குருவாயூர் திருக்கோயிலுக்கு வெளியே பல்லக்கில் வலம் வந்து கொண்டிருந்தான் ஸ்ரீகுருவாயூரப்பன்.சட்டென்று ஓரிடத்தில் பல்லக்கு நகரமுடியாமல் நின்றது!

கண்ணுக்குப்புலப்படாத ஏதோ காரணத்தால் பல்லக்கு நகர மறுக்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த நாராயணப் பட்டத்தி கவலையானார்.

அவர் அருகிலிருந்த பூந்தானமோ வித்தியாசமாகக் குரல் எழுப்பி அப்பனை வணங்கினார். அதேநேரம், குருவாயூரப்பனின் சந்நிதி அர்ச்சகர் கண்ணீர்மல்க ஓடிவந்து, `‘அன்பர்களே, மூலவருக்கு நான் அர்ச்சனை செய்யும்போது, திடீரென கண்ணன் மகிஷ (எருமை) வடிவில் தரிசனம் காட்டினான். அத்துடன், `ஊர்வலத்தின் வழியில் எனது கொம்புகள் சிக்கி, பல்லக்கு நகரமுடியாமல் தவிக்கிறது. பூந்தானத்திடம் சொல்லி நகர வை’ என்று ஆணையிட்டான்'' என்றார்.

எல்லோரும் திடுக்கிட்டார்கள்!

அழகே உருவான கண்ணன் மகிஷ வடிவிலா என்று உற்றுப்பார்த்தார்கள். பூந்தானம் மட்டும் கண்ணனை மகிஷ வடிவில் பார்த்து வணங்கிக்கொண்டே இருந்தார். அவருக்கு `தரிசனம் போதும்' என்று தோன்றிய கணம் பல்லக்கு நகர்ந்தது! பக்தர்கள் பரவசப்பட்டனர்.

ஏன் இந்த லீலை?

`நாராயணீய' காவியம் எழுதிய பட்டத்திரிக்கு தனது புலமை குறித்து கர்வம் உண்டானது. அதனால் தன்னை மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்ட பூந்தானத்தைக் கண்டால் அவருக்கு இளப்பம். ஒருமுறை, நாராயணீயத்தைக் கேட்டு கண்ணீர் வடித்த பூந்தானத்தை, ‘உனக்கு என்ன புரிகிறது என்று கண்ணீர் வடிக்கிறாய்’ என்று கேலி பேசினார்.

அப்போது, ‘`புரிவதாவது? நாராயணின் திருநாமத்தைக் கேட்டாலே போதுமே!’' என்று பதில் தந்து, பட்டத்திரியை வியக்க வைத்தார் பூந்தானம்.

ஒருமுறை குருவான பட்டத்திரியிடம் ‘தியானத்தில் கண்ணனின் மயிற்பீலியும் , குழலும் மட்டுமே வருகின்றன. அவனின் முழு வடிவமும் தோன்ற என்ன செய்யவேண்டும்’ என்று அப்பாவியாகக் கேட்டார் பூந்தானம். பட்டத்திரியோ, ‘உனக்குத் தெரிந்த வடிவில், அதாவது ஒரு எருமையைக் கண்ணனாக பாவித்துத் தியானி, கண்ணன் தெரிவான்’ என்று கேலியாகச் சொன்னார்.

குருநாதர் சொன்னால் மறுப்பாரா பூந்தானம்?! அன்றிலிருந்து எருமையின் வடிவிலேயே கண்ணனைத் தியானித்துத் தொழுதார். கண்ணனும் சேறு பூசிக்கொண்ட மகிஷ வடிவில் தோன்றி அருள்செய்தாராம்!

மச்சம் முதலான பல அவதாரங்களை எடுத்த பகவான், பூந்தானத்துக்காக தினமும் மகிஷ வடிவத்தைக் காட்டி அருளினார். பூந்தானத்தின் பக்தியின் மாண்பை உலகறியச் செய்யவே இப்படியொரு லீலை நடத்தினார் என்பார்கள் ஆன்றோர்கள்.

இது நடந்தது ஒரு தீபாவளித் திருநாளில் என்றும் சொல்வார்கள்.

நாமும் நம் உள்ளத்தைக் காணிக்கை ஆக்கி, நம்மையே சமர்ப்பிப்போம். எப்போதும் நம்முடனிருந்து காப்பார் ஸ்ரீகுருவாயூரப்பன்.

- மு. ஹரி காமராஜ்