Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 14 -ஸ்ரீவிஜயீந்திரர்

திருவருள் செல்வர்கள்! - 14 -ஸ்ரீவிஜயீந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 14 -ஸ்ரீவிஜயீந்திரர்

திருவருள் செல்வர்கள்! - 14 -ஸ்ரீவிஜயீந்திரர்

திருவருள் செல்வர்கள்! - 14 -ஸ்ரீவிஜயீந்திரர்

திருவருள் செல்வர்கள்! - 14 -ஸ்ரீவிஜயீந்திரர்

Published:Updated:
திருவருள் செல்வர்கள்! - 14 -ஸ்ரீவிஜயீந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 14 -ஸ்ரீவிஜயீந்திரர்

கும்பகோணத்திலுள்ள திருக்கோயில்கள் அனைத்தையும் நிர்வகித்து வந்த மகாஞானியான ஸ்ரீசுவாமிகள் ஒருவர் தலைமை வகிக்க, அவரின் முன்னால் சார்ங்கபாணி கோயிலின் (அது சாரங்கபாணி ஆலயமல்ல; சார்ங்கபாணி ஆலயம் என்பதே சரி!) அர்ச்சகர்கள், அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கூடியிருந்தார்கள். அங்கே, சார்ங்கபாணி திருக்கோயிலின் வைபவ ஏற்பாடுகளைப் பற்றி, ஆலோசனை நடந்தது.

அந்தக் காலத்தில் இந்த ஸ்ரீசுவாமிகளின் புகழ் திக்கெட்டும் பரவியிருந்தது. இதையறிந்த கேரள ஜோதிடரான பிரபஞ்சனசர்மா என்பவர், ஸ்ரீசுவாமிகளுடன் போட்டிப்போட அந்தநேரம் பார்த்து அவையில் நுழைந்தார்.

ஜோதிடரும் சாதாரணமானவர் அல்ல. பல சமஸ்தானங்களில் ஆஸ்தான பண்டிதராக விளங்கியவர். அவருக்கென்னவோ, அன்றைய தினம் ஸ்ரீசுவாமிகளுடன் ஜோதிடத்தில் போட்டிப் போட வேண்டும் என்று தோன்றியிருந்தது. அவருடைய வேண்டுகோளை ஸ்ரீசுவாமிகளும் ஏற்றுக்கொண்டார்.

‘அன்றோ மறுநாளோ ஸ்ரீமடத்தில் நடக்கவுள்ள முக்கிய நிகழ்வுகளை இப்போதே எழுதிக்கொடுக்க வேண்டும். மறுநாள் மாலையில், சபையில் சரிபார்க்க வேண்டும்’ என்பதே போட்டி.
அதன்படியே ஸ்ரீசுவாமிகளும் ஜோதிடருமாக எழுதிக்கொடுக்க, அந்த விவரங்களைத் தனித் தனி பைகளில் போட்டுக் கட்டி, அரக்கு முத்திரை வைத்து,

பொறுப்பாக ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.

மறுநாள் காலை! தஞ்சை மன்னர் சிவப்ப நாயகர், தன் வாரிசுகள் இருவருடன் வந்து ஸ்ரீசுவாமிகளை தரிசித்தார். கூடவே, “மகா சுவாமி! தங்கள் ஆசீர்வாதத்தால் பிறந்த என் மகன், ஒரு நல்ல கிராமத்தைத் தங்களுக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறான்'' என்று கூறி, அறவல்லி மங்கலம் எனும் கிராமத்தைத் தானம் அளிப்பதற்கான சாசனத்தையும், மங்கலப்பொருள்களையும் சுவாமிகளின் முன் சமர்ப்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவருள் செல்வர்கள்! - 14 -ஸ்ரீவிஜயீந்திரர்

அவற்றைத் தன் திருக்கரங்களால் தொட்டு ஆசீர்வதித்த ஸ்ரீசுவாமிகள், மன்னரையும் அவரின் வாரிசுகளையும் வாழ்த்தி அருள்புரிந்தார்.

பூஜை முடிந்து தீர்த்தப்பிரசாதம் வழங்கப் பட்டு, அன்று மாலையில் சபை கூடியது. மன்னரும் அவரைச் சார்ந்தவர்களும் முன்னிலை வகிக்க, ஜோதிடரும் வந்திருந்தார். போட்டியின் முடிவை அறியும் ஆவலுடனும் பரபரப்புடனும் காணப்பட்டார்கள் அங்கிருந்தவர்கள். அரக்கு முத்திரை வைக்கப்பட்ட பை கொண்டு வரப்பட்டு, ஓலைகள் வெளியே எடுக்கப்பட்டன.

