Published:Updated:

குழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்?

குழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
குழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்?

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

குழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்?

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

Published:Updated:
குழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
குழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்?

ந்த இதழ் முதல் வாசகர்களின் பிரத்யேகக் கேள்விகளுக்கான பதில்கள்...

? எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. என் ஜாதகத்தை ஆராய்ந்து விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

- எஸ்.கனகவல்லி, சென்னை -35

குழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்?

ஒரு ஜாதகத்தைப் பார்க்கும்போது கிரக நிலைகள், பாவம், பாவ அதிபதி, பாவ காரகன் என்று அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

1-வது வீட்டைப் பார்க்கும்போது சூரியனின் வலிமையையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். 2-வது வீட்டைப் பார்க்கும்போது குருவின் நிலையையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். அதேபோல், 3- வது வீட்டுக்கு செவ்வாய், 4-க்கு சந்திரன் மற்றும் புதன், 5-வது வீடு எனில் குரு, 6-வது எனில் சனி, 7-வது எனில் சுக்கிரன், 8-வது எனில் சனி, 9-வது எனில் குரு, 10-வது எனில் சூரியன், சனி, புதன், குரு, 11-வது வீடு எனில் குரு, 12-வது வீடு எனில் சனி என்று ஒவ்வொரு பாவத்துடன் மேற்சொன்ன கிரகத்தின் நிலையையும் வைத்துப் பரிசீலிக்கவேண்டும்.

சூரியன் நன்றாக இருந்தால், ‘மூர்த்தி, கீர்த்தி, ஸ்திதி’ என்று சொன்னபடி அனைத்து வசதி வாய்ப்புகளும் ஏற்படும். தங்களது ஜாதகம் துலா லக்ன ஜாதகம். லக்னத்துக்கு 5-ல் குரு அமர்ந்திருக்கிறார். புத்திர ஸ்தானத்தில் புத்திரகாரகன் குரு அமர்ந்திருப்பது தோஷமுள்ள அமைப்பாகும். மேலும், லக்னத்துக்கு 3 மற்றும் 6 ஆகிய மறைவு ஸ்தானத்துக்கு உரிய குரு 5-ல் இருப்பதும் தோஷம்தான். ஆனால், குருவுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால், குருமங்கள யோகம் என்ற அமைப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, தங்களுக்கு ஜாதகப்படி குழந்தை பாக்கியம் உண்டு; இரண்டு குழந்தைகளைப் பெறும் யோகம் உண்டு. வீட்டில் தினமும் முருகப் பெருமானுக்கு நெய்விளக்கு ஏற்றிவைத்து வழிபடுங்கள். சஷ்டி திதிகளில் சரக்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, சஷ்டிக் கவசம் படித்து வழிபடுங்கள், விரைவில் உங்கள் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும்.

? நான் வசதியான குடும்பத்தில் பிறந்தவன். ஆனால், குடும்பப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்ட பிறகு பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுகிறேன். என் கஷ்டங்கள் தீர வழி சொல்ல வேண்டுகிறேன்.

- ராமன், சென்னை - 24


ஜோதிட சாஸ்திரத்தில் குபேர யோகம் மற்றும் தரித்திர யோகம் என்று இரண்டு யோகங்களைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் 2-ம் வீட்டு அதிபதி 9-ல் இருப்பதும், 9-ம் வீட்டு அதிபதி 2-ல் இருப்பதும்; 2-ம் வீட்டு அதிபதி 11-ல் இருப்பதும், 11-ம் வீட்டு அதிபதி 2-ல் இருப்பதும் குபேர யோகத்தைக் குறிப்பிடுவதாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் எத்தகைய ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், செல்வம், செல்வாக்கு எல்லாம் தானே வந்து சேரும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்?

