Published:Updated:

‘அம்பிகை கண் மலர்ந்தாள்!’

‘அம்பிகை கண் மலர்ந்தாள்!’
பிரீமியம் ஸ்டோரி
‘அம்பிகை கண் மலர்ந்தாள்!’

வாசகர் இறையனுபவம்...

‘அம்பிகை கண் மலர்ந்தாள்!’

வாசகர் இறையனுபவம்...

Published:Updated:
‘அம்பிகை கண் மலர்ந்தாள்!’
பிரீமியம் ஸ்டோரி
‘அம்பிகை கண் மலர்ந்தாள்!’

து 1964-ம் ஆண்டு. கும்பகோணம் சார்ங்கபாணி சந்நிதித் தெருவில் வசித்து வந்தோம். தோட்டம், துரவு என்று பெரிய வீடு. தாத்தா, பாட்டி, அத்தைகள், சித்தப்பா, சித்திகள் என எங்கள் குடும்பமும் பெரியது.

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகையும், கனகாம்பரமும் பூத்துக்குலுங்கும். கனகாம்பரம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த ஆண்டு புரட்டாசி மாத ஆரம்பத்தில், எங்கள் வீட்டுக் குழந்தைகளை அம்மை நோய் தாக்கத் தொடங்கியது. ஒவ்வொருவராக மாற்றி மாற்றி அவஸ்தைப்பட்டார்கள்.  என் தாத்தா, அம்மை போட்ட வீடுகளில் கடைப்பிடிக்கப்படும் எல்லா நியதிகளையும் எங்கள் விட்டில் கண்டிப்போடு செயல்படுத்தி வந்தார்.

‘அம்பிகை கண் மலர்ந்தாள்!’

எங்கள் வீட்டுத் தோட்டத்திலோ கனகாம்பரம் பூக்கள் பூத்து கண்ணைக் கவர்ந்தன. ஆனால், அந்தநேரம் என் தம்பிக்கு அம்மை போட்டிருந்ததால், `தலையில் பூச்சூடக் கூடாது' என்று அம்மா தடைபோட்டுவிட்டார்கள்.

சிறு பெண்ணான எனக்கோ கோபமான கோபம். பாட்டியிடம் ‘`அம்மா இப்படி ஏன் பண்ணுகிறார். இந்த சீசன் போய்விட்டால், கனகாம்பரம் பூக்கள் பூப்பது நின்றுவிடுமே. பிறகு எப்போது நான் பூச்சூடிக்கொள்வது’' என்று கத்தித் தீர்த்துவிட்டேன்.

`‘அம்மை போட்ட வீட்டில் பெண்கள் பூச்சூடிக்கொள்ளக் கூடாது'' என்று பாட்டி எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள். ஆனால், நான் கோபம் அடங்காமல் தம்பியையும், அம்மனையும் திட்டியபடி தூங்கி விட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மறுநாள் காலை என் பிரியத்துக்குரிய அன்புத் தம்பி கண்ணே திறக்கவில்லை. அம்மை நோயின் தாக்கம் தீவிரமாகியது.அம்மைக் கொப்புளங்கள் சிவந்து உடல் முழுவதும் அனலாக தகித்தது. பாட்டியும் அம்மாவும் தம்பியின் அருகிலேயே அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள். நேரம் செல்லச் செல்ல எனக்கும் பயமாகிவிட்டது.

`‘பாட்டி, தம்பி எப்போது கண்ணைத் திறப்பான்? அம்மன் கோபித்துக் கொண்டு விட்டாளா?'’ என்று கேட்டேன். `‘பூச்சூட வேண்டும் என்று புலம்பினாயே,  பூ எப்போது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் தம்பி? உன் தம்பி கண்ணைத் திறக்க வேண்டுமானால், அந்த அம்பிகை கண்ணைத் திறக்க வேண்டும். அம்பாளைத் திட்டிய நீயே அவளிடம் வேண்டிக்கொள்'’ என்றார்.

நானும் என் தம்பி சேகர் குணமாக வேண்டும் என்று மனதார அம்மனிடம் வேண்டிக் கொண்டேன்.

‘இனிமேல் கனகாம்பரமே சூடிக்கொள்ளமாட்டேன், என் தம்பியை எனக்குக் கொடுத்துவிடு’ என்று சங்கல்பித்துக்கொண்டேன்.

‘அம்பிகை கண் மலர்ந்தாள்!’

வேண்டுவோர்க்கு மனமிறங்கும் அந்த வேப்பிலைக்காரி, என்னை மன்னித்து என் தம்பியையும் மறுநாளே குணப்படுத்திவிட்டாள்.

ஐம்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும் இன்றும் கனகாம்பரம் மலர்களைப் பார்க்கும்போதெல்லாம் என் தம்பியின் நினைவு வந்துவிடும். இன்று வரை நான் கனகாம்பரம் மலர்களைச் சூட்டிக் கொண்டதே இல்லை.

சிறுமியான எனது வேண்டுதலுக்குச் செவிசாய்த்து அருள்செய்த கருமாரியம்மன் இன்றும் என்னையும் எங்கள் குடும்பத்தையும் காத்துவருகிறாள் என்றே நம்புகிறேன்.

- மாலதி நாராயணன், சென்னை-87

தியானத்தில் சண்டிகேஸ்வரி!

கே
ரளாவில் பிரசித்திபெற்று விளங்கும் கொடுங்கலூர் ஸ்ரீபகவதி அம்மன் கோயிலில், காவல் தெய்வமாக அருள்கிறாள் ஸ்ரீசண்டிகேஸ்வரி. சிவாலயத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் எப்போதும் சிவ தியானத்தில் இருப்பதுபோல், இங்கே ஸ்ரீசண்டிகேஸ்வரியும் பகவதியை தியானித்தபடியே இருக்கிறாள் என்பது ஐதீகம். இவளுக்குத் தினந்தோறும் தவிட்டால் அபிஷேகம் செய்யப்படுவது விசேஷம். காசநோயால் பாதிக்கப்பட்ட அன்பர்கள், இந்த சண்டிகேஸ்வரிக்குத் தவிடு அபிஷேகம் செய்து வழிபட்டால், விரைவில் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.

பன்னகாபரணன்...

சி
வபெருமானுக்கு `பன்னகாபரணன்' என்றொரு திருநாமமும் உண்டு. தாருகாவனத்து முனிவர்களின் அகந்தையை அடக்க சிவனார் வந்தபோது, அந்த முனிவர்கள் ஏவிய நாகங்களை அன்போடு ஏற்றுக்கொண்டு தனது ஆபரணமாக்கிக் கொண்டாராம். இப்படிப் பாம்புகளை ஆபரணமாக்கிக்கொண்டதால், பரமனுக்கு `பன்னகாபரணன்' என்ற திருநாமம் வந்ததாகச் சொல்கின்றன ஞானநூல்கள்.

- ஆர். பத்மபிரியா, திருச்சி