காசியில் தீபாவளியன்று அன்னபூரணியைத் தரிசிப்பது மிகவும் விசேஷம். காசிக்குச் செல்லா விட்டாலும், அனுதினமும் அன்னபூரணியின் அருளைப்பெற அற்புதமான வழி ஒன்று உண்டு. ஆம், அன்னதானம் செய்வதன் மூலம் நமக்கு எப்போது வேண்டுமானாலும் அன்னபூரணியின் திருவருள் கிடைக்கும்.

ஆனால், `கடனே' என்று அன்னதானம் செய்யக்கூடாது. அன்னதானசிவன் செய்ததுபோல் ஆத்மார்த்தமாக அன்னதானம் செய்யவேண்டும்.

யார் அந்த அன்னதான சிவன்?

கும்பகோணத்தை அடுத்துள்ள தேப்பெருமா நல்லூர் என்ற ஊரில் 1850-களின் தொடக்கத்தில் பிறந்தவர் அன்னதான சிவன். அவருடைய இயற்பெயர் இராமஸ்வாமி; சிறு வயதிலேயே பக்திமானாகத் திகழ்ந்தவர்.

பிற்காலத்தில், தம் சொத்துகளை விற்றும், மற்றவர்களிடம் நன்கொடை பெற்றும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்தவர். இதன் காரணமாகவே இயற்பெயர் மறைந்து, அவருக்கு அன்னதானசிவன் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது.

1909-ம் வருடம் காஞ்சிப் பெரியவர் கும்பகோணம் மடத்தில் எழுந்தருளினார். அப்போது நம் சுவாமிகளுக்கு வயது 15. அந்த வருடம் கும்பகோணம் மகாமக விழாவின்போது, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அன்னதான சிவன் அன்னதானம் வழங்கினார். அந்த உன்னதப் பணியை காஞ்சி பெரியவர் வெகுவாக சிலாகித்துப் பேசவும் செய்தார்.

அன்னதானசிவனும் காஞ்சிப் பெரியவரிடம் அளப்பரிய பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். ஒருமுறை, காஞ்சிப் பெரியவர் நீண்ட உபவாசம் மேற்கொண்டிருந்த வேளையில், அவருக்கு அன்னதான சிவன் ஒரு கடிதம் எழுதினார். அதில், சுவாமிகள் நீண்ட உபவாசம் மேற்கொள்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சுவாமிகள் நன்றாக இருந்தால்தான், அவரை நாடி வரும் பக்தர்களுக்காக பிரார்த்தனை செய்து அருள்புரிய முடியும் என்று கேட்டுக்கொண்டாராம். அந்த அளவுக்குக் காஞ்சிப் பெரியவரிடம் உரிமை எடுத்துக்கொண்டவர் அன்னதானசிவன்.

பிற்காலத்தில் கும்பகோணத்தை அடுத்துள்ள அரியதிடல் அண்ணல் அக்கிரகாரம் என்ற பகுதியில் மடம் அமைத்து தங்கினார் அன்னதான சிவன். அப்போது, அருகிலிருந்த சுந்தரேஸ்வரர் கோயிலுக்குத் தினமும் சென்று வழிபடுவதையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதையும் செய்து வந்தார். அந்த ஆலயத்தில் வீற்றிருந்த அன்னை மீனாட்சி, ஒருமுறை அவருக்கு அன்னபூரணியாகத் திருக்காட்சி வழங்கினாளாம்!

அவருடைய மறைவு பற்றிக் கேள்விப்பட்ட காஞ்சிப் பெரியவர், ‘அன்னதானசிவன் இல்லறத்தில் இருந்தாலும் அனைத்தையும் துறந்து பற்றற்று வாழ்ந்தவர். அவர் செய்த அன்னதானத்தின் பலனாக அவருக்கு நிச்சயம் சொர்க்கம்தான் ஸித்தித்திருக்கும்’ என்றதுடன், அன்னதானசிவனின் ஆத்மசாந்திக்காக கோயில் களில் மோட்ச தீபம் ஏற்றவும் உத்தரவிட்டார்.

இங்ஙனம், அன்னதானத்தின் மகிமையால் காஞ்சிப் பெரியவரின் கருணைத்திறத்துக்குப் பாத்திரமான அன்னதான சிவன் வழிபட்டு, அன்னபூரணியின் தரிசனம் பெற்ற ஆலயத்தில் திருப்பணி நடைபெறுகிறது என்று கேள்விப்பட்டு, அந்த ஆலயத்தைத் தரிசிக்கச் சென்றோம்.

பசிப் பிணியே அணுகாது!