ஆனால், ஜாதகத்தில் 2, 4 ஆகிய வீடுகளில் அசுப கோள்களான ராகு, கேது, சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் அமைந்திருந்தால், அந்த ஜாதகம் தரித்ர யோக ஜாதகம் ஆகும். இவர்கள் செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும்கூட, பின்னர் வறுமை நிலைக்கு ஆளாகக் கூடும். ஆனால், செவ்வாய் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் தங்களின் சொந்த வீடு அல்லது உச்ச வீட்டில் அமர்ந்திருந்தாலும், 2 மற்றும் 4-ம் வீட்டில் அசுப கிரகங்கள் இருந்து, மேற்படி இடத்துக்கு சுப கிரகத்தின் பார்வை இருந்தாலும் மேற்படி தரித்ர யோகம் சுப யோகமாக மாறும். உங்கள் ஜாதகத்தில் 4-ல் இருக்கும் ராகுவை குரு பார்க்கிறார். ஆகவே, விரைவில் பிரச்னைகள் தீரும்.

வியாழக் கிழமைகளில் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று குருபகவானைத் தரிசித்து வழிபடுங்கள். இயன்ற தானங்களைச் செய்து வாருங்கள்; உங்களின் நிலை உயரும்.

? என் வயது 25. எனக்குத் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது. எனது ஜாதகத்தை ஆராய்ந்து, தக்க பரிகாரம் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்களேன்.

- நாகராஜன், பெங்களூரு


ஒருவருக்குத் திருமணம் நடைபெற குருபலம் அவசியம். அதேபோல், லக்னத்துக்கு 7-ம் அதிபதியின் தசை அல்லது புக்தி நடைபெறும்போது திருமணம் நடைபெறும். ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இடத்துக்கு கோசார சுக்கிரன் வரும் காலங்களில் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. மேலும், லக்னாதிபதி மற்றும் 7-ம் அதிபதிகளுக்கு உரிய ராசிகளில் குரு அமரும்போதும் திருமணம் நடைபெறும். 7-ம் வீட்டில் பாவ கிரகங்களான செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோர் இருந்தால் திருமணம் நடைபெறுவதில் தடை, தாமதம் ஏற்படவே செய்யும். ஆனால், 7-ல் இருக்கும் பாவ கிரகங்களுக்கு சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் தோஷம் நீங்கி, திருமணம் நடைபெறும்.

திருமணம் என்பதே வம்ச விருத்திக்காகத்தான். எனவே, புத்திரகாரகரான குருபகவான், 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களுக்கு வரும்போதோ, அல்லது அந்த இடங்களைப் பார்வை செய்யும் போதோ திருமணம் கூடிவரும். தாங்கள் கடக லக்னம், தனுசு ராசியில் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்துக்கு 7-ல் ராகு இருக்கிறார். ஆனால், லக்னத்தில் உச்சம் பெற்றிருக்கும் குருபகவான், ராகுவைப் பார்ப்பதால், 27 வயதுக்குப் பிறகு திருமணம் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளது; கவலை வேண்டாம்.

? கடந்த சில மாதங்களாக நிம்மதியே இல்லாமல் தவிக்கிறேன். மனது அடிக்கடி சஞ்சலப்படுகிறது. நான் என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

- இ.ராமு, மதுரை-3


செவ்வாய் காலபுருஷனின் 1 மற்றும் 8- வது வீடுகளுக்கு உரியவர். அவர் உலகத்தின் சேனாதிபதி - படைத் தளபதி. ரத்த வலிமை பெற்ற கிரகம். செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்றிருந்தால், செவ்வாய் தசை, புக்தி வரும் காலங்களிலும், மற்ற தசைகளில் செவ்வாய் புக்தி வரும் காலங்களிலும், மன அமைதி பாதிக்கப்படும்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசை, மற்றும் புக்தி நடைபெறும் காலங்களில் மன அமைதி பாதிக்கப்படும். உங்கள் ஜாதகப்படி புதன் தசையில் செவ்வாய் புக்தி தொடங்கி நான்கு மாதங்கள்தான் கடந்துள்ளன. இன்னும் ஏழு மாதங்களில் செவ்வாய் புக்தி முடிந்துவிடும். எனவே கவலை வேண்டாம். செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், விரைவில் மனநிம்மதி கிடைக்கும்.

- பதில்கள் தொடரும்...

படம் : சி.சுரேஷ்பாபு

குழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்?

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பானக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com