ஸ்ரீசுவாமிகளின் வாக்குப்படி, ஜோதிடரின் ஓலை முதலில் படிக்கப்பட்டது. அதில், ‘மறுநாள் காலை மன்னர் தானம் வழங்குவார்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சபையில் இருந்தவர்கள், ஜோதிடரை மனமாரப் பாராட்டினார்கள்.

அடுத்ததாக, ஸ்ரீசுவாமிகள் எழுதிய ஓலை படிக்கப்பட்டது. அதில், `நாளை காலை பூஜைக்கு முன்னால் தஞ்சை மன்னர் தன் வாரிசுகளோடு மூவராக வருவார். `அறவல்லி மங்கலம்’ எனும் கிராம  தானப் பட்டயத்துடன் காணிக்கைகளைச் சமர்ப்பிப்பார்’ என்றும், `இந்த ஓலை படிக்கப்படும் நேரத்தில், ஜோதிடரின் ஊரிலிருந்து வரும் நண்பர், ஜோதிடருக்குக் குழந்தை பிறந்திருக்கும் தகவலை அவரிடம் பகிர்ந்துகொள்வார்’ என்றும் எழுதப்பட்டிருந்தது.

அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்த வேளையில், வேதியர் ஒருவர் உள்ளே வந்து அனைவரையும் வணங்கினார். பிறகு ஜோதிடருக்குப் பிள்ளை பிறந்திருக்கும் தகவலை தெரியப்படுத்தினார். சபையோர் மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார்கள்!

திருவருள் செல்வர்கள்! - 14 -ஸ்ரீவிஜயீந்திரர்

ஸ்ரீசுவாமிகளோ, சற்றே முகம் வாடத்தொடங்கிய ஜோதிடரை அருகில் அழைத்து, அவருக்கு நிறைய சன்மானங்களை அளித்து, பெருமைப்படுத்தி அனுப்பினார்.  மனதளவிலும் எவரிடமும் எந்தக் குற்றமும் காணாத அந்த ஸ்ரீசுவாமிகள் யார் தெரியுமா?

ஸ்ரீவிஜயீந்திர சுவாமிகள்தான் அவர்!

திருவனந்தபுரத்தில் மந்திரவாதி ஒருவர், பலரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார். அவரின் பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் அச்சம் பிறக்கும்!

இந்நிலையில், ஸ்ரீவிஜயீந்திரர் அங்கு விஜயம் செய்தார். அதை அறிந்த மந்திரவாதி ஸ்ரீசுவாமிகளைத் தேடி வந்து, “என்னுடன் மந்திர வித்தையில் போட்டியிட முடியுமா?” என்று ஸ்ரீசுவாமிகளைச் சவாலுக்கு அழைத்தார். அவரின் செயல் கண்டு, அங்கு குழுமியிருந்த பக்தர்கள் மனம் குமுறினார்கள். ஆனால் ஸ்ரீசுவாமிகளோ மிகவும் சாந்தமாக, “நாளை மாலை வைத்துக்கொள்ளலாம் போட்டியை” என்றார்.

தகவல் அறிந்த திருவனந்தபுரத்து அரசாங்க அதிகாரிகள், பதறிப்போய் ஓடி வந்தார்கள். மந்திரவாதியால் மகானுக்கு  ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று அவர்கள் பயந்தார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய ஸ்ரீசுவாமிகள், “பயப்படாதீர்கள்! ஓர் ஆபத்தும் வராது. நாம் தங்கியிருக்கும் இந்த இடத்துக்கு வெளியே, அரங்கம் அமையுங்கள். மக்கள் எல்லோரும் சுற்றி உட்கார்ந்து, வேடிக்கை பார்க்கட்டும். சரியான நேரத்தில் நாம் வருவோம்” என்றார்.

அதிகாரிகளும் அப்படியே ஏற்பாடுகளைச் செய்தார்கள். மறுநாள் மாலையில் அதிகாரிகளும் பொதுமக்களுமாகக் கூடினார்கள்.

மந்திரவாதியும் வந்துசேர்ந்தார். நெற்றியில் பெரிய சந்தனப்பொட்டு. அதன்மீதே, அதில் முக்கால்பங்கு அளவுக்கு ரத்தச் சிவப்பில் குங்குமப்பொட்டு. கழுத்தில் செந்நிற மலர்மாலை, இடையில் சிவப்பாடை, செக்கச்செவேலெனத் துருத்திய கண்கள்... என அந்த மந்திரவாதியின் தோற்றமே பயத்தைக் கொடுத்தது.


- திருவருள் பெருகும்..

 சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன் படங்கள்: ம.அரவிந்த்