகளில் சாதனை புரிவார்கள். மனைவி, பிள்ளைகளை நேசிப்பார்கள். இவர்கள் சொன்னால் சரியாக இருக்குமென்று பிரச்னைக்குத் தீர்வுகாண பலரும் நாடி வருவார்கள். பூர்வீகச் சொத்து மற்றும் தாய் மாமன் வழிச் சொத்துகள் இவர்களைத் தேடி வரும். பங்குச் சந்தையிலும் வங்கி முதலீடுகளிலும் திடீர் யோகங்களை அடைவார்கள். பால் வகை உணவுகளை அதிகம் விரும்பி உண்பார்கள். முப்பத்து மூன்று வயதிலிருந்து செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள்.

பரிகாரம் மன்னார்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீவாசுதேவனையும் ஸ்ரீ ராஜகோபாலனையும் வழிபட்டு வந்தால் வாழ்க்கை வரமாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோதிட ரத்னா முனைவர்  கே.பி.வித்யாதரன்

நட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி!

ரோகிணி நட்சத்திரத்தில்...

பெ
ண் பார்த்தல், தாலிக்குப் பொன் உருக்குதல், வங்கிக் கணக்கு தொடங்குதல், பூ முடித்தல், கதிர் அறுத்தல், குழந்தையைத் தொட்டிலில் விடல், மாடு வாங்குதல், மருந்துண்ணல், புதிய ஆடை, ஆபரணம் அணிதல், குளம், கிணறு வெட்டுதல், வாசற்கால் வைத்தல், புத்தகம் வெளியிடுதல், புதிய வியாபாரம் தொடங்குதல், பல்லக்கு ஏறுதல், யாத்திரை செல்லுதல், புதுமனைப் புகுதல், விருந்துண்ணல், கல்வி கற்றல், பெயர் சூட்டு விழா, சீமந்தம், விவாகம், குடமுழுக்கு, நவகிரக சாந்தி, ஆயுதப் பிரயோகம், விதை விதைத்தல், உபநயனம் ஆகியவற்றுக்கு ரோகிணி உகந்தது.

பரிகார  ஹோம மந்திரம்

ப்ரஜாபதே ரோஹிணீ வேது பத்னீ 
விச்வரூபா ப்ருஹதீ சித்ரபானு:
ஸா நோ யஜ்ஞஸ்ய ஸுவிதே ததாது
யதா ஜீவேம சரத: ஸவீரா:
ரோஹிணீ தேவ்யுதகாத்புரஸ்தாத்
விச்வா ரூபாணி ப்ரதிமோதமானா 
ப்ரஜாபதிஹும் ஹவிஷா வர்த்தயந்தீ
ப்ரியா தேவானா முபயாது யஜ்ஞம்

நட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி!

வீட்டு மனை வாங்க ஏற்ற காலம்!

வீ
டு கட்டுவதற்கான மனை வாங்கும் காலம்... கடக லக்னமாக அமைவதும், அப்போது பரணி, விசாகம், அனுஷம் அல்லது அஸ்த நட்சத்திரம் பொருந்தியிருப்பதும் சிறப்பு. நவாம்சத்தில் லக்னத்தில் சூரியன், கேது இணைந்திருந்தாலும் சிறப்புதான்! அப்போது வாங்கும் இடம், வீடு ஆகியவை வாங்கியவரிடமே நிலைத்திருக்கும். வசிக்கும் இடத்துக்கு குறிப்பிட்ட திசைகளில் நிலம்  மனை வாங்குவதற்கு, குறிப்பிட்ட நட்சத்திர நாட்கள் விசேஷமானவை.

தெற்கு – மகம், சுவாதி, அஸ்தம், உத்திரம்.
மேற்கு – உத்திராடம், திருவோணம், மூலம்
வடக்கு – உத்திராடம், சித்திரை, சதயம்
கிழக்கு – ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம்

ரேவதி நட்சத்திரத்தன்று எந்தப் பகுதியிலும் நிலம்மனை வாங்கலாம். அதேபோன்று நகரங்களில் வாங்குவதற்கு அஸ்வினி, சித்திரை, ரேவதி நட்சத்திரங்கள் உகந்தவை. சித்தயோகம், அமிர்தயோக காலமானது கால்கோள் விழா எடுக்கவும், முதல் செங்கல்லை பதிக்கவும் ஏற்றது.

நட்சத்திர தேவதை : நான்முகன்.

வடிவம்    :  வண்டியைப் போன்று  
                  தோற்றமளிக்கும் ஐந்து  
                  நட்சத்திரங்களைக்
                  கொண்ட நட்சத்திரக் கூட்டம்.

எழுத்துகள்    : ஓ, வ, வி, வு.

ஆளும் உறுப்புகள்    :
முகம், வாய், நாக்கு, கழுத்து.

பார்வை    :
மேல்நோக்கு.

பாகை    : 40.00 - 53.20.

நிறம்    : மஞ்சள்.

இருப்பிடம்    : பட்டினம்.

கணம்    : மனித கணம்.

குணம்    : ஸ்திரம்.

பறவை    : ஆந்தை.

மிருகம்    : ஆண் நாகம்.

மரம்    : பாலுள்ள நாவல் மரம்.

மலர்    : தாமரை.

நாடி    : வாம பார்சுவ நாடி.

ஆகுதி    : நவ தானியங்கள்.

பஞ்சபூதம்    :
பூமி.

நைவேத்தியம்    : பால் சாதம்.

தெய்வம்    : ஸ்ரீகிருஷ்ணன்.

அதிர்ஷ்ட எண்கள் : 2, 7, 8.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, வெளிர் நீலம்.

அதிர்ஷ்ட திசை        : மேற்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : திங்கள், புதன்.

அதிர்ஷ்ட ரத்தினம் :
முத்து.

அதிர்ஷ்ட உலோகம் : வெள்ளி.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

ஸ்ரீகிருஷ்ணர், பீமன், ஆங்கீரஸ மகரிஷி, திருப்பாணாழ்வார், கபீர்தாசர், அன்னை தெரசா, இஸ்கான் அமைப்பாளர் சுவாமி ஸ்ரீபிரபுபாதர்.

சொல்ல வேண்டிய மந்திரம்


ஓம் தேவகீஸுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தனயம் கிருஷ்ண த்வமஹம் சரணம் கத
தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்தி கரோ ப்ரபு:
தேஹிமே தனயம் ஸுக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்