கயிலாயத்தில் ஒரு நாள் உமையவள், பரமனின் இரு கண்களை, இரண்டு நாழிகை நேரம் பொத்தியதால், சகல உலகங்களும் இருண்டன. பின்னர் தேவி, தன் கரங்களை நீக்கியபோது, தம் மேனியின் நிறம் மாறுபட்டிருந்ததை அறிந்து திடுக்கிட்டாள். இதுகுறித்து பரமனிடம் அவள் கேட்டபோது, ‘‘நீ என்னுடைய கண்களை மூடியதால் ஏற்பட்ட பாவங்களின் திரட்சி இது’’ என்றார்.

‘‘இதற்கு என்ன பரிகாரம்?’’ எனக் கேட்டாள் அன்னை.

‘‘பத்ரிகாசிரமம் சென்று, குழந்தை வடிவில் காத்திரு. அங்கு வரும் காத்தியாயன முனிவர் உன்னை தனது ஆசிரமத்துக்குக் கொண்டு போய் எட்டு ஆண்டுகள் வளர்ப்பார். பிறகு அவர் தரும் யோக தண்டம், ஜப மாலை, தீப ஸ்தம்பம், இரண்டு குடங்கள், விசிறி, பலகை, வியாக்ராசனம், புத்தகம், வறுத்த பயறு, கங்கை மணல் மற்றும் தீர்த்தம், குடை ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு வறுமையில் தவிக்கும் காசிக்குச் சென்று அன்ன தானம் செய். உனது குறை தீரும்’’ என்று அருளினார் பரமன். அதன்படி 12 ஆண்டுகள் அன்னதானம் செய்து அன்னபூரணி என்று பெயர் பெற்றாள் அம்பிகை.

காசியில் தேவதத்தன், தனஞ்செயன் என்ற சகோதரர்கள் இருந்தனர். தேவதத்தன் பணக்காரன்; தனஞ்செயனோ ஏழை. ஒரு நாள் மணிகர்ணிகை துறையில் நீராடி, விஸ்வேஸ்வரர்- விசாலாட்சியை தரிசித்துவிட்டு, பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்து, தன்னை அன்னதோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தபடி இருந்த தனஞ்செயன் அப்படியே உறங்கிப்போனான்.

அப்போது அவனது கனவில், சந்நியாசி ஒருவர் காட்சி தந்து, ‘‘தனஞ்செயா, முன்பு காஞ்சியில் சத்ருதர்மன் என்ற ராஜகுமாரன் இருந்தான். அவன் தோழன் ஹேரம்பன். ஒரு முறை வேட்டைக்குச் சென்ற அவர்கள், காட்டில் வழி தவறி பசியால் பரிதவித்தனர். அப்போது முனிவர் ஒருவர், அவர்களைத் தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று உபசரித்தார்.

முனிவர் வழங்கிய அன்னம் சத்ருதர்மனுக்கு அமுதமாகத் தித்தித்தது.

ஹேரம்பனுக்கோ, அது அற்பமாகத் தோன்றியது. எனவே, சிறிதளவு உண்டபின் மீதியை எறிந்துவிட்டான்.

அப்படி அன்னத்தை அவமானப் படுத்தியதாலேயே ஹேரம்பனான நீ இப்போது தனஞ்செயனாகியிருக்கிறாய். சத்ருதர்மன், தேவதத்தனாகி செல்வ வளம் பெற்றுள்ளான்.

நீ நேம நியமங்கள் வழுவாமல் விரதமிருந்து அன்னபூரணியைச் சரணடைந்து ஆராதித்தால் உனது அன்னதோஷ நிலை மாறி அவள் அருள் பெறலாம்!’’ என்றார்.

அதன்பின் தனஞ்செயன் அன்ன பூரணி விரத நேம நியமங்களை விசாரித்தபடி, காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு மலையடிவார ஏரிக்கரை ஒன்றில் தேவ கன்னியர்கள், பூஜையில் ஈடுபட்டி ருந்தனர். அவர்களை அணுகி, யாரைப் பூஜிக்கிறார்கள் என்று கேட்டான்.

பிரம்மனின் தலையைக் கொய்ததால், பிரம்மஹத்தி பீடித்த சிவனின் பசிப்பிணி அகல, பரமசிவன் கையிலுள்ள கபாலத்தில் அன்னபூரணி அவதாரம் எடுத்து, ஆதிசக்தி அன்னமிட்டு கபாலத்தை நிரப்பினாள். அதனால் ஈசனின் பிரம்மஹத்தி நீங்கியது. அப்படிப்பட்ட அன்னபூரணியை ஆராதிக்கிறோம் என்றனர் அவர்கள். மேலும் அவர்கள் தனஞ்செயனுக்கு விரதமுறைகளை விளக்கினர்.