நாம் அங்கே சென்றபோது, ஒரு செங்கற் கட்டடத்தில் இருந்த சிவலிங்க மூர்த்தத்துக்கு சில பெண்கள் ஒன்று சேர்ந்து பூஜை செய்து கொண்டிருந்தனர். பூஜைகள் முடிந்ததும் கோயில் பற்றிய விவரம் கேட்டோம்.

அவர்களில் ஒருவர் தம்மை அன்புச்செல்வி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நம்மிடம் பேசத் தொடங்கினார்.

‘`இந்த ஊரில் முற்காலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்திருந்தது. எப்போது யார் கட்டியது என்று தெரியாது. இந்தக் கோயிலுக்கு அருகில்தான் அன்னதானசிவன் ஒரு மடம் அமைத்துக்கொண்டு, தினமும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டதுடன், அன்னதானமும் செய்து வந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு ரமணரின் சீடர்களில் ஒருவரான சுவாமி சதானந்தர் என்பவர், மடத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அன்னதானம் செய்து வந்தார். பின்னர், கோயிலும் சரி, அன்னதானசிவன் மடமும் சரி சிதிலமடைந்துவிட்டன. சுவாமி, அம்மன் சிலைகள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன.

2007-ம் வருடம், மடத்துக்குப் பக்கத்திலிருந்த ருத்ரமாகாளியம்மன் கோயிலுக்குப் பூஜை செய்யப் போனபோதுதான், எங்களுக்குத் தெரிந்த பெண் ஒருவர், அன்னதானமடத்துக்குப் பக்கத்தில் சிவலிங்கம், அம்மன் சிலைகள் எல்லாம் மண்ணுக்குள் புதைந்திருக்கும் விஷயத்தை எங்களிடம் கூறியதுடன், வெளியில் எடுத்து வழிபட்டால், ஊர் செழிக்கும் என்றும் கூறினார்.

முறைப்படி அனுமதி பெற்று மண்ணுக்குள் மறைந்திருந்த சிவலிங்கத்தையும், அம்மன் சிலையையும் வெளியில் எடுத்தோம். ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் வந்து பூஜை செய்ததுடன், ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் கோயில் கட்டும்படிக் கூறினார். அதன்படி நான், மங்களத்தம்மாள், திலகவதி, காமாட்சி சேர்ந்து ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் கோயில் திருப்பணிகளைத் தொடங்கினோம்.

கோயிலையும் அன்னதான மடத்தையும் புதுப்பித்துக் கட்டி, கோயிலில் அன்றாட பூஜைக ளும், அன்னதான மடத்தில் விழாக் காலங்களிலாவது அன்னதானமும் செய்யவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இக்கோயிலுக்கு அன்னதானம் நடைபெற்று வந்ததால், இங்குள்ள இறைவனை வழிபட்டால் பசிப்பிணியே அணுகாது என்பது ஐதீகம்’’ என்றார்.

நான்கு பெண்கள் முன்னின்று ஐயனின் திருக்கோயில் பணிகளில் ஈடுபட்டிருந்ததைக் காணும்போது, ‘அன்னபூரணியாக அன்னதான சிவனுக்கு தரிசனம் தந்த அந்த மீனாட்சி அம்பிகையே அவர்களுக்குள் எழுந்தருளி, கோயில் திருப்பணிகளைத் தொடங்கச் செய்திருக்கிறாள்’ என்ற எண்ணம்தான் நமக்குள் ஏற்பட்டது.

ஐயனின் திருக்கோயில் மற்றும் அன்னதான சிவன் மடத்தின் திருப்பணிகள் நல்லபடி நிறைவு பெற்று, முறையே நித்ய பூஜைகளும், அன்னதானமும் சிறப்புடன் நடைபெறவேண்டும் என்பதுதான் ஊர்மக்களின் விருப்பம். அவர்களின் உன்னதமான விருப்பம் நிறைவேற, நாமும் தோள்கொடுப்போம்; நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்வோம்.

இந்த மகத்தான பணியால் இறையருளோடு மகான் அன்னதானசிவனின் ஆசியும் ஒருங்கே கிடைக்கும். அப்படியான வரப்பயனால், நம் இல்லம் செழித்தோங்கும்; நம் சந்ததியின் எதிர்காலம் சிறக்கும்.

- எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: க.சதீஸ்குமார்

வங்கிக் கணக்கு விவரம்:
ANNADHANA SIVANKOIL AND SREE RUTHRAMAGA KALIYAMMAN ARAKKATTALAI NO 457/1
A/C NO. 500101011084163
Bank Name: City Union Bank,
Annalagraharam Branch
IFSC Code: CIUB0000408
தொடர்புக்கு: அன்புச்செல்வி, செல்: 09003728652

எப்படிச் செல்வது:
கும்பகோணம் மகாமக குளத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள அண்ணலக்ரஹாரம் பெண்கள் கல்லூரிக்கு அருகிலுள்ளது ஆலயம். பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.