Published:Updated:

திருடுடப்பட்ட கரகம்.. கலங்கி நிற்கும் கிராம மக்கள்!

திருடுடப்பட்ட கரகம்.. கலங்கி நிற்கும் கிராம மக்கள்!
திருடுடப்பட்ட கரகம்.. கலங்கி நிற்கும் கிராம மக்கள்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த வேம்பள்ளி கோயிலின் விலையுயர்ந்த கரகத்தை கர்நாடகாவைச் சேர்ந்த கும்பல் திருடிச் சென்றிருக்கிறது. இதற்கு உடந்தையாக இருந்த பூசாரியையும், உள்ளூர் பிரமுகரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருடுடப்பட்ட கரகம்.. கலங்கி நிற்கும் கிராம மக்கள்!

கிருஷ்ணகிரி-ஓசூர் நெடுஞ்சாலையில் இருக்கிறது சூளகிரி. வனங்கள் அடர்ந்திருக்கும் இப்பகுதி வெவ்வேறு காலங்களில் கிருஷ்ணதேவராயர், திப்புசுல்தான் ஆகியோரது ஆளுகையில் இருந்திருக்கிறது. அதனால் இப்பகுதியில் அவ்வப்போது வரலாற்று எச்சங்களும், விலைமதிப்பு மிக்க பொருட்களும் அடிக்கடி கிடைப்பது வழக்கம். இதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாகவே புதையல் வேட்டை கும்பல் அடிக்கடி நாசவேலைகளை அரங்கேற்றம் செய்து வருகின்றனர்.

திருடுடப்பட்ட கரகம்.. கலங்கி நிற்கும் கிராம மக்கள்!

இந்நிலையில், சூளகிரி அருகேயுள்ள வேம்பள்ளி கிராமத்தில் கங்கம்மா கோயிலிலும் ஒரு கும்பல் பூசாரியின் உதவியோடு கைவரிசையை காட்டியிருக்கிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான கங்கம்மா கோயிலுக்கு அருகில் பெரிய பாறைகளின் அடியில் சுரங்க குகை ஒன்று இருக்கிறது. சுமார் 20 அடி நீளமுள்ள இந்த சுரங்கத்தில் தான் கங்கம்மா கோவிலுக்கு சொந்தமான கரகம் இருந்ததாம். பானையின் உள்ளே செம்பு, பஞ்சலோகம், தங்கம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கோயில் நகைகளை போட்டு வைப்பார்களாம். அதைத்தான் இப்பகுதி மக்கள் ‘கோயில் கரகம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

திருடுடப்பட்ட கரகம்.. கலங்கி நிற்கும் கிராம மக்கள்!

25 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுவட்டார மக்கள் ஒன்றுகூடி இந்த கோவிலில் திருவிழா நடத்துவது வழக்கம். திருவிழா நேரத்தில் பூசாரி மட்டும் சுரங்கத்தின் உள்ளே சென்று கரகத்தை எடுத்துவர.. அதை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து செல்வார்களாம். பிறகு நகைகளை அம்மனுக்கு பூட்டி அலங்காரம் செய்து திருவிழாவை முடித்துவிட்டு பழையபடியே சுரங்கத்தில் கரகத்தை வைத்து விடுவார்களாம். சுரங்கத்தின் உள்ளே சென்றுவரும் உரிமை பூசாரிக்கு மட்டும் தான் உண்டு. இரு திருவிழாக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை பூசாரி மட்டும் சுரங்கத்தின் உள்ளே சென்று கரகத்தை பார்த்து வந்து ஊர்மக்களிடன் நிலவரம் சொல்வாராம்.

திருடுடப்பட்ட கரகம்.. கலங்கி நிற்கும் கிராம மக்கள்!

இந்தக் கோயிலில் திருவிழா நடக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், ஊரிலுள்ள பலருக்கு கோயில் தொடர்பாக கெட்ட கனவுகள் வந்திருக்கிறது. எனவே பூசாரியை அழைத்துக்கொண்டு ஊர்மக்கள் சுரங்கத்தைப் பார்க்க சென்றிருக்கிறார்கள். அப்போது குகைப்பகுதி சிதிலமடைந்து கிடந்திருக்கிறது. அதனால் முக்கிய பிரமுகர்கள் சிலர் குகைக்குள் சென்று பார்த்தபோது அங்கே கரகம் இல்லை. அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள் விசாரணை மேற்கொண்டதில் கோயில் பூசாரி நாராயணனின் உடந்தையோடு மர்ம கும்பல் கரகத்தை திருடிச் சென்றது தெரியவந்திருக்கிறது.

##~~##
மேலும், உள்ளூரைச் சேர்ந்த முனிராஜ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருந்தது தெரியவர இருவரையும் ஊர்மக்கள் சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரித்தபோது, கரகத்தைச் திருடிச் சென்றது பெங்களூரைச் சேர்ந்த புதையல் தேடும் கும்பல் என்று தெரியவந்திருக்கிறது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். திருட்டு போன கரகத்தில் இருந்த கோயில் நகைகள் பல லட்சம் ரூபாய் விலைமதிப்பு கொண்டதாம். அதோடு கரகம் திருட்டுபோன சம்பவத்தை இப்பகுதி மக்கள் ஒரு தீய சகுனமாக கருதுகின்றனர். இதனால் ஊருக்கு ஏதேனும் கெடுதி நிகழுமோ என்றும் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் தற்போது, புதையல் எடுக்கும் கும்பல் நரபலி கொடுக்கவும் துணிந்து வருகின்றனர். இதனால் இப்பகுதியிலுள்ள குழந்தைகளுக்கும் ஆபத்து ஏதேனும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் அப்பகுதி மக்களை உலுக்கிக்கொண்டிருக்கிறது.
-எஸ்.ராஜாசெல்லம்