அதன்படி விரதமிருந்து அன்னபூரணி யின் அருள்பெற்றான் தனஞ்செயன்.

‘‘இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்களுக்கு, அன்னத்துக்குக் குறைவிருக்காது. உனக்கு அருள்பாலிக்க நான் காசிக்கே வருகிறேன். ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பினால், நான் அங்கு வந்து அமர்கிறேன்!’’ என்றாள்.

அன்னையின் அருளால் வற்றாத செல்வ போகம் பெற்ற தனஞ்செயன், எழுப்பியதே அருள்மிகு அன்னபூரணி ஆலயம், என்கின்றன ஞானநூல்கள்.

தீபாவளி தினத்தன்று அன்னபூரணிக்கு, தங்கக் குத்து விளக்கு ஏற்றுவார்கள். தொடர்ந்து ஈசுவரனுக்குத் தங்கக் கரண்டியில் அன்னை அன்னம் வழங்கும் வைபவம் நடைபெறும்.

தீபாவளிக்கு முந்தைய ‘தன திரயோதசி’ அன்று தங்க அன்னபூரணிக்கு பூஜைகள் உண்டு. ஆனால், அன்று திரை போட்டு விடுவதால், அம்பிகையை தரிசிக்க இயலாது. மறு நாளான ‘சோடி தீபாவளி’ அன்று தரிசனம் கிடைக்கும். அன்று பொரியுடன் பத்து பைசா நாணயம் பிரசாதமாக அளிக்கப்படும். இதனால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

தீபாவளியன்று அன்னபூரணிக்கு குபேர பூஜை மற்றும் ‘அன்னகூட்’ வைபவம் நடைபெறுகிறது. அன்னையின் முன்னால் அன்னத்தை மலை போல் குவித்து வைப்பதுடன், முப்பது பெரிய தட்டுகளில் பல வித இனிப்புப் பண்டங்களையும் வைத்துப் படைப்பர்.

இறைவனுக்கு அன்னமிட்ட பின்னர், அந்த இனிப்புப் பண்டங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதை ‘மிட்டாய்த் திருவிழா’ என்றும் கூறுவர். அன்று மக்கள் கங்கா ஸ்நானம் செய்துவிட்டு, அன்னபூரணியை தரிசிக்கின்றனர். இதனால் சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.

தீபாவளி நாளில் லட்டுகளாலான திருத் தேரில் அன்னபூரணி பவனி வரும் காட்சி தரிசிக்க வேண்டிய ஒன்று. தீபாவளிக்கு மறுநாள் சகல விதமான தன தானிய சம்பத்து களை அளிக்கும் தேவிக்கு லட்சுமி பூஜை செய்து வழிபடுகின்றனர்.

அலைமகள் அவதரித்தாள்...

தீபாவளியை முதன்முதலாகக் கொண்டாடியவன், நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றன புராணங்கள்.

தமிழகத்தில் சோழர் காலம் வரை தீபாவளி கொண்டாடப்படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில் முதன்முதலாக தீபாவளி கொண்டாடப்பட்டது!

ஸ்ரீதேவி மற்றும் மூதேவி ஆகியோர் பாற்கடலில் தோன்றியதும் அவர்களை முறையே மகாவிஷ்ணுவும், உத்தாலக முனிவரும் மணந்தது தீபாவளியில் என்பர். அதேபோல், வாமன அவதாரம் எடுத்து வந்த மகாவிஷ்ணு, மகா பலியிடம் மூன்றடி நிலம் தானம் பெற்று... மூவுலகையும் அளந்து... அவனது கர்வத்தை அடக்கிய திருநாள் தீபாவளி என்றும் சொல்வர்.

காஷ்மீர் மக்கள் தீபாவளியன்று ‘கோ பூஜை’ செய்கின்றனர். குஜராத் மாநிலத்தில் புதுக் கணக்கு துவங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

வாரணாசியில், ‘கார்த்திகை பூர்ணிமா’ என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப் படுகிறது.

தீபாவளி திருநாளிலேயே ஆதிசங்கரர் தனது ஞான பீடத்தை ஏற்படுத்தினாராம். புத்தபிரான் முக்தி அடைந்த நாளாக பௌத்தர்களும், மகாவீரர் முக்தி அடைந்த நாளாக ஜைனர்களும் தீபாவளித் திருநாளை அனுஷ்டிக்கிறார்கள்.